வாயை மூடிக்கொண்டு நான் சொல்வதை செய்.. கனடாவை மிரட்டிய அமெரிக்கா.. சரியான நேரத்தில் கைகொடுத்த சீனா.. ஒரு வல்லரசு பயமுறுத்த, இன்னொரு வல்லரசு கைகொடுக்க.. கனடாவின் முடிவு என்ன? அமெரிக்காவின் அதிகார திமிருக்கு பதிலடி..!

கனடாவின் பொருளாதார எதிர்காலம் மற்றும் இறையாண்மை இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லூட்னிக் என்பவர், கனேடிய மண்ணில் இருந்துகொண்டே, கனடாவின் வர்த்தக தலைவர்களிடம், “கனடாவின் வேலை வாயை…

america canada china

கனடாவின் பொருளாதார எதிர்காலம் மற்றும் இறையாண்மை இன்று ஒரு திருப்புமுனையில் நிற்கிறது. அமெரிக்காவின் முன்னாள் வர்த்தக செயலாளர் ஹாவர்ட் லூட்னிக் என்பவர், கனேடிய மண்ணில் இருந்துகொண்டே, கனடாவின் வர்த்தக தலைவர்களிடம், “கனடாவின் வேலை வாயை மூடிக்கொண்டு, அமெரிக்கா சொல்வதை செய்வதுதான்” என்று பகிரங்கமாக அச்சுறுத்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் முக்கியக் கொள்கை எப்போதும் ‘அமெரிக்காவின் வாகன தொழிலுக்கு முதலிடம்’ என்பதாகவே இருக்கும் என்றும், கனடா உட்பட மற்ற நாடுகள் இரண்டாம் பட்சமே என்றும் அவர் தெளிவுபடுத்தினார்.

“வாகன உற்பத்தி தெற்கு நோக்கி நகர வேண்டும்” என்று லூட்னிக் கூறியதன் மூலம், அமெரிக்கா சுமார் 3,50,000 கனேடிய வேலைகளை பறித்து எல்லையைக் கடந்து அமெரிக்காவிற்கு மாற்ற விரும்புகிறது என்பதைத் தெளிவாக உணர்த்தியுள்ளார்.

ஒன்டாரியோ மாகாண முதல்வர் டக் போர்டு இதனை “பெரிய அச்சுறுத்தல்” என்று குறிப்பிட்டாலும், இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு பதிலடி கொடுக்க கனடா அஞ்சுவது, நாட்டின் இறையாண்மை குறித்த கேள்வியை எழுப்பியுள்ளது.

இந்த நிலையில் அமெரிக்கா, கனடாவின் பொருளாதாரத்தை அச்சுறுத்தி ஆதிக்கம் செலுத்த முயன்ற அதே நேரத்தில், சீனா ஒரு வியத்தகு தீர்வை முன்வைத்துள்ளது. சீனாவின் கனடாவிற்கான தூதுவர், நேரடியான ஒரு சலுகையை கனடாவுக்கு வழங்கினார். உங்கள் நாட்டில் சீன மின்சார வாகனங்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வரியை நீக்குங்கள். அதற்கு பதிலாக, கனடா ஏற்றுமதிகள் மீதான எங்களது வரியை உடனடியாக நீக்குகிறோம்.” என்று கூறியுள்ளார்.

அமெரிக்கா என்ற ஒரு வல்லரசு வெளிப்படையாக அச்சுறுத்தும் நேரத்தில், மற்றொரு வல்லரசு நாடான சீனா பேச்சுவார்த்தைக்கு வந்திருப்பது, கனடாவுக்கு ஒரு அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.

ஆனால் அதே நேரத்தில் சீனாவின் ஒப்பந்தத்தை ஏற்றுக்கொள்வது என்பது கனடாவுக்கு ஒரு தர்மசங்கடமான சூழலை ஏற்படுத்தும். ஆனால் அமெரிக்காவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள சீனாவின் நிபந்தனையை ஏற்று கொள்வதை தவிர வேறு வழியில்லை.

சீனாவின் சலுகையை ஏற்றுக்கொள்வதால் கனடாவுக்கு கிடைக்கும் நன்மைகள்:

விவசாயத் துறை மறுமலர்ச்சி ஏற்பட்டு $7 பில்லியன் கனடாவின் வர்த்தகம் உடனடியாக மீட்டெடுக்கப்படும்.

கனேடியக் குடும்பங்களுக்கு மலிவு விலையில் மின்சார வாகனங்கள் கிடைக்கும்.

சீன EV உற்பத்தியாளர்களை கனடாவில் உற்பத்தி ஆலைகளை அமைக்க அழைப்பதன் மூலம், புதிய வேலை வாய்ப்புகள் மற்றும் செல்வத்தை உருவாக்கலாம்.

சீனாவின் சலுகையை நிராகரிப்பதால் கனடாவுக்கு ஏற்படும் விளைவுகள்:

உள்நாட்டு விவசாயிகள் தொடர்ந்து பாதிக்கப்படுவார்கள்.

அதிக விலையுள்ள EV-களால் பசுமை பாதிப்பு ஏற்படலாம்.

மொத்தத்தில் கனடா உடனடியாக சீனாவின் சலுகையை ஏற்றுக்கொண்டு, உலகிற்கு ஒரு தெளிவான செய்தியை அனுப்ப வேண்டும்: “கனடா தனது முடிவுகளை கனேடிய நலன்களின் அடிப்படையிலேயே எடுக்கும். எங்களை மதிக்கும் எவருடனும் வர்த்தகம் செய்ய நாங்கள் தயாராக இருக்கிறோம்.” என்று முடிவெடுக்க வேண்டும். இந்த முடிவு, கனடா ஒருபோதும் அமெரிக்காவின் காலனி அல்ல, தன்மானம் உள்ள ஒரு அண்டை நாடு என்பதை நிரூபிக்க ஒரு பொன்னான வாய்ப்பு என்றே சர்வதேச அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.