நெருங்குகிறது ஏப்ரல் 5.. இனி டிக்டாக் செயலியை மறந்துவிடுங்கள்.. மீண்டும் வருகிறது தடை..!

  டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 5ஆம் தேதி வரை கெடு விதித்திருந்த நிலையில், இதுவரை விற்பனைக்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை. இதனால்,…

tiktok 1

 

டிக் டாக் செயலியை அமெரிக்க நிறுவனத்திற்கு விற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏப்ரல் 5ஆம் தேதி வரை கெடு விதித்திருந்த நிலையில், இதுவரை விற்பனைக்கான எந்தவிதமான அறிகுறியும் தெரியவில்லை. இதனால், ஏப்ரல் 5 முதல் இந்த செயலி தடை விதிக்கப்படும் என்று கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நிறுவனத்திற்கு விற்பனை செய்ய வேண்டும் என்ற முறையில், அதிபராக பொறுப்பேற்றபோது டிரம்ப் உத்தரவிட்டார். டிக்டாக்கை வாங்க பல அமெரிக்க நிறுவனங்கள் முன் வந்தன. “நானே கூட விற்று தருகிறேன்” என்று டிரம்ப் கூறிய நிலையிலும், டிக் டாக் தற்போது இந்த நிறுவனத்தை விற்க விரும்பவில்லை என்று கூறப்படுகிறது.

டிக் டாக் செயலியை நடத்திவரும் பைடான்ஸ் ஒரு சீன நிறுவனம் என்பதால், அமெரிக்க பயனர்களின் தகவல்கள் சீன அரசுக்கு வழங்கப்படலாம் அல்லது செயலியின் அல்காரிதங்களை சீன அரசு மாற்றிவிடலாம் என்ற அச்சம் ஏற்பட்டது. இதன் காரணமாகத்தான், இந்த செயலி விற்பனை செய்யாவிட்டால் தடை விதிக்கப்படும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

கடந்த ஜனவரி மாதம் முதல் காலக்கெடு முடிந்த நிலையில், அதன் பின்னர் 14 மணிநேரம் தடை விதிக்கப்பட்டது. அதனை அடுத்து, டிரம்ப் 75 நாட்கள் மீண்டும் அவகாசம் வழங்கி, ஏப்ரல் 5ஆம் தேதிக்குள் டிக் டாக் செயலியை விற்பனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார்.

ஆனால், தற்போது இந்த செயலியை விற்பதற்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படும் நிலையில், அமெரிக்காவில் ஏப்ரல் 5ஆம் தேதி முதல் டிக் டாக் தடை செய்யப்படலாம். அதன் பிறகு அமெரிக்காவில் இந்த செயலி இயங்காது என்றும் கூறப்படுகிறது.

இருப்பினும், டிக் டாக் பயனாளர்கள் இந்த மூன்று நாட்களுக்குள் ஏதாவது அதிசயம் நடக்கும் என்று காத்திருக்கின்றனர்