சீனா மாதிரி இந்தியா மாறிவிடக்கூடாது.. இந்தியாவின் ஆயுதங்கள் அமெரிக்காவை விட வலிமையானது.. ட்ரோன் தயாரிப்பில் உச்சம்.. இதுதான் அமெரிக்கா பயம்.. மோடியிடம் எடுபடாத டிரம்பின் ராஜதந்திரம்.. மோடிடா…!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது வரி விதிப்பு போன்ற வர்த்தக போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பின்னால், இந்தியாவின் பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சியின் மீதுள்ள அச்சமே காரணம் என அரசியல் மற்றும்…

trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியா மீது வரி விதிப்பு போன்ற வர்த்தக போர் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் பின்னால், இந்தியாவின் பொருளாதார மற்றும் ராணுவ வளர்ச்சியின் மீதுள்ள அச்சமே காரணம் என அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர். டிரம்ப்பின் இந்த நடவடிக்கைகள், அமெரிக்காவின் நலன்களை பாதுகாக்கும் நோக்கில் இருந்தாலும், அது அமெரிக்காவுக்கே பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்று எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

டிரம்பின் வர்த்தக வியூகம்

டிரம்ப், இந்திய பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதன் மூலம், அமெரிக்க சந்தையில் இந்தியப் பொருட்களின் விற்பனையை நிறுத்துவதையே முக்கிய நோக்கமாக கொண்டுள்ளார். இந்தியா, ஆண்டுக்கு சுமார் 8,650 கோடி டாலர் மதிப்புள்ள பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்கிறது. இந்த ஏற்றுமதியை நிறுத்துவதன் மூலம், இந்திய பொருட்கள் அமெரிக்கச் சந்தைகளில் இருந்து முற்றிலுமாக மறைந்துவிட வேண்டும் என்பதே அவரது திட்டம்.

அதே சமயம், அமெரிக்காவின் விவசாய பொருட்களை இந்திய சந்தைகளில் இறக்குமதி வரியில்லாமல் அனுமதிக்க வேண்டும் என்றும், குறிப்பாக அமெரிக்க பால் பொருட்களை இந்தியா இறக்குமதி செய்ய வேண்டும் என்றும் டிரம்ப் நிபந்தனை விதித்துள்ளார். ஆனால், இந்தியா பால் உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற நாடாக இருப்பதால், அமெரிக்க பால் பொருட்களை இறக்குமதி செய்தால், இந்திய பால் உற்பத்தியாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்பதை உணர்ந்த பிரதமர் மோடி, டிரம்ப்பின் இந்த நிபந்தனையை ஏற்க மறுத்துவிட்டார்.

பிரமோஸ் ஏவுகணையின் தாக்கம்

இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணை, எதிரிகள் சுதாரிப்பதற்குள் தாக்கி அழிக்கும் திறன் கொண்ட ஒரு வலிமையான ஆயுதம். இந்த ஏவுகணையை உலகம் முழுவதும் பல நாடுகள் வாங்க தொடங்கியுள்ளன. இதனால், அமெரிக்காவின் ஆயுதச் சந்தை பாதிக்கப்படும் என்ற அச்சம் டிரம்ப்பிற்கு ஏற்பட்டுள்ளது. சீனா ஏற்கனவே அமெரிக்காவிற்கு ஒரு அச்சுறுத்தலாக இருக்கும் நிலையில், இந்தியாவும் ராணுவ ரீதியாக வலிமை பெற்றுவிடக் கூடாது என்பதே டிரம்ப்பின் நோக்கமாக உள்ளது.

டாலரின் வீழ்ச்சியும் ரூபாயின் எழுச்சியும்

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் போது டாலருக்கு பதிலாக இந்திய ரூபாயிலேயே வர்த்தகம் செய்து வருகிறது. இந்த நடைமுறையை பார்த்த ஈரான் உள்ளிட்ட பல அரபு நாடுகளும், ரூபாயில் வர்த்தகம் செய்ய தயாராக இருப்பதாக முன்வந்துள்ளன. இது டிரம்ப்பிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டாலரின் பயன்பாடு குறைந்தால், அமெரிக்க பொருளாதாரமே ஆட்டம் கண்டுவிடும். அதற்கு இந்தியா ஒரு முக்கிய காரணமாக இருப்பதால்தான் டிரம்ப் இந்தியா மீது கோபமாக இருக்கிறார்.

டிரம்ப்பின் அழுத்தமும் இந்தியாவின் உறுதியும்

இந்தியா தற்போது பிரிக்ஸ் அமைப்பில் இருந்து வெளியேற வேண்டும் என்று டிரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார். ஆனால், இந்த அழுத்தங்களுக்கு இந்தியா அடிபணியாது என்றும், மோடி தலைமையிலான அரசு எதற்கும் பயப்படாத ஆட்சி என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

மேலும், இந்தியா தற்போது ட்ரோன் தயாரிப்பில் முன்னணி வகிக்கிறது. இந்திய தயாரிப்பு ட்ரோன்களை வாங்க பல நாடுகள் ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தியா படிப்படியாக ஒரு வல்லரசு நாடாக மாறி வருவதை அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான், 50% வரி என்ற பூச்சாண்டியை டிரம்ப் காட்டி வருகிறார். இது இந்தியாவில் நடப்பது காங்கிரஸ் ஆட்சி அல்ல, மோடியின் ஆட்சி என்பதை புரிந்துகொள்ள டிரம்ப்பிற்கு இன்னும் பல நாட்கள் ஆகும் என்று மக்கள் கூறுகின்றனர்.