கோடிக்கணக்கில் ஊழியர்களின் பென்சன் பணம் மாயம்.. ஹேக்கர்களின் கைவரிசையால் அதிர்ச்சி..!

  ஆஸ்திரேலியா நாட்டில் ஊழியர்களின் பென்ஷன் பணம் அடங்கிய இணையதளத்தில் ஹேக்கர்கள் புகுந்து, பணத்தை திருடியுள்ளதாகவும், கோடிக்கணக்கான பணம் இழந்ததாகவும் கூறப்படும் விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி சங்கமான Association of…

12 1434093816 hackers01 1

 

ஆஸ்திரேலியா நாட்டில் ஊழியர்களின் பென்ஷன் பணம் அடங்கிய இணையதளத்தில் ஹேக்கர்கள் புகுந்து, பணத்தை திருடியுள்ளதாகவும், கோடிக்கணக்கான பணம் இழந்ததாகவும் கூறப்படும் விவரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலிய ஓய்வூதிய நிதி சங்கமான Association of Superannuation Funds of Australia , இது குறித்து கூறிய போது, பல ஊழியர்களின் கணக்குகளில் ஹேக்கர்கள் புகுந்துள்ளனர் என்றும், AustralianSuper, Australian Retirement Trust, Rest, Insignia மற்றும் Hostplus ஆகிய நிறுவனங்கள் தாக்குதலை உறுதிப்படுத்தியுள்ளன என்றும் தெரிவித்தது.

சுமார் 3.5 மில்லியன் உறுப்பினர்களுக்காக A$365 பில்லியன் பணத்தை நிர்வகிக்கும் நாட்டின் மிகப்பெரிய ஓய்வூதிய நிதி அமைப்பில் ஹேக்கர்கள் புகுந்துள்ளதாகவும், சுமார் 600 உறுப்பினர்களின் பாஸ்வேர்டுகள் திருடப்பட்டுள்ளதாகவும், அந்த கணக்குகளில் இருந்து மோசடியாக பணம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, அனைத்து உறுப்பினர்களும் தங்கள் ஆன்லைன் சேமிப்புகளை சரிபார்க்க வேண்டும் எனவும், பாஸ்வேர்டுகளை உடனடியாக மாற்ற வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதுவரை வந்த தகவலின் படி, சுமார் A$500,000 (ஆஸ்திரேலியா டாலர்) சைபர் குற்றவாளர்களால் திருடப்பட்டுள்ளதாகவும், இது இந்திய மதிப்பில் சுமார் ரூ.4 கோடியை அதிகமாகத் தாண்டும் என்றும் கூறப்படுகிறது.

நூற்றுக்கணக்கான கணக்குகளில் சந்தேகத்திற்கிடமான வகையில் உள்நுழைவுகள் நிகழ்ந்ததாகவும், ஆனால் பல கணக்குகளில் பண பரிவர்த்தனைகள் நடைபெறாததால், மேலும் பண இழப்புகள் தவிர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுவருகிறது. மோசடியில் ஈடுபட்ட ஹேக்கர்கள் யார் என்பதைப் பற்றி தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவரும் என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.