$137 டாலர் மாத்திரை இனி $18 மட்டுமே.. 1,000 மடங்குக்கும் அதிகமாக மருந்துகள் விலை குறைப்பு.. டிரம்ப் செய்த ஒரே நல்ல விஷயம்.. அமெரிக்க மக்கள் நிம்மதி பெருமூச்சு..

அமெரிக்க அதிபர் டிரம்ப், சுகாதார துறையில் தான் கொண்டு வரவுள்ள மாபெரும் மாற்றங்கள் குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சுகாதார பாதுகாப்பின் விலையை குறைப்பது குறித்து பேசிய டிரம்ப்,…

trump

அமெரிக்க அதிபர் டிரம்ப், சுகாதார துறையில் தான் கொண்டு வரவுள்ள மாபெரும் மாற்றங்கள் குறித்து அறிவித்தார். இந்த அறிவிப்பு அமெரிக்காவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதார பாதுகாப்பின் விலையை குறைப்பது குறித்து பேசிய டிரம்ப், தான் கொண்டு வரவுள்ள புதிய கொள்கைகள் மூலம் சுகாதார காப்பீட்டு செலவுகளையும் குறைக்க முடியும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

டிரம்ப் குறிப்பிட்ட ஒரு மாத்திரையானது, மற்ற நாடுகளில் $10-க்கு விற்கப்படும் நிலையில், அமெரிக்காவில் $137-க்கு விற்கப்படுகிறது. தனது புதிய ஒப்பந்தங்களின் விளைவாக, இந்த மாத்திரையின் விலை விரைவில் $15 அல்லது $18-ஆக குறையும் என்று அவர் அறிவித்தார். இது 1,000 சதவீதத்திற்கும் அதிகமான விலை குறைப்பு ஆகும்.

இந்த நடவடிக்கையை ஆரம்பத்தில் ஆதரித்ததற்காக ஃபைசர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆல்பர்ட் புர்லாவை பாராட்டினார். “ஃபைசர் உட்பட அனைத்து முக்கிய மருந்து நிறுவனங்களுடனும் நாங்கள் ஒப்பந்தங்களை செய்து வருகிறோம்” என்றும், இந்த ஒப்பந்தங்களை ஏற்காத நிறுவனங்களுக்கு கூடுதல் சுங்க வரிகளை விதிப்பதன் மூலம் விலை குறைப்பை உறுதிப்படுத்துவோம் என்றும் டிரம்ப் எச்சரித்தார்.

மருந்துச் சீட்டு மருந்துகளின் விலை குறைவது, ஒட்டுமொத்த சுகாதாரச் செலவுகளிலும், குறிப்பாக மெடிகெய்ட் போன்ற திட்டங்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் கூறினார்.

டிரம்ப் தனது முதல் பதவிக்காலத்தில் இன்சுலின் விலையை $35-ஆக குறைத்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் அதே நேரத்தில் நான் தான் இன்சுலின் விலையை குறைத்தேன், ஆனால் பைடன் அதற்கான பெருமையை பெற்று கொண்டார். அவருக்கு அது எப்படி நடந்தது என்று கூட தெரியாது. இதுபோலவே, தற்போது நாம் கொண்டுவரும் இந்த வரலாற்று சிறப்புமிக்க விலை குறைப்பிற்கும் பெருமையை திருட முயற்சிப்பார்கள்,” என்று டிரம்ப் தனது ஆதங்கத்தை தெரிவித்தார்.

மொத்தத்தில், டிரம்ப் தனது நிர்வாகத்தின் கீழ் மருத்துவ துறையில் மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டுள்ளதாகவும், மருந்து விலைக் குறைப்பு என்பது அமெரிக்கர்களுக்கு பெரிய நிவாரணம் அளிக்கும் என்றும் வலியுறுத்தினார்.