உலக அரசியல் அரங்கில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ஆகியோரின் சந்திப்பு நாளை நடைபெறவுள்ளது. இந்த சந்திப்புக்கு முன்பே, புடின் தனது பேச்சுக்கு செவிசாய்க்காவிட்டால் “மிகவும் தீவிரமான விளைவுகள்” ஏற்படும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புடினின் பலே திட்டங்கள்: அமெரிக்காவிற்கு அதிர்ச்சி
உக்ரைன் விவகாரத்தில் சமாதான பேச்சுவார்த்தை நடத்த புடின் தயாராக உள்ளார். ஆனால், அவர் ஒரு முன்னாள் உளவாளி என்பதால், ஒவ்வொரு சைகைக்கும் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும் என கூறப்படுகிறது. இந்த சந்திப்புக்கு முன்பாகவே, புடின் இந்தியா, சீனா மற்றும் அரபு நாடுகளுடன் இந்த விவகாரம் குறித்து கலந்தாலோசித்துள்ளார். மேலும், தனது நெருங்கிய நண்பரான வடகொரியா அதிபர் கிம் ஜோங்-உன் உடனும் பேசியிருப்பது அமெரிக்காவை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்த நகர்வுகள், அமெரிக்காவை எதிர்க்க ஒரு புதிய அணி திரட்டப்படுகிறதோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.
பேச்சுவார்த்தையில் புடினின் முக்கிய நிபந்தனைகள்
டிரம்புடன் நடைபெறும் பேச்சுவார்த்தையில் புடின் இரண்டு முக்கிய நிபந்தனைகளை முன்வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒன்று நிலம், அதாவது போரின்போது உக்ரைனின் கைபற்றிய பகுதிகள் ரஷ்யாவுக்கு நிரந்தரமாக சொந்தமாகும். இரண்டாவது கனிம வளம், உக்ரைனில் உள்ள கனிம வளங்கள் நிறைந்த சில பகுதிகளை ரஷ்யா விட்டுக்கொடுக்க வேண்டும்.
இந்த நிபந்தனைகளுக்கு உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி ஒப்புக்கொள்வாரா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உள்ளது. அவரது முடிவு, போரின் எதிர்காலத்தை தீர்மானிக்கும்.
டிரம்பின் நெருக்கடி மற்றும் அமெரிக்காவின் கௌரவம்
ஆனால் இந்த சந்திப்பில் இந்த பிரச்சனைக்கு ஒரு முடிவை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் டிரம்ப் உள்ளார். இல்லையெனில், இன்னும் சில மாதங்களில் ரஷ்யா உக்ரைனை வீழ்த்தி, தான் நினைத்ததை சாதித்துக் கொள்ளும். இது அமெரிக்காவின் கௌரவத்திற்கும், அதன் “வல்லரசு” என்ற பெயருக்கும் மிகப்ரிய சேதத்தை ஏற்படுத்தும். ஆகவே, இதை எல்லாம் மனதில் வைத்தே டிரம்ப் புதினுடன் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த சந்திப்பு, அமெரிக்காவின் சர்வதேச பாதுகாப்பு மற்றும் அரசியல் அதிகாரத்தை நிலைநிறுத்துவதில் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை உணர்த்துகிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
