இங்கிலாந்தில், ஒரு அறுவை சிகிச்சை நிபுணர் சுமார் ரூ. 5 கோடி காப்பீட்டு தொகை கிடைக்கும் என்பதற்காக தனது இரண்டு கால்களையும் தானே வேண்டும் என்று துண்டித்து கொண்டதாக இன்சூரன்ஸ் நிறுவனம் தொடுத்த வழக்கு, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
நீல் ஹாப்பர் என்ற பெயருடைய அந்த டாக்டர், கடந்த 2019 ஆம் ஆண்டு இரண்டு பெரிய இன்சூரன்ஸ் பாலிசிகளை எடுத்ததாக தெரிகிறது. அதில் ஒன்று சுமார் 2 கோடி ரூபாய்க்கும் மேல் என்றும், மற்றொன்று சுமார் 3 கோடி ரூபாய் அளவிலும் எடுக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த இரண்டு காப்பீடுகளின் மொத்த மதிப்பு இந்திய மதிப்பில் சுமார் ரூ. 5 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், காப்பீட்டு பணத்தைப் பெறுவதற்காக நீல் ஹாப்பர் தனது இரண்டு கால்களையும் தானே துண்டித்து கொண்டதாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர். இந்த மிரளவைக்கும் குற்றச்சாட்டு, நீதிமன்ற வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம், நீல் ஹாப்பர் ஒரு முக்கிய காரணத்திற்காக மருத்துவமனையிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதாகவும், அதன்பின்னர் அவருக்கு பணத்தேவை அதிகமானதால் இந்த அபாயகரமான யோசனை தோன்றியதாகவும் கூறப்படுகிறது. இருப்பினும், அவர் மருத்துவமனையில் பணிபுரிந்த காலத்தில் எந்த நோயாளிக்கும் ஆபத்தை ஏற்படுத்தியதாக ஆதாரம் இல்லை என்றும், அவரது சிகிச்சை குறித்தும் எந்தக் கேள்வியும் இல்லை என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆனால், திடீரென ஏற்பட்ட பணத்தேவை காரணமாகவே அவருக்கு இந்த அபாயகரமான எண்ணம் தோன்றியிருக்கலாம் என்றும், இன்சூரன்ஸ் பணத்திற்காகவே அவர் தன்னுடைய கால்களை துண்டித்துக் கொண்டதால் அவருக்கு இன்சூரன்ஸ் பணம் வழங்க முடியாது என்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் நீதிமன்றத்திடம் வாதிட்டுள்ளன.
இந்த வழக்கு தற்போது நடைபெற்று வருவதாகவும், இந்த வழக்கில் டாக்டருக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கப்பட அதிக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
