தமிழ்நாட்டில் உருவான சிக்கன் 65 இன்று உலக பேமஸ்… என்ன காரணம் தெரியுமா…?

By Meena

Published:

உலகத்தில் பலதரப்பட்ட உணவுகள் கிடைக்கிறது. அதை நாம் எங்கிருந்தாலும் அதை சாப்பிட முடியும். அதேபோல உலகத்தில் என்னதான் விதவிதமான உணவுகள் இருந்தாலும் அனைத்து உலக மக்களும் பொதுவாக ஒரு சில உணவுகளை விரும்பி உண்ணுவர். அதில் உருளைக்கிழங்கு சிக்கன் டீ காபி போன்றவைகள் அடங்கும். அசைவ பிரியர்களுக்கு சிக்கன் என்றாலே நினைவுக்கு வருவது சிக்கன் 65 எனப்படும் சிக்கன் வறுவல் தான்.

இந்த சிக்கன் 65 உருவான இடமே தமிழ்நாடு தான். 1965 ஆம் ஆண்டு புகாரி ஹோட்டலில் உரிமையாளரான ஏ எம் புஹாரி இந்த சிக்கன் வறுவலை கண்டுபிடித்தார். 1965 ஆம் ஆண்டு கண்டுபிடித்ததால் தான் இதற்கு சிக்கன் 65 என்ற பெயர் ஏற்பட்டது. அதற்குப் பிறகு இது தமிழர்களின் பிடித்தமான உணவு மட்டுமல்லாமல் இந்தியா மற்றும் உலகம் எங்கிலும் பரவத் தொடங்கியது.

தற்போது தமிழ்நாட்டில் உருவான சிக்கன் 65 உலக பேமஸ் ஆகியிருக்கிறது. Taste Atlas கணக்கெடுப்பின்படி உலகத்தில் டாப் 10 சிக்கன் பொறித்த உணவுகளில் தமிழ்நாட்டின் சிக்கன் 65 மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. இது அனைவரின் கவனத்தை ஈர்த்து இருக்கிறது.

Taste Atlas ன் டாப் 10 உணவுகளில் தென் கொரியாவின் சிக்கின் என்ற சிக்கன் உணவு முதலிடத்தில் இருக்கிறது. தமிழ்நாட்டின் சிக்கன் 65 உலக அளவில் தற்போது பேமஸ் ஆகி Taste Atlas இல் இடம் பிடித்ததால் வெளிநாட்டவர் இதை விரும்பி வாங்கி உண்கின்றனர்.