வாஷிங்டன் டிசியை தனது நேரடி கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்த டிரம்ப்.. அதிரடி உத்தரவு.. மேயர், உள்ளூர் நிர்வாகிகள் அதிர்ச்சி.. என்ன எதிர்கால திட்டம்?

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யின் சட்டம்-ஒழுங்கை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகவும், தேசியக் காவல் படையினரை நகர வீதிகளில் நிலை நிறுத்தவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த…

trump

அமெரிக்கத் தலைநகரான வாஷிங்டன் டி.சி.யின் சட்டம்-ஒழுங்கை தனது நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவருவதாகவும், தேசியக் காவல் படையினரை நகர வீதிகளில் நிலை நிறுத்தவிருப்பதாகவும் அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் அமெரிக்காவில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த அசாதாரண நடவடிக்கை, நகர நிர்வாகத்தின் சட்ட அமலாக்க முடிவுகளை குறிப்பாக வாஷிங்டன் மேயர் முடிவை நேரடியாகப் பாதிக்கும் என்று கூறப்படுகிறது. மேலும், நகரவாசிகள் தேசியக் காவல் படையினருடன் எதிர்பாராத மோதல்களைச் சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.

அமெரிக்க நகரங்களில் குற்றங்கள் அதிகமாக நடந்து வருவதாக கூறி வரும் டிரம்ப், வாஷிங்டன் டி.சி. காவல்துறையை தனது அரசின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது பல்வேறுகேள்விகளை எழுப்பியுள்ளது.

வாஷிங்டன் டி.சி. ஒரு மாநிலமாக இல்லாததால், அதன் மீது தலையிடுவதற்கு அதிபருக்கு அதிகாரங்கள் உள்ளன. இந்த வாய்ப்பை ஒரு களமாக டிரம்ப் பயன்படுத்துகிறார் என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஹோம் ரூல் சட்டத்தின்’ கீழ் முதலில் 30 நாட்களுக்கு வாஷிங்டன் டி.சி. காவல்துறையை கையகப்படுத்தலாம் என்றும் அதன் பிறகு, நாடாளுமன்றம் சட்டம் இயற்றி கட்டுப்பாட்டை நீட்டிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த அறிவிப்பு குறித்து வாஷிங்டன் டி.சி. மேயர் முரியல் இ. பவுசர் கூறுகையில், “வன்முறை குற்றங்கள் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது குறைந்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை தேவையில்லாதது. நாங்கள் இந்த நடவடிக்கையால் திருப்தியடையவில்லை. ஆனால் டிரம்பின் இந்த நடவடிக்கை எங்களுக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை” என்று தெரிவித்தார்.

மேலும் மேயர் பவுசர், இந்த உத்தரவுக்கு எதிராக சட்டரீதியாக போராடுவது கடினம் என்றும், ஏனெனில் அதிபருக்குள்ள அதிகாரங்கள் மிகவும் பரந்தவை என்றும் கூறினார்.

இந்த நிலையில் வாஷிங்டன் டி.சி. நகர கவுன்சில் உறுப்பினர்கள் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “இது உள்ளூர் அதிகாரத்தின் மீது திணிக்கப்பட்ட ஒரு அத்துமீறல். இது தேவையற்றது, சட்டவிரோதமானது” என்று கண்டனம் தெரிவித்தனர்.

ட்ரம்ப்பின் இந்த அதிரடி நடவடிக்கை, தேர்தல் வாக்குறுதியான “சட்டம்-ஒழுங்கு” எனும் அவரது கோட்பாட்டை நிறைவேற்றுவதற்கான ஒரு முயற்சியாக பார்க்கப்பட்டாலும் உள்ளூர் நிர்வாகம் இந்த நடவடிக்கைக்கும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றது.