நாய், பூனை கூடயும் மனுஷங்க பேச முடியுமா.. AI மூலம் நடக்கப் போகும் புதிய புரட்சி.. கூடவே ஒரு ஆபத்தும் இருக்கு..

By Ajith V

Published:

நாளுக்கு நாள் செல்ல பல ஆண்டுகளுக்கு முன் மனிதர்களால் நினைத்து பார்க்க முடியாத விஷயங்கள் தற்போது விஞ்ஞானம், அறிவியல் ஆகியவற்றின் உதவியுடன் அரங்கேறி வருகிறது. செல் போன் என்ற ஒன்று உருவாவதற்கு முன்பாக பல மைல் தூரத்தில் இருக்கும் ஒருவருடன் பேசுவது என்பது என்றைக்கும் முடியாத காரியமாக தான் பலருக்கும் நிச்சயம் தோன்றி இருக்கும்.

இதன் பின்னர் டெலிபோன், மொபைல் போன் உள்ளிடற்றவற்றின் வரவால் மிகப் பெரிய புரட்சியும் ஏற்பட்டது. இப்படி ரோபோ உள்ளிட்ட பல விஷயங்கள் அடுத்தடுத்த பரிமாணங்களாக மாறி வரும் சூழலில், சமீப காலமாக விஞ்ஞான உலகில் மிகப் பெரிய புரட்சியாக இருப்பது AI பற்றிய விஷயம் தான். ஒரு நுண்ணறிவு செயலியாக இந்த AI இருக்கும் சூழலில், இதனால் பல வேலைகளையும் மிக எளிதில் மனிதர்களால் செய்ய முடிகிறது.

ஆனால், இன்னொரு பக்கம் இந்த AI மூலம் நிறைய இடங்களில் மனிதர்களின் வேலையே பறிபோகும் அபாயமும் உருவாகி உள்ளது. ஒரு மனிதனுக்கு நிகராக எந்திரங்களிலும் யோசிக்க வைக்கக் கூடிய இந்த AI மூலம் பாதகமான விஷயங்களும் நிறைய உள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான், AI மூலம் ஒருவர் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பேசிக் கொள்ளும் நாளும் மிக விரைவில் வரும் என்ற வியப்பான தகவல்களும் வெளியாகி உள்ளது. விலங்குகளுக்கு ஐந்தறிவு உள்ள சூழலில், அவர்கள் மாறி மாறி புரியும் படி தொடர்பு கொண்டாலும் மனிதர்களால் அதை நிச்சயம் அறிந்து கொள்ள முடியாது. அப்படி இருக்கையில், AI தொழில்நுட்பம் மூலம் இந்த மாற்றம் நிகழும் என மருத்துவரும் பிரபல அறிவியலாளருமான ஜெஸ் பிரெஞ்ச் (Dr Jess French) கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசுவதன் மூலம், AI தொழில்நுட்பம் மூலம் விலங்குகளை புரிந்து கொள்வதுடன் மட்டுமில்லாமல் அவர்களுடன் பேசிக் கொள்ளலாம் என்றும் கூறி உள்ளார். இதில் மற்றொரு வியப்பான தகவலாக வருங்காலத்தில் நாய்களின் உடல்நிலை சரியில்லாமல் போனால் கூட அவர்களே நேரடியாக கால்நடை மருத்துவர்களிடம் சொல்லும் என்ற நிலை உருவாகலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதில் இருந்து நாம் நிறைய தூரத்தில் இருப்பதாகவும், நாய்கள் உள்ளிட்ட செல்லப்பிராணிகளிடம் இருந்து நிறைய விவரங்களை சேகரித்து கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. அதே வேளையில், இதில் ஒரு ஆபத்து இருப்பதாகவும் ஜெஸ் பிரெஞ்சு குறிப்பிட்டுள்ளார்.

விலங்குகள் உரையாடுவது பற்றி நாம் விவரங்களை சேகரிக்கும் போது இரு விலங்குகள் என்ன பேசிக் கொள்கிறது என்பதை புரிந்து கொண்டாலே மிகப்பெரிய ஆபத்து உருவாகலாம் என்றும் எச்சரித்துள்ளார். ஒரு விலங்கிடம் நாம் தெரிவிக்கும் தகவல், மற்ற அனைத்திடமும் பகிரப்படும் போது அது ஆபத்தாக கூட மாறலாம் என்றும் ஜெஸ் பிரெஞ்சு குறிப்பிடுகிறார்.

தொழில்நுட்பம் மூலம் ஏதேனும் வளர்ச்சி ஏற்படும் போது அதில் சாதகமான விஷயங்கள் இருப்பது போல பாதகமான விஷயங்கள் இருப்பதும் வழக்கம் தான் என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர்.