அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தான் ஒரு போர் வீரன் என்று தன்னை தானே கூறிக்கொண்டு தன் நாட்டு மக்களுக்கே அவர் சில பாதகங்களை தெரிந்தோ, தெரியாமலோ செய்து வருகிறார்.
வியட்நாம் போரில் கலந்துகொள்ளாமல், முழங்காலில் எலும்பு ஸ்பர் பிரச்சனை உள்ளதாக மருத்துவரின் கடிதத்தை பெற்றவர் டிரம்ப். 1980களில் பால்வினை நோய்களை தவிர்த்ததை வியட்நாம் போரில் பணியாற்றியதற்கு ஒப்பிட்டவர் என்றும், போரில் பிடிக்கப்பட்டதற்காக ஜான் மெக்கெய்னை அவமானப்படுத்தியவர் என்றும் அவரது கடந்த கால வரலாற்றை பலர் ஞாபகப்படுத்துகின்றனர்.
டிரம்ப், “நான் ஒரு போர் வீரன் என்று நினைக்கிறேன். ஆம், நானும் ஒரு போர் வீரன்” என்று அவர் தன்னை பற்றி பெருமையாக பேசி கொள்வார். அவர், விமானங்கள் அனுப்பியதன் மூலம் போர் வீரராக ஆனதாக குறிப்பிட்டார். அதே சமயம், அவர் ஒருபோதும் போரில் கலந்துகொண்டதில்லை.
டிரம்ப் தனது அரசியல் முடிவுகளால் உண்மையான வீரர்களுக்கு தீங்கு விளைவித்து வருகிறார். வெட்டரன்ஸ் அட்மினிஸ்ட்ரேஷனின் (Veterans’ Administration) செலவினங்களை குறைப்பதால், உண்மையான போர் வீரர்கள் மாதக்கணக்கில் அல்லது வருடக்கணக்கில் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருக்க நேரிடுகிறது. டிரம்ப்பின் கொள்கைகள், கோடீஸ்வரர்களுக்கு வரிச் சலுகை அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. இதனால், சேவை செய்தவர்களுக்கு சிகிச்சை கிடைப்பதில்லை. சிலர் சிகிச்சை கிடைப்பதற்கு முன்பே இறந்துபோக நேரிடும் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது.
டிரம்ப்பின் முரண்பட்ட வாழ்க்கை:
டிரம்ப் ஒரு போர் வீரன் அல்ல. அவர் முழங்கால் பிரச்சனை உள்ளதாகக் கூறி இராணுவத்தில் சேருவதை தவிர்த்தவர். டிரம்ப் தனது வாழ்நாளில் நடத்திய ஒரே சண்டை, ஒரு மெக்டொனால்ட்ஸ் சீஸ் பர்கர் ரேப்பருடன் மட்டுமே என்றும் சமூக வலைத்தளங்களில் கிண்டல் செய்கின்றனர். முன்னதாக, டிரம்ப், தான் போர் வீரர்களுக்கு மதிப்பளிப்பதாக கூறியிருந்தாலும், அவரது செயல்கள் அதற்கு நேர்மாறாக உள்ளன. மேலும், டிரம்ப் தலைமையிலான தற்போதைய குடியரசு கட்சி, உண்மையான ஒழுக்க நெறிகளை மறந்து, அவருக்கு பின்னால் கண்மூடித்தனமாக நிற்பதாக அமெரிக்க மக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
