இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் நாடுகளை சோலி முடிச்சாச்சு.. அடுத்ததாக பிலிப்பைன்ஸ்.. 50,000 பேர் ஒன்று சேர்ந்து கட்டுக்கடங்காத வன்முறை.. பொது சொத்துக்கள் நாசம்.. அடித்து உதைக்கப்படும் போலீஸ்.. இந்தியா மட்டும் தான் தப்பியது.. ஏனெனில் இங்கு இருப்பது மோடி..!

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இன்று அதாவது செப்டம்பர் 21-ஆம் தேதி, சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள், அரசுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைதியான போராட்டம் விரைவிலேயே வன்முறையாக மாறியது. வெள்ள கட்டுப்பாட்டு…

philippines

பிலிப்பைன்ஸின் தலைநகரான மணிலாவில் இன்று அதாவது செப்டம்பர் 21-ஆம் தேதி, சுமார் 50,000-க்கும் மேற்பட்ட மக்கள், அரசுக்கு எதிராக பெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த அமைதியான போராட்டம் விரைவிலேயே வன்முறையாக மாறியது. வெள்ள கட்டுப்பாட்டு திட்டங்களில் நடந்த முறைகேடுகள் மற்றும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களில் நடந்த ஊழல்கள் ஆகியவை போராட்டத்திற்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

ஊழலுக்கு எதிரான மக்களின் கோபம் வெடித்தபோது, போராட்டக்காரர்கள் காவல்துறையினர் மீது கற்களையும் பெட்ரோல் குண்டுகளையும் வீசினர். நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர காவல்துறை கண்ணீர்ப் புகை குண்டுகளையும், தண்ணீர்ப் பீரங்கிகளையும் பயன்படுத்தியது. இந்த கலவரத்தில் ஏராளமானோர் கணக்கானோர் காயமடைந்தனர். மேலும், 17 போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். இந்த சம்பவம் பிலிப்பைன்ஸ் மக்களிடையே ஆளும் அரசின் மீதான அதிருப்தி அதிகரித்திருப்பதைக் காட்டுகிறது.

பிலிப்பைன்ஸில் நடந்த இந்த நிகழ்வு, உலகின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாக ஆசிய நாடுகளில், நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார சூழல்களை நினைவூட்டுகிறது. இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான், நேபாளம் போன்ற நாடுகள் இதேபோன்ற அரசியல் நெருக்கடிகளையும், சமூக அமைதியின்மையையும் எதிர்கொண்டுள்ளன. போராட்டத்தின் விளைவாக ஆட்சியாளர்கள் உயிரை காப்பாற்றி கொள்ள தப்பியோடினர். புதிய அரசு அமைந்தது. அந்த அரசு அமெரிக்காவுக்கு தலையாட்டி பொம்மையாய் இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

ஆனால், இந்தியா ஒரு விதிவிலக்காக உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, அரசியல் ஸ்திரத்தன்மையையும், பொருளாதார வளர்ச்சியையும் பேணிக்காப்பதே இதற்கு காரணம் என சில அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்தியா இத்தகைய அரசியல் மற்றும் சமூக நெருக்கடிகளிலிருந்து தப்பிப்பதற்கு காரணம், இங்குள்ள நிர்வாக திறன் மற்றும் நிலையான ஆட்சி என்றும் அவர்கள் வாதிடுகின்றனர்.

பிலிப்பைன்ஸில் நடந்த இந்த வன்முறை சம்பவங்கள், ஒரு நாட்டின் ஸ்திரத்தன்மைக்கு அரசியல் மற்றும் பொருளாதார நிர்வாகம் எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்துகிறது. அதே நேரத்தில், மக்களின் கோபம் உச்சத்தை அடையும்போது, அது கட்டுப்படுத்த முடியாத சக்தியாக வெடிக்கக்கூடும் என்பதையும் இது காட்டுகிறது.