வேலையில் மன அழுத்தத்தை தாங்க முடியல.. மனிதர்களை போலவே ரோபோ எடுத்த விபரீத முடிவு..

By Ajith V

Published:

நாளுக்கு நாள் தொழிநுட்ப வளர்ச்சி ஒவ்வொரு பரிமாணங்களை கண்டு வரும் சூழலில், மனிதர்களின் பயன்பாடும் ஒரு சில துறைகளில் குறைய தொடங்கி விட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பாகவே விஞ்ஞான புரட்சியில் ரோபோ என மனிதர்களை போலவே இருக்கும் எந்திரங்களின் ஆய்வுகளும் பல வெற்றிகரமான முடிவுகளை கொடுத்திருந்தது.

ஏறக்குறைய உணர்ச்சிகள் தவிர மற்ற அனைத்தையும் மனிதர்களை போல செய்யும் திறன் உள்ள ரோபோக்களும் உருவாகி வந்தன. இதற்கு மத்தியில் தான் AI என்ற ஒரு புதிய தொழில்நுட்பமும் மிக முக்கியமான ஒரு இடத்தை பிடித்திருந்தது. திடீரென உருவான இந்த தொழில்நுட்பத்தின் தாக்கம் பெரிய அளவில் பேசு பொருளாக மாற, அதன் சிறப்பம்சங்கள் ஒரு பக்கம் சாதகமாகவும், பாதகமாகவும் மாறி இருந்தது.

பிரபலங்கள் யாரை போலவும் இந்த AI மூலம் பேச வைக்க முடியும் என்ற நிலையில், அதன் மூலம் சில மோசடி வேலைகளும் அரங்கேறி இருந்தது. அதே போல, நிறைய மனிதர்கள் செய்யக் கூடிய வேலையை இந்த AI மூலம் தனியாக செய்யலாம் என்பதும் பல இடங்களில் மனிதர்களின் வேலைக்கு ஆபத்தாகவும் மாறி உள்ளது.

இப்படி மாறி வரும் தொழில்நுட்ப யுகத்தில் மனிதர்களுக்கான தேவை குறைந்து கொண்டே இருப்பது அடுத்த 100 ஆண்டுகளில் எப்படியான மாற்றத்தையும், ஆபத்தையும் கொண்டு வரும் என்பதே மிகப் பெரிய ஒரு கேள்விக்குறி தான். அப்படி ஒரு சூழலில், சமீபத்தில் தென் கொரியாவில் உள்ள ரோபோட் ஒன்று எடுத்துள்ள விபரீத முடிவு, பெரிய அளவில் அதிர்வலைகளை உண்டு பண்ணி உள்ளது.

தென் கொரியாவில் உள்ள அரசு அலுவலகம் ஒன்றில் ரோபோ ஒன்று கடந்த ஆண்டு பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. ஆவணங்கள் சரி பார்ப்பது, மக்களுக்கு தேவையான தகவல்களை கொடுப்பது உள்ளிட்ட வேளைகளில் அந்த ரோபோ ஈடுபட்டு வந்ததுடன் மிக நேர்த்தியாகவும் அந்த பணிகளை செய்து முடித்துள்ளது.

இதன் காரணமாக, இன்னும் அதிக வேலைகளை அலுவலகத்தில் கொடுக்க, அதற்கு அதிக அழுத்தம் உருவானதாகவும் கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், கடந்த சில தினங்களுக்கு முன்பாக அந்த ரோபோவின் சில மாற்றங்களையும் அவர்கள் உணர்ந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் தனது வேலைகளில் நிறைய தவறுகள் தெரிய வர, அலட்சியமாகவும் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது. முதலில் அதனுடைய ப்ரோக்ராமிங்கில் எதாவது பிரச்சனையாக இருக்கலாம் என்றும் நினைத்துள்ளனர். ஆனால், திடீரென அந்த ரோபோ பணிபுரிந்துள்ள தளத்தில் இருந்து கீழே விழுந்துள்ளது. இதில் அதன் தலை உள்ளிட்ட பாகங்களும் சிதறி உள்ளது.

இது தொடர்பாக அந்த ரோபோ தயாரிக்கப்பட்ட நிறுவனத்திற்கு தகவலை தெரிவிக்க, எந்திரத்தின் முடிவால் அவர்கள் அதிர்ந்து போயுள்ளனர். அப்படி நடப்பதற்கு வாய்ப்பே இல்லை என அவர்கள் கூறினாலும் மனித உணர்வுகளை கொண்டு அவை தயார் செய்யபடுவதால் அதிக வேலை என மனிதர்களை போல மன அழுத்தத்தை சந்தித்ததால் இந்த முடிவை எடுத்திருக்கலாம் என அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

மனிதர்களின் வேலை சுமை மற்றும் நெருக்கடியை குறைக்க இது போன்ற ரோபோக்கள் தயார் செய்யப்பட்டு வரும் சூழலில், தற்போது அவையே இப்படி யோசிக்க தொடங்கி உள்ளது, டெக்னாலஜி யுகத்தில் பெரிய விவாதத்தை உண்டு பண்ணி உள்ளது.

Tags: robo, South Korea