இன்னொரு இந்திரா காந்தியாக மாறிய வெனிசுலா பெண் அதிபர் டெல்சி ரோட்ரிக்ஸ்.. எமர்ஜென்சி பிரகடனம்.. அமெரிக்காவுக்கு ஆதரவாக யாராவது பேசினால் புடிச்சு உள்ள போடுங்க.. காவல்துறைக்கு போட்ட் அதிரடி உத்தரவு.. வெனிசுலாவில் பெரும் பதட்டம்..!

அமெரிக்க ராணுவம் வெனிசுலாவிற்குள் புகுந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ள நிலையில், அங்கு எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பதற்றம் நிலவுகிறது. தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில்…

veninsula president

அமெரிக்க ராணுவம் வெனிசுலாவிற்குள் புகுந்து அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவைக் கைது செய்துள்ள நிலையில், அங்கு எமர்ஜென்சி பிரகடனம் செய்யப்பட்டு இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பதற்றம் நிலவுகிறது.

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடந்த சனிக்கிழமை அமெரிக்க ராணுவம் ஒரு அதிரடி தாக்குதலை நடத்தி, அந்நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோவை சிறைபிடித்தது. மதுரோ தற்போது நியூயார்க்கில் உள்ள ஒரு ரகசிய இடத்தில் அமெரிக்க காவலில் வைக்கப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து, வெனிசுலாவின் தற்காலிக அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ் நாட்டில் எமர்ஜென்சியை பிரகடனப்படுத்தும் ஆணையை வெளியிட்டுள்ளார். இந்த ஆணை, அமெரிக்காவின் தாக்குதலுக்கு ஆதரவாக செயல்படும் எவரையும் உடனடியாக கைது செய்ய பாதுகாப்புப் படைகளுக்கு பரந்த அதிகாரங்களை வழங்குகிறது.

வெனிசுலாவின் தற்போதைய அரசியலமைப்பு 1999-ல் நடைமுறைக்கு வந்த பிறகு, இத்தகைய ஒரு தீவிரமான அவசரநிலை சட்டம் அமல்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும். இந்த சட்டத்தின் கீழ், அதிபர் நாட்டு நடப்பு, பொருளாதாரம் மற்றும் சமூக விவகாரங்களில் தன்னிச்சையான அதிகாரத்தை செலுத்த முடியும். “நாட்டின் பாதுகாப்பு மற்றும் நிறுவனங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும் போது” இத்தகைய நடவடிக்கையை எடுக்க அரசியலமைப்பு அனுமதிக்கிறது. தற்போதைய சூழலில், அமெரிக்காவிற்கு ஆதரவாக செயல்படும் நபர்களை தேடிப் பிடித்து தண்டிக்க இந்த ஆணை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்பட உள்ளது.

மதுரோ கைது செய்யப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பே இந்த ஆணை தயாரிக்கப்பட்டிருந்தாலும், சனிக்கிழமை நடந்த அசாதாரண சம்பவங்களுக்கு பிறகு இது அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. இந்த அவசரநிலை 90 நாட்களுக்கு அமலில் இருக்கும் என்றும், தேவைப்பட்டால் மேலும் 90 நாட்களுக்கு நீட்டிக்கப்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கடற்படை நடவடிக்கைகள் கரீபியன் பகுதியில் அதிகரித்ததைத் தொடர்ந்தே வெனிசுலா அரசு இத்தகைய தற்காப்பு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

இதற்கிடையில், நியூயார்க் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட மதுரோ, தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதம் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன. நீதிமன்றத்தில் பேசிய மதுரோ, தான் இன்னும் வெனிசுலாவின் சட்டப்பூர்வ அதிபர் என்றும், தான் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாகவும் வாதிட்டார். இருப்பினும், அவரை ஜாமீனில் விட நீதிமன்றம் மறுத்துவிட்டதுடன், அடுத்த விசாரணையை மார்ச் மாதத்திற்கு ஒத்திவைத்துள்ளது.

சர்வதேச ரீதியாகவும் மதுரோவிற்கு பின்னடைவுகள் ஏற்பட்டுள்ளன. சுவிட்சர்லாந்து அரசு, மதுரோ மற்றும் அவருடன் தொடர்புடைய நபர்களின் சொத்துக்களை உடனடியாக முடக்குவதாக அறிவித்துள்ளது. மதுரோவின் சொத்துக்கள் சட்டவிரோதமான முறையில் ஈட்டப்பட்டவை என்று நிரூபிக்கப்பட்டால், அந்த பணம் மீண்டும் வெனிசுலா மக்களுக்கே சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுவிஸ் அரசு தெரிவித்துள்ளது. 2018 முதல் வெனிசுலா மீது நிலவி வரும் தடைகளுடன், இந்த புதிய நிதி முடக்கமும் மதுரோ தரப்பை மேலும் பலவீனப்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் ஏற்பட்டுள்ள இந்த ஆட்சி மாற்றம் மற்றும் போர் பதற்றம் ஒட்டுமொத்த லத்தீன் அமெரிக்காவிலும் ஒரு நிலையற்ற சூழலை உருவாக்கியுள்ளது. டெல்சி ரோட்ரிக்ஸ் ஒருபுறம் அமெரிக்காவிற்கு எச்சரிக்கை விடுத்தாலும், மற்றொரு புறம் சமரச பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்து வருகிறார். ஆனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெனிசுலா ஒரு ஜனநாயக பாதையை நோக்கி திரும்பும் வரை இந்த அழுத்தம் தொடரும் என்பதில் உறுதியாக இருக்கிறார். வரும் நாட்களில் வெனிசுலாவின் நிலை என்னவாகும் என்பது உலக நாடுகளின் உன்னிப்பான கவனிப்பில் உள்ளது