அமெரிக்காவில் இருந்து இந்தியர்களை விரட்ட கடைசி ஆயுதத்தை கையில் எடுத்த பிரிவினைவாதிகள்.. ஆனால் உள்ளூர் மக்கள் ஆதரவு இந்தியர்களுக்கே.. இந்தியர்களை அசைக்க முடியாது.. ஏனென்றால் அவர்கள் மன உறுதி கொண்ட இந்தியர்கள்..!

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பே நகரில் ஒரு உள்ளூர் கவுன்சில் உறுப்பினர் இந்தியர்கள் குறித்த இனவெறி மற்றும் பிரிவினைவாத, வெள்ளை மேலாதிக்க கருத்துகள் குறித்து பேசினார். இந்த பேச்சுக்கு துணை நிலை…

indians

அமெரிக்காவின் ஃப்ளோரிடா மாகாணத்தில் உள்ள பாம் பே நகரில் ஒரு உள்ளூர் கவுன்சில் உறுப்பினர் இந்தியர்கள் குறித்த இனவெறி மற்றும் பிரிவினைவாத, வெள்ளை மேலாதிக்க கருத்துகள் குறித்து பேசினார். இந்த பேச்சுக்கு துணை நிலை ஆளுநர் ஒருவர், இந்திய-அமெரிக்கச் சமூகத்தினருக்கு ஆதரவு தெரிவித்து, அக்குற்றச்சாட்டுகளுக்குத் தீவிர கண்டனம் தெரிவித்துள்ளார்.

பாம் பே நகர கவுன்சிலரின் இனவெறி பேச்சுக்கு தான் அதிர்ச்சியடைந்ததாக கூறிய துணை நிலை ஆளுனர், அச்சமின்றி உண்மையை பேச வேண்டிய கட்டாயம் தனக்கு இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: “உங்கள் கவுன்சில் உறுப்பினர் சொன்னவை உள்நோக்கம் கொண்ட, பிரிவினைவாத, இனவெறி மற்றும் வெள்ளை மேலாதிக்க கருத்துகளாகும். இந்தியா-அமெரிக்க சமூகத்தினர் தங்கள் அண்டை வீட்டார் என்றும், நண்பர்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“இன்று இங்கே கூடியிருக்கும் மற்றும் ஃப்ளோரிடா முழுவதும் உள்ள இந்திய-அமெரிக்க சமூகத்தினரே, நீங்கள் எங்கள் அண்டை வீட்டார்; நீங்கள் எங்கள் நண்பர்கள். என்னுடைய நண்பர்களே, இந்தியர்களாகிய நீங்கள் இந்த நாட்டின் ஒரு பகுதி, நீங்கள் இங்கே இருப்பதை நினைத்து நாங்கள் பெருமை கொள்கிறோம்,” என்று தெரிவித்தார்.

மேலும் கவுன்சில் உறுப்பினரே, உங்கள் பாரம்பரியம் குறித்து பெருமையாக பேசுகிறீர்கள். உங்கள் அமைப்பினர் ஒரு இனவெறி போராட்ட குழு; அது தோல்வியடைந்தது. வெள்ளை மேலாதிக்கமும் தோல்வியடைந்தது. அதனால், நீங்கள் அந்த பாரம்பரியத்தை இன்னும் பிடித்து தொங்கும்போது, நீங்கள் பலத்தை காட்டவில்லை; மாறாக, தோல்விக்கு விசுவாசத்தை காட்டுகிறீர்கள்,” என்று சாடினார்.

வெள்ளை மேலாதிக்க போராட்டத்தின்போதும், முஸ்லிம்கள் குறிவைக்கப்பட்டபோதும், கறுப்பின பிரதிநிதி ஒருவருக்கு மிரட்டல் விடப்பட்டபோதும் மௌனம் காத்த தலைவர்கள், இப்போது திடீரென பேசுவது அரசியல் ஆதாயத்திற்காக இருக்க கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.

கவுன்சிலரின் இனவெறி கருத்துகள் குறித்து வெளிப்படையாக விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இனவெறி மற்றும் வெள்ளை மேலாதிக்கத்தை அவர் கைவிட வேண்டும் என்றும் கூறி துணை நிலை ஆளுனர் தனது பேச்சை முடித்தார்.

அமெரிக்காவில் உள்ள இந்தியர்களை நாட்டை விட்டு துரத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து தோல்வி அடைந்த நிலையில் கடைசியாக இனவெறியை தூண்டும் கடைசி ஆயுதத்தை சில அமெரிக்கர்கள் கையில் எடுத்துள்ளனர். இந்த சவாலையும் உள்ளூர் மக்கள் ஆதரவுடன் அமெரிக்க இந்தியர்கள் சமாளிப்பார்கள், ஏனெனில் அவர்கள் இந்தியர்கள்..