ஆற்றின் கரையில் நின்ற பழங்குடியின மக்கள் கூட்டம்.. உலகையே அலற வைத்த பின்னணி…

By Ajith V

Published:

சில நேரங்களில் உலகின் பல இடங்களில் ஏதாவது அதிர்ச்சி நிறைந்த செய்திகள் வெளியாகி நிச்சயம் மக்களை ஒரு விதத்தில் சில்லிட வைக்கும். இப்படி கூட நடக்குமா என்பதுடன் ஒரு விதமான பயத்தையும் நமது மனதில் கடத்தி செல்லும். இதனிடையே தற்போது பெரு பகுதியில் உள்ள ஒரு ஆற்றின் கரையோரம் அரங்கேறி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இன்று நாளுக்கு நாள் செல்ல செல்ல பல புது விதமான தொழில்நுட்பங்களும் மக்கள் மத்தியில் வைரலாகி வரும் நிலையில் மனிதர்களை தாண்டி எந்திரங்கள் என அடுத்தடுத்த வளர்ச்சிகளும் மிக அபூர்வமாக இருந்து வருகிறது. ஆனால் அதே வேளையில் இப்போது இருக்கும் மக்கள் அளவிற்கு கூட எந்தவித தொடர்பும் இல்லாமல் பல பழங்குடியின மக்கள் இந்த உலகத்தில் இருந்தும் வருகின்றனர்.

இவர்கள் கிராமம், நகரம் உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுடன் எந்தவித தொடர்பும் இல்லாமல் பழங்காலத்தில் எந்த விஷயங்களை பின்பற்றினார்களோ அப்படியே இன்று வரை காட்டுப் பகுதிகளில் வாழ்ந்து வருவது கேட்பதற்கே மிகவும் அதிசயமாக தான் இருக்கும்.

தங்களை விட உடையிலிருந்து மாறுபட்டிருக்கும் மக்களை இவர்கள் பார்த்தாலே ஏதோ வேற்று கிரகவாசியை போல நினைப்பதுடன் மட்டுமில்லாமல் அவர்களை தாக்குவதற்கும் கூட முயற்சிகளை செய்வார்கள்.

உலகம் தோன்றிய காலத்தில் மக்கள் எப்படி இருந்தார்களோ அதே போல இப்போதும் அவர்கள் இருந்து வரும் நிலையில் பெரு பகுதியில் உள்ள ஆற்றின் கரையோரம் சில பழங்குடியின மக்கள் கும்பலாக அங்கே தென்பட்டது தான் தற்போது மிகப்பெரிய அளவில் பேசுபொருளாக மாறி உள்ளது.

மாஸ்கோ பிரோ (Mashco Piro) எனும் பழங்குடியின மக்கள், உலகிலேயே அதிகமான வரலாற்றை கொண்ட உலகுடன் தொடர்பு இல்லாத பழங்குடியின மக்களாகும். பெருவின் அமேசான் ஆற்றின் அருகே சில மைல் தூரத்திற்கு முன்னால் மரத்தை வெட்டுவதற்காக ஒரு பெரிய நிறுவனம் அங்கே முகாமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றது. பழங்குடியின மக்கள் காடுகளை பேணி பாதுகாத்து வருவதால் அங்கே மரங்கள் வெட்டுப்பட்ட தகவல் அறிந்து கோபத்தில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதனை கருதி தான் அவர்கள் தங்கள் வாழும் இடங்களில் இருந்து வெளியே வந்து அந்த ஆற்றின் கரையோரம் முகாமிட்டதாகவும் சொல்லப்படுகிறது. ஏறக்குறைய ஐம்பதுக்கு மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் வயதான இந்த பழங்குடியின மக்கள் ஆயுதங்களுடன் அங்கே வந்திருந்ததாக தகவல்கள் கூறும் நிலையில் அவர்களுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களுக்கான உரிமைகளை பல நிறுவனங்கள் சொந்தமாகி கொண்டு அதை வெட்டுவதற்கான வேலைகளில் இயங்கி வந்துது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

இதனால் அங்கே மரம் வெட்டிவரும் நிறுவனங்கள் அதனை நிறுத்திவிட்டு விலகுவது தான் நல்லது என்றும் இல்லையென்றால் இந்த பழங்குடியின மக்களின் கோபத்திற்கு ஆளாவார்கள் என்றும் பலரும் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தும் வருகின்றனர். தாங்கள் வாழும் பகுதியில் இருந்து புற உலகிற்கு வந்த இந்த மக்களால் தற்போது ஒட்டுமொத்த உலகமே பரபரத்து தான் கிடக்கிறது.