நான் சொல்றத உலகம் கேட்கும். ஆனா, நான் செய்யறத உலகமே பார்த்து வியக்கும்.. பேச்சுமூச்சே இல்லை.. 6 நாட்கள் மர்மமாக மாயமாகிவிட்ட டிரம்ப்.. எல்லாம் மோடி கொடுத்த ஷாக் தான்..

சமீப காலமாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த சில முடிவுகள் மற்றும்…

trump1 2

சமீப காலமாக, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் எடுத்த சில முடிவுகள் மற்றும் அவரது மர்மமான செயல்பாடுகள் குறித்தும் கூறி வருகின்றனர்.

டொனால்ட் டிரம்ப் இந்தியாவிற்கு வரி விதித்தபோது, இந்தியா அதை எதிர்பார்க்காத வகையில் பதிலடி கொடுத்தது. ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் புதின் மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் ஆகியோருடன் நெருக்கமாக பழகுவது, அமெரிக்காவிற்கு ஒருவித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஜெர்மனியின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜான் வேதிபால் இந்தியா வந்தபோது, “ஐரோப்பிய நாடுகளுக்கு அமைதியை கொண்டுவர இந்தியா தனது ரஷ்ய உறவைப் பயன்படுத்தலாம்” என்று கூறினார். இது, ஒரு நாளில் போரை நிறுத்திவிடுவேன் என்று சொன்ன டிரம்ப்பிற்கு ஒரு நேரடி சவாலாக பார்க்கப்படுகிறது. மேலும், தீவிரவாதத்திற்கு எதிராக தங்களை பாதுகாத்து கொள்ள இந்தியாவிற்கு முழு உரிமை உண்டு என்று அவர் கூறியது, பாகிஸ்தானுக்கு ஒரு நேரடி எச்சரிக்கையாக கருதப்படுகிறது.

பாதுகாப்பு மற்றும் எண்ணெய் வர்த்தகத்தில் இந்தியா – ரஷ்யா உறவுகள் வலுவடைந்து வருகின்றன. எஸ்-400 ஏவுகணை அமைப்புகளை ரஷ்யா விரைவில் வழங்க ஒப்புக்கொண்டதுடன், இந்தியாவிற்கு விற்கப்படும் எண்ணெயின் விலையை குறைக்கவும் விருப்பம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணியாமல், தனது தேசிய நலன்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம் என்பதை இந்தியா இதன் மூலம் உணர்த்தியுள்ளது.

இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் ஆறு நாட்கள் பொது நிகழ்ச்சிகள் மற்றும் சமூக ஊடகங்களில் இருந்து விலகி இருந்த மர்மமான செயல் குறித்தும் சில கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது. அவரது சமீபத்திய சமூக ஊடக பதிவுகள் வழக்கத்திற்கு மாறாக முறைப்படுத்தப்பட்டதாகவும், அவரது கிண்டல் தொனி இல்லாமல் இருந்ததாகவும் அரசியல் நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே இது அவருடைய சொந்த பதிவாக இருக்காது என்றும் அட்மின் பதிவுகளாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், டிரம்ப்பின் உடல்நிலை குறித்த வதந்திகளும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரம்ப் ஒரு குறிப்பிட்ட நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்று வெள்ளை மாளிகை முன்னதாக அறிவித்த நிலையில், அவரது உடல்நிலை குறித்து ஏதோ மறைக்கப்படுவதாக பலருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

மொத்தத்தில் இந்தியா ஏற்படுத்திய பதிலடி தான் டிரம்பின் உடல்நலக்கோளாறு, மனநல கோளாறுக்கு காரணம் என்றும், இந்தியாவை அவரால் சமாளிக்கவே முடியவில்லை என்றும், மோடியிடம் டிரம்ப் தோற்று போய்விட்டார் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்,