அவர் கவனக்குறைவால தான் நடந்தது.. கடவுள் மேலயே வழக்கு.. நீதிபதி தீர்ப்பு தான் தலைசுத்த வெச்சுடுச்சு..

இங்கு அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு இடத்தை பொறுத்து நிறைய சட்ட திட்டங்கள் உள்ளதால் யாராவது ஏதாவது தவறு செய்தாலோ, அவர்கள் நிச்சயம் நீதி முன்பு நிறுத்தப்பட்டு சரியான தண்டனை கூட வழங்கப்படலாம். இந்தியாவில் கூட…

Lawsuit against God

இங்கு அனைத்து நாடுகளிலும் ஒவ்வொரு இடத்தை பொறுத்து நிறைய சட்ட திட்டங்கள் உள்ளதால் யாராவது ஏதாவது தவறு செய்தாலோ, அவர்கள் நிச்சயம் நீதி முன்பு நிறுத்தப்பட்டு சரியான தண்டனை கூட வழங்கப்படலாம். இந்தியாவில் கூட சட்ட திட்டங்கள் கடுமையாக இருந்து வருவதால் எந்த விதமான குற்றங்கள் செய்யப்பட்டு அது தகுந்த முறையில் நிரூபிக்கப்பட்டால் நிச்சயம் குற்றவாளிகள் தப்பிக்க முடியாத அளவுக்கும் தண்டனை வழங்கப்படும்.

இந்தியாவில் உள்ள சட்டங்கள் தொடர்பாக விமர்சனங்கள் இருந்தாலும் அதே நேரத்தில் அதிகமாக பாராட்டுக்களும் இருந்து வருகிறது. மேலும் உலக அளவில் நிறைய வழக்குகள் இதற்கு என்ன தீர்ப்பு வழங்கலாம் என நீதிபதியையே நிச்சயம் ஒரு நிமிடம் ஆட்டம் காண வைத்திருக்கும். அப்படி ஒரு வழக்கு பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம்.

தலைசுற்றி போன நீதிபதி

பல இடங்களில் உள்ள நீதிமன்றங்களில் நிறைய வழக்குகள் நிலுவையில் இருக்க, குற்றங்கள் என வரும் போது பெரும்பாலும் மனிதர்கள் தான் ஈடுபட்டிருப்பார்கள். ஆனால், கடந்த 1969 ஆம் ஆண்டு பெண் ஒருவர் கடவுள் மீது புகார் கொடுக்க, அதில் வந்த முடிவு அனைவரையும் இன்று வரையிலும் மிரண்டு பார்க்க வைத்து தான் வருகிறது.

அமெரிக்காவில் உள்ள அரிசோனா (Arizona) என்னும் பகுதியை சேர்ந்தவர் எட்டி பென்ரோஸ். இவர் ரஸ்ஸல் டி டான்சி என்பவரின் செயலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது பெட்டி பென்ரோஸுக்காக ஒரு வழக்கை கடவுள் மீது பதிவு செய்கிறார் ரஸ்ஸல் டி டான்சி. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதே இன்று பெரிய விவாதமாக இருக்க, சுமார் 55 ஆண்டுகளுக்கு முன் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஒரு நாள் அரிசோனா பகுதியில் கடும் மழை பெய்ய, பெட்டி பென்ரோஸ் தங்கியிருந்த வீடு மழையில் பாதிக்கப்பட்டதுடன் மின்னல் மூலம் தாக்கப்பட்டு வீடு சேதமடைந்துள்ளது. எந்த தவறும் செய்யாத தனது வீடு மழையால் சேதமடைந்து போவதற்கு கடவுள் தான் காரணம் என்றும் இதற்கு அவர் இழப்பீடு தர வேண்டும் என்றும் பெட்டி பென்ரோஸ் தரப்பில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடவுள் மேலயே வழக்கா..

மேலும் தனது வீட்டில் மின்னல் தாக்கிய போது கடவுள் கவன குறைவாக இருந்ததாகவும் பென்ரோஸ் குறிப்பிட, 1 லட்சம் டாலர்களையும் நிவாரணமாக கேட்டுள்ளார். இந்த வழக்கில் கடவுள் தரப்பில் பேச யாருமே வரவில்லை என்பதால் பெட்டி பென்ரோஸ் கேட்ட நிவாரணத்தை பெற்றுக் கொண்ட செய்தி அனைவரையும் ஆச்சர்யத்துடன் பார்க்க வைத்துள்ளது.

இதே போல, இந்தியாவிலும் ஒருவர் கடவுள் மீது வழக்கு போட நினைத்து தகுந்த ஆதாரம் இல்லாமல் போனதால் எந்த நிவாரணமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.