Taste Atlas வெளியிட்ட உலகின் 10 மிகச்சிறந்த உணவுகளின் பட்டியலில் இந்தியாவின் இந்த உணவு ஏழாம் இடத்தைப் பிடித்துள்ளது… அது என்ன உணவு தெரியுமா…?

By Meena

Published:

உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் உயிர்வாழ தேவையான ஒன்று உணவு. அதிலும் உணவுகளை வகைவகையாக ருசியாக பலவிதங்களில் நாவிற்கு ருசியாக செய்து சாப்பிட்டு மகிழ்வது மனித இனம் மட்டுமே. ‘இந்த பொறப்பு தான் ருசிச்சு சாப்பிட கிடைச்சது’ என்ற வாசகம் மனித இனத்திற்கே பொருந்தும்.

உலகில் பலதரப்பட்ட மக்கள் தங்களது கலாச்சாரத்திற்கு ஏற்ப, தங்கள் நாட்டின் தட்ப வெப்பநிலைகளுக்கு ஏற்ப உணவினை பிரித்து உண்ணுகிறார்கள். ஒவ்வொரு நாட்டு உணவு கலாச்சாரத்திலும் சிறப்பான ஒன்று கண்டிப்பாக இருக்கும்.

ஆனால் உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் ஒருமித்தமாக விரும்பி உண்ணும் உணவுகளை நம்மால் கண்டறிய முடியும். அதன்படி ‘Taste Atlas’ எனப்படும் ஆன்லைன் உணவு வழிகாட்டி உலகின் சிறந்த பத்து உணவுகளை வரிசைப்படுத்தி உள்ளது.

Taste Atlas என்பது சுவைகளின் கலைக்களஞ்சியம், பாரம்பரிய உணவுகள், உள்ளூர் பொருட்கள் மற்றும் உண்மையான உணவகங்களின் உலக அட்லஸ் ஆகும். இது 10,000 க்கும் மேற்பட்ட உணவுகள் மற்றும் பானங்களை பட்டியலிட்டுள்ளது மற்றும் இன்னும் டஜன் கணக்கானவை ஆராய்ச்சியில் உள்ளன.

தற்போது Taste Atlas வெளியிட்ட உலகின் சிறந்த 10 உணவுகளின் பட்டியல் இதோ: 1. பிகன்ஹா( பிரேசில்) 2.ரொட்டி கானோய் ( மலேசியா ) 3. பாட் காப்ராவ் ( தாய்லாந்து ) 4. பீட்ஸா நெபோலிட்டானா ( இத்தாலி ) 5. குயோடிக் (சீனா ) 6. காவ் சோய் ( தாய்லாந்து ) 7. பட்டர் கார்லிக் நான் ( இந்தியா ) 8. டாங்பவ் ( சீனா ) 9. ஷாஷ்லிக் ( ரஷ்யா) 10. பான்நேங் கறி ( தாய்லாந்து ) ஆகியவை ஆகும். இதில் உங்களுக்கு பிடித்த உணவு வகையை தேர்வு செய்து ருசித்து பார்த்து மகிழுங்கள்.

Tags: Taste Atlas