டிரம்ப் தாக்க வேண்டிய அவசியமே இல்லை.. ஈரானில் 60000 பேர் கொல்லப்படும் அபாயம்… அதிர்ச்சி தகவல்..!

  ஐநா சபை அளிக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சூழலில், ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் ஏற்பட்டால், ஈரானுக்கு மிகப்பெரிய…

iran

 

ஐநா சபை அளிக்கும் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த சூழலில், ஈரான்-அமெரிக்கா இடையிலான போர் ஏற்பட்டால், ஈரானுக்கு மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று கூறப்படுகிறது.

ஆனால், ட்ரம்ப் தாக்க வேண்டிய அவசியமே இல்லாமல், ஈரான் ஏற்கனவே ஒரு மிகப்பெரிய பேரழிவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது என்று புவியியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் தலைநகர் டெஹ்ரான் பெரும் அபாயத்தில் உள்ளதாகவும், சமீபத்தில் 3.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது மக்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சம் நிலவியது என்றும் கூறப்படுகிறது. உயிரிழப்பு எதுவும் இந்த நிலநடுக்கத்தில் ஏற்படவில்லை என்றாலும், மீண்டும் ஒரு மிகப்பெரிய நிலநடுக்கம் இதே பகுதிகளில் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், அதனால் ஏற்படும் பாதிப்புகள் அதிகமாக இருக்கலாம் என்றும் நிபுணர்கள் கணித்துள்ளனர்.

சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் டெஹ்ரான் நகரம், மூன்று பெரிய பிளவு கோடுகளின் கீழ் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. அதனால், புவியியல் ரீதியாக, இந்த நகரம் மிகப்பெரிய ஆபத்தை எதிர்நோக்கி உள்ளது. ஒருவேளை, இந்த நகரத்தில் 7 ரிக்டர் அளவுக்கு மேல் நிலநடுக்கம் ஏற்பட்டால், நகரத்தின் பாதிக்கும் மேற்பட்ட கட்டிடங்கள் இடிந்து விழும் என்று அறிஞர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்த நகரத்தில் வாழும் ஒரு கோடி மக்களில், சுமார் 60 ஆயிரம் பேர் உடனடியாக உயிரிழக்க வாய்ப்பு இருப்பதோடு, நிலநடுக்கத்திற்கு பின்னர் நீர்மட்டம் மிகவும் குறைந்து, இன்னும் பெரிய பேரிழப்பு ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. எனவே, ஈரான் முன்கூட்டியே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காவிட்டால், அதன் தலைநகரையே இழந்து விடும் அபாயம் இருப்பதாக கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.