பூமி ஃப்ளாட்டா தான் இருக்கு.. 31 லட்சம் செலவு செய்து நிரூபிக்க பாத்த பிரபலம்.. கடைசியில் நடந்தது என்ன..

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியை பற்றி பலருக்கும் தெரியாத நிறைய மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நமது பார்வையில் நிலம், வானம், சூரியன், நிலா, நட்சத்திரம் உள்ளிட்ட விஷயங்கள் தெரிந்தாலும் இவற்றிற்கு…

Man on Earth is Flat

நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியை பற்றி பலருக்கும் தெரியாத நிறைய மர்மங்கள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. நமது பார்வையில் நிலம், வானம், சூரியன், நிலா, நட்சத்திரம் உள்ளிட்ட விஷயங்கள் தெரிந்தாலும் இவற்றிற்கு அப்பாற்பட்டு என்ன இருக்கிறது என்பதே பெரிய மர்மம் தான். ஒரு பக்கம் நிறைய ஆராய்ச்சிகள் விண்வெளி மையங்கள் மூலம் நடைபெற்று வரும் நிலையில், செவ்வாய் உள்ளிட்ட கிரகங்கள் பற்றியும் அவ்வப்போது வியப்பான தகவல்கள் வெளியாகி வந்த வண்ணம் உள்ளது.

பூமியை போல வேறு கிரகங்கள் நிஜத்தில் உள்ளதா, அங்கேயும் மனிதர்கள் போல உயிரினங்கள் உள்ளதா என்ற பல கேள்விகளும் நீங்காத மர்மமாக தான் இருந்து வருகிறது. இந்த பிரபஞ்சத்தில் பூமி என்ற சிறிய கோளுக்குள் நாம் வாழ்ந்து வரும் சூழலில், இது உருண்டை வடிவில் இருப்பதாகவே பல ஆராய்ச்சி முடிவுகள் தெரிவிக்கின்றது.

பூமி உருண்டை வடிவம் இல்லையா?..

ஆனால், அதே நேரத்தில் பூமி உருண்டை வடிவத்தில் இல்லை என்றும் அது பிளாட்டா (தட்டை) தான் உள்ளது என்றும் பலர் மறுத்து வருகின்றனர். அந்த வகையில், Jeran Campanella என்ற பிரபல யூடியூர், பூமி தட்டையா இருப்பதை உணர்த்த ஆய்வு மேற்கொண்டுள்ளார். பூமி தட்டையாக உள்ளது என பல தியரிகள் இருக்கும் சூழலில் அதனை நிரூபிக்க களமிறங்கி உள்ளார் ஜேரன்.
Jeran on Earth Flat

இதற்காக அண்டார்டிகாவிற்கு பயணம் மேற்கொண்டுள்ளார் ஜேன் கேம்பனெல்லா. இதற்காக சுமார் 37,000 டாலர்களையும் (இந்திய மதிப்பில் 31 லட்சம்) மொத்தமாக செலவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தட்டையான பூமியில் விளிம்பில் அண்டார்டிகா ஐஸ் பூமியாக இருப்பதை உறுதி செய்யும் பொருட்டு, சூரியினும் 24 மணி நேரம் இயங்கவில்லை என்பதையும் சேர்த்து நிரூபிக்க நினைத்துள்ளார் ஜேன்.

நான் நினைச்சது தப்பு தான்..

அண்டார்டிகா செல்வதற்கு முன்பாக அங்கே சூரியன் மறையவோ, உதிக்கவோ செய்யாமல் 24 மணி நேரமும் நிலையானதாக இருக்கும் என ஜேன் நம்பியுள்ளார். அண்டார்டிகாவில் கோடை சமயத்தில் நள்ளிரவிலும் சூரியனை கவனித்துள்ளார் ஜேன். துருவ பகுதிகளுக்கு இது தனித்துவமாக இருப்பதுடன் பூமி உருண்டை வடிவில் இருப்பதற்கு சிறந்ததாராமாகவும் மாறிப் போனது.
Earth Flat

இது பற்றி பேசியுள்ள ஜேன், சில நேரங்களில் நாம் நினைப்பது தவறாக இருக்கலாம் என்றும், 24 மணி நேரமும் பூமியை சூரியன் சுற்றி வருவதை நம்பாத நான் இப்போது அதனை நம்புகிறேன் என்றும் கூறியுள்ளார். மேலும் பூமி தட்டையாக இருப்பதாக தான் குறிப்பிட்டு வந்த நிலையில், அதுவும் உண்மை என்பது தனக்கு தெரிய வந்துள்ளதாகவும் ஜேன் குறிப்பிட்டுள்ளார்.

பூமி தட்டையாக இருப்பதை சுமார் 31 லட்ச ரூபாய் செலவு செய்து உறுதிப்படுத்த நினைத்த ஜேன், பின்னர் தனது தியரியில் தவறு இருப்பதையும் உணர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.