நண்பேன்டா.. மோடியும் புடினும் உருவாக்க இருக்கும் மாஸ்டர் பிளான்.. அமெரிக்காவை லெப்ட் ஹேண்டில் டீல் செய்யும் மோடி.. நீ பாட்டுக்கு சொல்லிகிட்டே இரு.. நாங்க ரஷ்யாவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவோம்.. டிரம்புக்கு மட்டுமல்ல, மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியா கொடுக்கும் அழுத்தமான மெசேஜ்..

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம், வெறும் வழக்கமான இராஜதந்திர வருகை மட்டுமல்ல. இது, இந்தியாவின் மீது அழுத்தத்தை பிரயோகித்து பணிய வைக்க முடியும் என்று நம்பிய…

modi putin1

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் எதிர்வரும் டிசம்பர் மாதம் இந்தியாவுக்கு மேற்கொள்ளவிருக்கும் பயணம், வெறும் வழக்கமான இராஜதந்திர வருகை மட்டுமல்ல. இது, இந்தியாவின் மீது அழுத்தத்தை பிரயோகித்து பணிய வைக்க முடியும் என்று நம்பிய அமெரிக்கா உள்பட அனைத்து நாடுகளுக்கும் ஒரு அரசியல் இடி முழக்கமாக எதிரொலிக்கும் என்று கூறப்படுகிறது.

இந்தியா – ரஷ்யா இடையேயான 23வது வருடாந்திர உச்சி மாநாட்டிற்காக பிரதமர் நரேந்திர மோடியும், அதிபர் விளாடிமிர் புடினும் டெல்லியில் தோளோடு தோள் நின்று உலகின் கவனத்தை ஈர்க்கத் தயாராகி வருகின்றனர். 2021-க்கு பிறகு புடின் மேற்கொள்ளும் இந்த பயணம், தற்போதைய அரசியல் சூழலில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகிறது.

தற்போது உலகெங்கிலும் ரஷ்யா மீது வரிகள், பொருளாதார தடைகள் மற்றும் அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், புடின் இந்தியாவுக்கு வருவது, ரஷ்யாவை தனிமைப்படுத்த மேற்கத்திய நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிக்கும், இந்தியாவை மிரட்ட அவர்கள் எடுக்கும் முயற்சிக்கும் நேரடி சவாலாக உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக, இந்தியாவும் ரஷ்யாவும் மேற்கத்திய நாடுகளின் தடைகள், எச்சரிக்கைகள் மற்றும் அதிருப்தி ஆகியவற்றை எதிர்கொண்டு, தங்கள் கூட்டாண்மையை பிரிக்க மறுத்து வருகின்றன. போர், பனிப்போர் மாற்றங்கள் மற்றும் அரசியல் நெருக்கடிகள் என பல சவால்களை தாண்டி இந்த கூட்டாண்மை நீடித்து வருகிறது.

சமீபத்தில் சீனாவில் நடந்த SCO மாநாட்டின்போது மோடியும் புடினும் சந்தித்து, எரிசக்தி, நிதி மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மை குறித்து விவாதித்தனர். இந்தியா, 2025ஆம் ஆண்டில் ரஷ்ய எரிசக்திக்கு ஒரு பெரிய உயிர்நாடியாக உருவெடுத்தது. இதுவே இந்திய-ரஷ்யா உறவை உடைக்க மேற்கத்திய நாடுகள் தீவிரம் காட்ட காரணம்.

ரஷ்யா வழங்கிய பில்லியன் டாலர் மதிப்புள்ள சலுகை விலை கச்சா எண்ணெய் காரணமாக, இந்தியா சுமார் $13 பில்லியன் எரிசக்தி செலவைக் குறைத்து, பணவீக்கத்தை கட்டுக்குள் வைத்தது. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்க கூடாது என்று அமெரிக்கா எவ்வளவோ சொல்லியும், இந்தியா அதை காதில் வாங்கி கொள்ளவில்லை.

