விந்தணுக்கள் போட்டியில் வென்றது 18 வயது வாலிபரா? யூடியூபில் நேரலை ஒளிபரப்பு..!

  ஒரு சிறிய அறையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் திரையில் ஒளிபரப்பப்படும் ஓட்டப்பந்தயத்தை கவனிக்கின்றனர். ஆனால் இதில் ஓடுபவர்கள் மனிதர்கள் அல்ல, மைக்ரோஸ்கோப்பில் காணக்கூடிய அளவில் இருக்கும் விந்தணுக்கள். இந்த வித்தியாசமான ‘விளையாட்டு’யை உருவாக்கியவர்,…

sperm

 

ஒரு சிறிய அறையில், நூற்றுக்கணக்கான மக்கள் ஆரவாரத்துடன் திரையில் ஒளிபரப்பப்படும் ஓட்டப்பந்தயத்தை கவனிக்கின்றனர். ஆனால் இதில் ஓடுபவர்கள் மனிதர்கள் அல்ல, மைக்ரோஸ்கோப்பில் காணக்கூடிய அளவில் இருக்கும் விந்தணுக்கள்.

இந்த வித்தியாசமான ‘விளையாட்டு’யை உருவாக்கியவர், 17 வயது பள்ளி மாணவர் எரிக் ஷூ. ஆண்களின் கருத்தரிப்பு பிரச்சனை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், அவர் இந்த நிகழ்ச்சிக்காக ஒரு மில்லியன் டாலருக்கு மேல் நிதி திரட்டினார்.

மனிதர்கள் குழந்தை பெற முடியாத எதிர்காலம் வந்துவிடும் என பயமாக இருக்கிறது என கூறிய எரிக் ஷூ விந்தணுக்களின் வீரியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவே இந்த போட்டியை நடத்தினார்.

ஷூ தனது இளம் வயதிலேயே சமூக ஊடகங்களில் வந்த சில  செய்திகளால் தூண்டப்பட்டார். அதில், கடந்த 50 ஆண்டுகளில் மனிதர்களின் விந்தணுக்கள்  எண்ணிக்கை பாதியாக குறைந்திருப்பதாக கூறப்பட்டது. இதை சீரியஸாக எடுத்துக்கொண்ட ஷூ, இனப்பெருக்கல் ஆரோக்கியம் குறித்து பேச இந்த போட்டியை ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த போட்டி லாஸ் ஏஞ்சலஸில் நடந்தது. போட்டியில் பங்கேற்றவர்கள் முன்கூட்டியே வழங்கிய விந்தணுக்கள் ஒரு விஞ்ஞானி சிறிய 2 மில்லிமீட்டர் பாதைகளில் வைக்கிறார். அந்த பாதையை மைக்ரோஸ்கோப்பில் 100 மடங்கு பெரிதாக்கி, அதை பதிவு செய்து திரையில் ஒளிபரப்புகிறார்கள். பார்வையாளர்கள் அதனை பார்த்து உற்சாகமாக விமர்சனம் செய்கிறார்கள்.

ஷூவின் நோக்கம் சாதாரணமானது, ஆரோக்கிய வாழ்க்கை முறையே விந்தணுக்கள் தரத்தையும், கருத்தரிப்புத் திறனையும் தீர்மானிக்கிறது என்பதை கூறவே அவர் முயற்சிக்கிறார். சரியான நேரத்தில் தூங்குவது, நன்கு சுகாதாரமான ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவது, போதை பொருட்கள் தவிர்ப்பது இவை எல்லாம் உங்கள் விந்தணுக்கள் செயல்திறனை அதிகரிக்கும் என்று அவர் எளிமையாக சொல்கிறார்.

விந்தணுக்கள் போட்டி நிகழ்ச்சி யூடியூபில் நேரலையாக ஒளிபரப்பாகிய நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் தோல்வி அடைந்தவர்களின் பெயர்களை வெளிப்படையாக அறிவிக்கவில்லை என்றும், சம்பந்தப்பட்டவர்களுக்கு மட்டுமே அவர்களுடைய விந்தணுக்கள் வீரியம் குறித்த அறிக்கை அளிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆனால் சில கசிந்த தகவலின்படி 18 வயது வாலிபர் இந்த போட்டியில் வென்றதாக கூறப்படுகிறது.