சலூன் கடையில்.. முடி வெட்டிய சமயத்தில்.. பாதியில் எழுந்து ஓடிய நபர்.. சபாஷ் போட வைத்த காரணம்.. வீடியோ..

சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் வைரலாகும் நிகழ்வுகளுக்கோ, வீடியோக்களுக்கோ எந்தவித கணக்கும் கிடையாது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு சம்பவம் பேசு பொருளாக சமூக வலைத்தளங்களில் மாறும் நிலையில் அந்த வகையிலான ஒரு வீடியோ…

Man Helps Woman Police

சமூக வலைத்தளங்களில் நாளுக்கு நாள் வைரலாகும் நிகழ்வுகளுக்கோ, வீடியோக்களுக்கோ எந்தவித கணக்கும் கிடையாது. ஒரு மணி நேரத்துக்கு ஒரு சம்பவம் பேசு பொருளாக சமூக வலைத்தளங்களில் மாறும் நிலையில் அந்த வகையிலான ஒரு வீடியோ பற்றி தான் தற்போது பார்க்க போகிறோம். திரைப்படங்களில் நாம் அதிகம் சண்டை போடும் நடிகர்களை வெகுவாக கொண்டாடினாலும் நிஜ வாழ்க்கை என வரும்போது ஒரு நபருக்கு பொது இடங்களில் பிரச்சனை ஏற்பட்டால் அதை தட்டிக் கேட்க யாராவது தயாரா என்று கேட்டால் நிச்சயம் சந்தேகம் தான்.

இங்கே போன் மோகமும் அதிகமாக இருப்பதால் யாருக்காவது ஒரு பிரச்சனை நடக்கும்போது அது என்ன என்பது பற்றியே கேட்காமல் அதனை வீடியோ எடுத்துக்கொண்டு புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோ இருப்பார்கள். ஒருவருக்கு விபத்து நடந்தால் கூட அவரை உடனடியாக மருத்துவமனை சேர்ப்பதற்கு முன்னுரிமை கொடுப்பதை காட்டிலும் அது தொடர்பான வீடியோக்களை எடுப்பதிலும் பலரின் கவனம் உள்ளது.

நாம தான் காப்பாத்தணும்..

இப்படி மக்கள் பலரும் நிஜத்தை மறந்து ஒரு சமூக வலைத்தள மோகம் கொண்ட உலகத்தில் வாழ்ந்து வரும் அதே வேளையில் லண்டன் பகுதியை சேர்ந்த 32 வயதான நபர் ஒருவர் செய்த விஷயம் தற்போது சமூக வலைதளங்களில் பலரின் பாராட்டுகளையும் பெற்றுக் கொடுத்துள்ளது. இங்கிலாந்தின் வாரின்டன் என்னும் பகுதியை சேர்ந்தவர் தான் கைலி வொய்டிங் (Kyle Whiting).

இவர் அங்கிருக்கும் ஒரு சலூன் கடையில் முடி வெட்டிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அந்த சமயத்தில் சாலைக்கு இன்னொரு புறம் பெண் போலீஸ் ஒருவரை ஆசாமி ஒருவர் தேவை இல்லாமல் அடித்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. திரைப்படத்தில் நடைபெறுவது போல ஒரு காட்சி அரங்கேறிக் கொண்டிருந்த நிலையில் சலூன் கடையில் முடி வெட்டிக் கொண்டிருந்த கைலி வொய்ட்டிங், தனது இருக்கையில் இருந்து வேகமாக எழுந்து அப்படியே அதே ஆடைகளுடன் சென்று அந்த பெண் போலீசாரை காப்பாற்று முயற்சியிலும் ஈடுபட்டார்.

இவரு தான் ரியல் சூப்பர் ஹீரோ..

உடனடியாக அந்த பெண் போலீசாரை கைலி காப்பாற்றியதுடன் மட்டுமில்லாமல் வேறு சிலரும் ஓடி வந்து உதவி செய்தனர். இது தொடர்பாக பேசும் கைலி வொய்டிங், தனது சலூன் கடைக்காரர் அதனை வீடியோ எடுத்துக் கொண்டிருந்ததாகவும் ஆனால் இதைவிட நாம் இந்த நேரத்தில் உதவி செய்வதே சிறப்பாக இருக்கும் என்று தான் ஓடிப் போய் உதவி செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது சகோதரிக்கு இப்படி நடந்தால் நிச்சயம் நாம் அதை தடுக்க தான் முயற்சி செய்வோம் என்றும் குறிப்பிட்டுள்ளார் கைலி வொய்டிங். பலரும் அவரது செயலை பாராட்டுவதுடன் மட்டுமில்லாமல் அவர் தான் ரியல் சூப்பர் ஹீரோ என்றும் குறிப்பிட்டு வருகின்றனர்.