இந்தியாவின் இராணுவ தளவாடங்களில் பெரும்பாலானவை ரஷ்யாவிலிருந்து வந்தவை. அத்துடன், சவாலான இரண்டு எல்லைகளில் இருக்கும் நெருக்கடியை சமாளிக்க இந்தியாவின் பாதுகாப்புத் தற்சார்பு ரஷ்யாவுடனான உறவில் தங்கியுள்ளது. இந்த காரணங்களை இந்தியா தொடர்ந்து நியாயப்படுத்தி வருகிறது.

மேற்கத்திய அழுத்தத்திற்கு பணியாமல், இறையாண்மை கொண்ட தனது எரிசக்தி தேர்வுகளை இந்தியா தற்காத்தது. இந்தியாவின் பொருளாதார ஸ்திரத்தன்மைக்கு ரஷ்யாவின் ஒத்துழைப்பு அவசியம் என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். வரும் உச்சி மாநாட்டில், இந்தியாவும் ரஷ்யாவும் பல முக்கிய அம்சங்களில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்தத் திட்டமிட்டுள்ளன.

1. தொழிலாளர் திறன் இடம்பெயர்வு ஒப்பந்தம்

சமீபத்திய தடைகள் மற்றும் மக்கள்தொகை சவால்களால் ரஷ்யாவில் ஏற்பட்டுள்ள கடுமையான தொழிலாளர் பற்றாக்குறையை நிரப்பவும், இந்தியாவில் இருந்து திறமையான தொழிலாளர்களுக்கு சட்டப்பூர்வமான வேலைவாய்ப்பு பாதைகளை உருவாக்கவும் ஒரு முக்கிய தொழிலாளர் திறன் இடம்பெயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகவுள்ளது. இது, தடைகளுக்கு உட்பட்ட ரஷ்யாவுடன் இந்தியா ஒத்துழைப்பை ஆழப்படுத்த அஞ்சவில்லை என்ற அரசியல் செய்தியை உலகிற்கு உணர்த்துகிறது.

2. தடைகளை எதிர்க்கும் நிதி மற்றும் எரிசக்தி ஒத்துழைப்பு

டாலர் அல்லாத வர்த்தகம் அதாவது ரூபாயை அடிப்படையாக கொண்ட வர்த்தக முறையை விரிவுபடுத்துதல், உள்ளூர் நாணய பரிவர்த்தனை வழிமுறைகளை வலுப்படுத்துதல் போன்றவற்றின் மூலம், இந்தியாவும் ரஷ்யாவும் தடைகளை எதிர்க்கும் ஒரு மாற்று நிதி கட்டமைப்பை அமைத்து வருகின்றன.

3. பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம்

மேற்கத்திய அழுத்தங்கள் இருந்தபோதிலும், ரஷ்யா இந்தியாவின் முதன்மை இராணுவ விநியோகஸ்தராக உள்ளது. விமான பாதுகாப்பு அமைப்புகள், நீர்மூழ்கி கப்பல்கள், போர் விமானங்கள், கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்ற திட்டங்கள் குறித்து விவாதிக்கப்படும்.

ரஷ்யா, SU-57 ஐந்தாம் தலைமுறை ஸ்டெல்த் போர் விமானத்துக்கான தொழில்நுட்ப பரிமாற்றத்தை எந்தவித நிபந்தனைகளும் இன்றி வழங்க தயாராக உள்ளது. இது பாதுகாப்பு தற்சார்புக்கு இந்தியா அளிக்கும் முக்கியத்துவத்தையும், அதை பூர்த்தி செய்ய ரஷ்யா தயாராக இருப்பதையும் காட்டுகிறது.

புடின் – மோடியின் இந்த சந்திப்பு, உலகளாவிய அதிகார சமநிலையை மறுபரிசீலனை செய்ய உலகை வற்புறுத்தும் ஒரு முக்கிய செய்தியாகும். இந்தியாவும் ரஷ்யாவும் கூட்டாளிகளை தாங்களே தேர்ந்தெடுக்கும், தங்கள் எதிர்காலத்தை அவர்களே வடிவமைப்பார்கள், மேற்கத்திய அங்கீகாரத்திற்காக காத்திருக்க மாட்டார்கள் என்ற அறிவிப்பே இந்த மாநாடு.