என்னதான் பெற்றோர்கள் பார்த்து பார்த்து தங்களது பிள்ளைகளை வளர்த்து வந்தாலும் ஏதாவது ஒரு சூழலில் வாழ்வின் தவறான பாதைக்கு சென்று வாழ்க்கையை சீரழிக்கும் வகையில் மோசமான சம்பவங்களிலும் ஈடுபடுவார்கள். அவர்களைத் திருத்தி நல்லவர்களாக மாற்றுவதற்கு பெற்றோர்கள் பல முயற்சி செய்தும் அது கைமேல் பலனளிக்காமல் போய்விடும்.
அப்படி இருக்கையில், தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த தாய் ஒருவர் தனது மகன் பலர் சொல்லியும் கேட்காமல் தவறான பாதைக்கு போனதால் அவரை திருத்துவதற்காக எடுத்த துணிச்சலான முடிவு வந்து தற்போது பலர் மத்தியில் பேசு பொருளாக மாறி உள்ளது. தாய்லாந்து நாட்டின் புரிராம் என்னும் பகுதியைச் சேர்ந்தவர் ஷரபி (Sarapee). இவருக்கு தற்போது 64 வயதாகும் நிலையில், இவரது மகனுக்கு 42 வயதாகிறது.
மகனால் வந்த வினை
ஆனால் வயதுக்கேற்றார் போல எந்த ஒரு வேலையும் இல்லாமல் போதை, குடிப்பழக்கம் உள்ளிட்டவற்றிற்கு அடிமையாக இருந்ததுடன் மட்டுமில்லாமல் சூதாட்டத்திலும் அதிகம் ஈடுபாடுடன் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அவரை திருத்தி நல்வழியில் கொண்டு வர தாய் ஷரபி எடுத்த பல முயற்சிகள் தோல்வியில் தான் முடிந்துள்ளது.
மேலும் மறுவாழ்வு மையத்திலும் தனது மகனை கொண்டு சேர்த்துள்ளார் ஷரபி. ஆனால் அங்கே மகன் மற்றவர்களை ஏதாவது செய்து விடுவாரோ என்ற பயத்தில் வீட்டிலேயே ஒரு அதிரடி முடிவையும் எடுத்துள்ளார் ஷரபி. முன்னதாக தனது தாயையும் அவர் அதிகம் மிரட்டி வந்த நிலையில் தனது வீட்டிலேயே ஒரு சிறையை அமைத்து மகனை அதற்குள் வைத்து கவனிக்கவும் முடிவு செய்ததாக கூறப்படுகிறது. வீட்டுக்குள்ளேயே ஒரு முறை காரை ஏற்ற ஷரபியின் மகன் முயற்சி செய்துள்ளார்.
இதுபற்றி அவரது தாய் பேசுகையில், எனது மகன் வீட்டுக்குள்ளேயே இந்த கூண்டில் இருப்பது தான் அவனுக்கும், எனக்கும் இந்த வீட்டுக்கு அருகே இருப்பவர்களுக்கும் நல்லது என குறிப்பிட்டுள்ளார். மேலும் தனது மகன் நல்வழியில் மீண்டும் திரும்பி வரவேண்டும் என்பது தனக்கு முக்கியம் என்றும் தான் உணவளித்து அங்கேயே தங்க வைப்பதே தனக்கு நிம்மதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கூண்டில் சிறை வைத்த தாய்
இதற்கிடையே மகனுக்காக ஒரு கூண்டை உருவாக்கி வீட்டுக்குள் தாய் அடைத்து வைத்தது தொடர்பான தகவல் தாய்லாந்து நாட்டில் அதிகமாக பரவ உடனடியாக சில அதிகாரிகள் இந்த விஷயத்தில் தலையிட்டு அவர் ஷரபியின் மகனை நல்வழிக்கு கொண்டு வருவதாக உறுதி அளித்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பல வாலிபர்களை இப்படி தவறான வழியில் செயல்படுத்துவதற்கு காரணமாக இருக்கும் நபர்களையும் உடனடியாக கண்டுபிடிக்கும் படி தாய்லாந்து போலீசார்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.