நண்பர் மனைவியுடன் பாலியல் உறவில் WWE ஹல்க் .. திவாலான மீடியா.. ஹல்க் மறைவை கொண்டாடிய பெண் எழுத்தாளர்.. பரபரப்பு தகவல்கள்..!

புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், 71 வயதில் காலமான நிலையில் அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒரு பெண் அவரது மறைவை கொண்டாடி எக்ஸ் தளத்தில்…

hulk

புகழ்பெற்ற மல்யுத்த வீரர் ஹல்க் ஹோகன், 71 வயதில் காலமான நிலையில் அவரது மறைவு ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், ஒரு பெண் அவரது மறைவை கொண்டாடி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது சர்ச்சையை கிளப்பியுள்ளது. அந்தப் பெண், “ஹோகனின் கல்லறையில் நடனமாட விருப்பம்” என பதிவிட்டிருந்த நிலையில், பெரும் எதிர்ப்புக்கு பிறகு அதை நீக்கிவிட்டார்.

இந்த சம்பவத்திற்கு காரணமான அந்தப் பெண், காக்கர் (Gawker) என்ற மீடியாவின் முன்னாள் எழுத்தாளர் யுவெட் டி’என்ட்ரமாண்ட் (Yvette d’Entremont) ஆவார். ஹல்க் ஹோகனின் தனிப்பட்ட பாலியல் காணொளியை வெளியிட்டதற்காக, ஹல்க் ஹோகன் காக்கர் மீடியா மீது வழக்கு தொடுத்தார். அதன் காரணமாக 2016 இல் அந்த நிறுவனம் திவாலானது.

2016 ஆம் ஆண்டில், புளோரிடா நீதிமன்றம் காக்கர் மீடியாவுக்கு எதிராக ஹல்க் ஹோகனின் பாலியல் காணொளி வழக்கில் $115 மில்லியன் அபராதம் விதித்தது. மேலும், $25 மில்லியன் தண்டனை இழப்பீட்டையும் சேர்த்தது. ஹல்க் ஹோகன் தனது முன்னாள் நெருங்கிய நண்பரின் மனைவியுடன் பாலியல் உறவு கொண்ட காணொளியை 2012 இல் காக்கர் வெளியிட்டதால் அவர் வழக்கு தொடர்ந்தார். இது தனது தனியுரிமையை மீறிய செயல் என்று அவர் வாதிட்டார்.

யுவெட் டி’என்ட்ரமாண்ட் எக்ஸ் தளத்தில் நீக்கிய அந்ப் பதிவு இவ்வாறு இருந்தது: “ஹல்க் ஹோகன் இறந்துவிட்டார். ஒரு முன்னாள் காக்கர் எழுத்தாளராக அந்த ஆளை பற்றிப் பேசுங்கள்’ என்று நான் முதல் ஆளாகவோ அல்லது கடைசி ஆளாகவோ இருக்க மாட்டேன். நீங்கள் விரும்பும் எந்த கல்லறையிலும் நடனமாடுங்கள், ஆனால் இது என்னுடையது.” என்று பதிவு செய்திருந்தார்.

டி’என்ட்ரமாண்டின் இந்த பதிவு பெரும் சமூக ஊடக எதிர்வினைகளை சந்தித்தது: ஒரு பயனர் டி’என்ட்ரமாண்டை குறிப்பிட்டு, “காக்கர் குப்பையானது, அதன் வீழ்ச்சியில் நான் மகிழ்ச்சியடைந்தேன். நீங்கள் ஒருவரின் மரணத்தில் மகிழ்ச்சியடைகிறீர்கள். நீங்கள் எவ்வளவு உன்னதமானவர் மற்றும் கருணையுள்ளவர் என்பது தெரிகிறது!” என்று எழுதினார்.

மற்றொரு பதிவு, “அவர் ஒரு மோசமான நபர், இப்போது அனைவருக்கும் அது தெரியும்” என்று குறிப்பிட்டது. மூன்றாவது நபர், “ஹா ஹா. நீங்கள் உங்கள் அசல் பதிவை நீக்கிவிட்டீர்கள்” என்று பதிவிட்டார். நான்காவது நபர், “கர்மா உங்களை தேடி வரும், அது கருணை காட்டாது” என்று எழுதினார்.

முன்னாள் WWE சாம்பியனான ஹல்க் ஹோகன் கடந்த வியாழக்கிழமை அன்று காலமானார். அவர் “சாட்டர்டே நைட் லைவ்” நிகழ்ச்சியை நடத்திய முதல் மல்யுத்த வீரர். மேலும், சில்வெஸ்டர் ஸ்டாலோனின் ராக்கி பால்போவாவிற்கு எதிராக ‘தண்டர்லிப்ஸ்’ கதாபாத்திரத்தில் பெரிய திரையில் உயர்ந்து நின்றவர். அவரது மரணத்தால் உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் ஆழ்ந்த சோகத்தில் மூழ்கியுள்ளனர்.