குழந்தை பிறந்த 2 வாரத்தில் ஆசைக்கு இணங்காத மனைவி.. ஆத்திரத்தில் கணவன் செய்த கொடூரம்..!

  தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவிக்கு குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள், தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி அதற்கு மறுத்துவிட்டதால், அவர் தனது…

bedroom

 

தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருவர், தனது மனைவிக்கு குழந்தை பிறந்த இரண்டு வாரங்களுக்குள், தனது ஆசைக்கு இணங்குமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி அதற்கு மறுத்துவிட்டதால், அவர் தனது இரு வார குழந்தையை காட்டில் விட்டுவிட்டதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தாய்லாந்தைச் சேர்ந்த அந்த 24 வயது இளைஞரின் மனைவி, 21 வயதுடைய பெண், சமீபத்தில் ஒரு குழந்தையை பெற்றிருந்தார். இந்த நிலையில், குழந்தை பிறந்த இரண்டே வாரங்களுக்குள் தனது ஆசைக்கு மனைவியை கட்டாயப்படுத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால் மனைவி அதனை நிராகரித்துள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் குழந்தையை எடுத்து காட்டுப் பகுதியில் சென்றுள்ளார். பின்னர், குழந்தையை தரையிலே வைத்தபடி ஒரு புகைப்படத்தை எடுத்து, “இந்த குழந்தையை காட்டிலேயே விட்டுவிட்டு வருவேன்” என்ற மெசேஜ் ஒன்றை தனது மனைவிக்கு அனுப்பியுள்ளார்.

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மனைவி, அந்த மெசேஜை ஸ்கிரீன்ஷாட் எடுத்து, தனது குடும்பத்தினரிடம் அனுப்பியுள்ளார். அவர்கள் உடனடியாக காவல்துறையில் புகார் அளித்தனர். காவல்துறையினர் விசாரணை செய்தபோது, அந்த நபர் குழந்தையுடன் வீடு திரும்பியிருந்ததாகவும், காட்டில் குழந்தையை விட்டுவிட்டதாக கூறப்படுவது தவறானது என்றும் தெரிவித்தார்.

அவர் மேலும், “குழந்தை தூங்கிக் கொண்டிருந்தபோது, புகைப்படம் எடுக்க மட்டுமே கீழே வைத்தேன். விட்டுவிட நான் விரும்பவில்லை” என்றும் கூறியுள்ளார்.

இருப்பினும், அவருக்கு போதைப் பழக்கம் இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, தாய்லாந்து போலீசார் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளனர். அவருக்கு எதிராக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால், மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வாய்ப்பு இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.