சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் கூடுதல் சம்பளம் குறித்து கூறிய டிரம்ப், “இந்த விஷயம் எனக்கு இதுவரை சொல்லவே இல்லை. தேவைப்பட்டால், நான் என் சொந்த பணத்தில் இருந்து இதை செலுத்துவேன். அவர்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டும்… மேலும், எலான் மஸ்க்கிற்கும் நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் இல்லையென்றால், என்ன ஆகும் என்று யோசித்துப் பாருங்கள்” என்று கூறினார்.
“அவர்கள் அங்கு கேப்ஸ்யூலில் இருந்தாலும், மனித உடல் ஒன்பது அல்லது பத்து மாதங்கள் கழித்து மெதுவாக பாதிக்க தொடங்கும். பதினான்கு அல்லது பதினைந்து மாதங்களுக்கு மேல் மிகவும் மோசமாகிவிடும்… எலான் இல்லையென்றால், அவர்கள் நீண்ட நாட்கள் அங்கு சிக்கியிருக்க நேரிடும். அவர்களை மீட்டெடுப்பதற்கு வேறு யார் இருக்கிறார்கள்? அதனால், அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறினார்.
சுனிதா வில்லியம்ஸ் விண்வெளியில் நீண்ட நாட்கள் இருந்ததால், கூடுதல் ஊதியம் வழங்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து நாசா கூறியபோது விண்வெளி வீரர்கள் அரசாங்க ஊழியர்களாகவே சம்பளம் பெறுகிறார்கள். அவர்களுக்கு அடிப்படை சம்பளம் மட்டுமே வழங்கப்படும். கூடுதல் ஊதியம் கிடையாது. ஆனால், பயணச் செலவுகள், தங்குமிடம், உணவு ஆகியவற்றை நாசா நிர்வகிக்கும்” என்று கூறினார்.
இருப்பினும் டிரம்ப் தனது சொந்த பணத்தில் இருந்து சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் இருவரும் விண்வெளியில் 287 நாட்கள் கழித்ததால் ஒருசில லட்சங்களை தருவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.