அமெரிக்க அதிபரின் அரிசி அரசியல்.. அமெரிக்காவுக்கு குறைந்த விலையில் அரிசி விற்கிறாராயா? ஒரே நாளில் வரி போட்டு நிறுத்துவேன்.. இந்தியா சீட்டிங் செய்கிறது.. அமெரிக்க விவசாயிகள் மத்தியில் பேசிய டிரம்ப்.. இந்தியாவில் இருந்து வரும் அரிசி குறைந்த விலையில் கிடைக்கிறது.. இந்த டிரம்ப் அதை நிறுத்திவிடுவாரோ? அமெரிக்க மக்கள் அதிர்ச்சி..!

அமெரிக்காவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் பிரதிநிதிகள், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மலிவான அரிசியை விற்பதன் மூலம் அமெரிக்க…

trump rice

அமெரிக்காவில் இருந்து அரிசி ஏற்றுமதி செய்யும் துறை பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நிர்வாகத்தின் பிரதிநிதிகள், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மலிவான அரிசியை விற்பதன் மூலம் அமெரிக்க சந்தையை சீர்குலைப்பதாக கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளனர். இது ஒரு சாதாரண வர்த்தக நெருக்கடி அல்ல என்றும், இது வெளிப்படையான போட்டிக்கு எதிரான செயல் என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். இந்த குற்றச்சாட்டுகள் குறித்து பேசிய டிரம்ப், இது உடனடியாகத் தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்றும், வரி விதிப்பு மூலம் இதை உடனடியாக சரி செய்யலாம் என்றும் வலியுறுத்தினார்.

அமெரிக்க அரிசி உற்பத்தியாளர்களின் பிரதிநிதிகள் பேசுகையில், தென் மாநிலங்களில் உள்ள அரிசி விவசாயிகள் கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், இவ்வளவு பெரிய அளவில் இறக்குமதியை கண்டதில்லை என்றும் தெரிவித்தனர். எந்தெந்த நாடுகள் இவ்வாறு செய்கின்றன என்ற கேள்விக்கு, அவர்கள் இந்தியா, தாய்லாந்து, மற்றும் சீனா ஆகிய நாடுகளை பிரதானமாக குறிப்பிட்டனர்.

குறிப்பாக, புவேர்ட்டோ ரிக்கோ பிராந்தியம் ஒரு காலத்தில் அமெரிக்க அரிசிக்கான மிகப்பெரிய சந்தையாக இருந்தது. ஆனால், தற்போது அங்கு அமெரிக்காவால் அரிசியை விற்க முடியவில்லை என்றும், சீனா போன்ற நாடுகள் அங்கு அரிசியை இறக்குமதி செய்வதால், பல ஆண்டுகளாக அமெரிக்க அரிசி ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்த சந்தை சீர்குலைப்பை குறித்துப் பேசிய டொனால்டு டிரம்ப், “இந்த நாடுகள் ஏமாற்றுகின்றன. அவர்கள் தங்கள் உற்பத்திக்காக மானியம் அளிக்கிறார்கள். இந்தியா ஏன் இதைச் செய்ய அனுமதிக்கப்படுகிறது? அவர்கள் வரி செலுத்த வேண்டாமா? அரிசிக்கு மட்டும் அவர்களுக்கு விலக்கு உள்ளதா?” என்று கேள்வி எழுப்பினார். உடனடியாக இதற்கு வரி விதிக்கப்பட வேண்டும் என்றும், இந்த வர்த்தக முறைகேடுகளுக்கு எதிராக உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவுக்கு எதிராக புகார் அளிக்க வேண்டும் என்றும் டிரம்ப் நிர்வாகப் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். மேலும், இந்திய நிறுவனங்களே அமெரிக்காவில் சில்லறை வர்த்தகத்தில் உள்ள மிகப்பெரிய அரிசி பிராண்டுகளில் இரண்டை வைத்திருப்பதால், மானியம் அளித்து தங்கள் தயாரிப்புகளை சந்தையில் நிலைநிறுத்த அவர்களுக்கு ஊக்கம் கிடைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டது.

இந்த நெருக்கடி குறித்துப் பேசியபோது, இது வெறுமனே ஒரு கமாடிட்டி பொருள் பற்றிய பிரச்சினை மட்டுமல்ல, இது ஒரு தேசிய பாதுகாப்பு பிரச்சினை என்றும் பிரமுகர்கள் தெரிவித்தனர். பல நாடுகளில் அரிசி என்பது ஒரு நாணயமாக கருதப்படுகிறது. அமெரிக்க விவசாயிகள் இந்த நாட்டுக்கும் மற்ற பல நாடுகளுக்கும் உணவளிக்க முடியும். ஆனால், அதற்கு அவர்களுக்கு நியாயமான வர்த்தகம் தேவை என்று அவர்கள் வலியுறுத்தினர். மேலும், தற்போது அரிசியின் விலை கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைவாக உள்ளது என்றும், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிப்பதாகவும் கவலை தெரிவித்தனர்.

இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த டிரம்ப், வரிகள் விதிப்பதன் மூலம் இந்த சிக்கலை ஒரு நாளுக்குள் தீர்க்க முடியும் என்று உறுதி அளித்தார். சட்டவிரோதமாக ஏற்றுமதி செய்யும் இந்த நாடுகளுக்கு வரி விதிப்பது மூலம், உங்கள் பிரச்சனை ஒரே நாளில் தீர்க்கப்படும். இது மிகவும் அநியாயமானது. இதுதான் நமது கார் துறையின் 50% தொழிலை இழந்ததற்கும், நமது சிப் தொழில் தைவானுக்கு சென்றதற்கும் காரணம். சரியான நேரத்தில் வரி விதித்திருந்தால், நமது தொழில்களை நாம் இழந்திருக்க மாட்டோம்,” என்று அவர் தனது வர்த்தக கொள்கையை வலியுறுத்தினார்.

இறுதியாக, தற்போதைய நிர்வாகம் சுகாதாரமான உணவு முறையை நோக்கி சந்தையை நகர்த்த விரும்புவதால், உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் ஆரோக்கியமான பொருட்களுக்கு எதிர்காலத்தில் நல்ல வாய்ப்பு உள்ளது என்று விவசாயத்துறைக்கான அதிகாரிகள் தெரிவித்தனர். இருப்பினும், தற்போதைய சந்தை சீர்குலைவை சரி செய்ய, டிரம்ப் பரிந்துரைத்தபடி உடனடி வரி விதிப்பை அமல்படுத்த வேண்டும் என்றும், இதுவே விவசாயிகளை இந்த நெருக்கடியில் இருந்து காப்பாற்றும் ஒரே வழி என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.