18 வருடத்தை வீணடிச்சுட்டாங்க.. வாழ்க்கையை தியாகம் செய்த தாய்க்காக மகன் எடுத்த துணிச்சல் முடிவு..

ஒரு காலத்தில் எல்லாம் கணவரே கண்கண்ட தெய்வம் என்பது போலத்தான் அனைவரும் சித்தரித்து வந்த சூழலில் ஒரு பெண் தனது கணவர் இறந்து பல ஆண்டுகளானாலும் வேறு திருமணத்தை செய்யாமல் தனிமையாக வாழ்வதை மிக…

18 Year old son love for mother

ஒரு காலத்தில் எல்லாம் கணவரே கண்கண்ட தெய்வம் என்பது போலத்தான் அனைவரும் சித்தரித்து வந்த சூழலில் ஒரு பெண் தனது கணவர் இறந்து பல ஆண்டுகளானாலும் வேறு திருமணத்தை செய்யாமல் தனிமையாக வாழ்வதை மிக கண்ணியமான விஷயமாகவும் குறிப்பிட்டு வந்தனர். ஆனால் காலப்போக்கில் இந்த நிலைமை மாற தனியாக ஒருவர் வாழ்வது என்பதே மிக சித்ரவதையான விஷயம் என்றும் பலர் குறிப்பிட்டு வந்தனர்.

அந்த வகையில் தான் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் பல ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொண்ட நிலையில் இதற்கு ஆதரவாக அவரது 18 வயது மகனே நின்ற சம்பவம் தான் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது. என்ன தான் வாழ்க்கை முழுவதும் ஒரு துணையுடன் வாழ்வதற்காக நாம் முடிவு எடுத்தாலும் வழியில் ஏதாவது பிரச்சனை வந்து அவர்கள் மறைவதற்கோ, அல்லது நம்மை விட்டு பிரிந்து செல்வதற்கான வாய்ப்புகளும் கூட உருவாகலாம்.

தாய்க்கு 2 து திருமணம்

அப்படி இருக்கும் போது மீதம் இருக்கும் வாழ்நாளை அவரையே நினைத்து கலங்கி கொண்டு இருப்பதை விட நமது அன்பை பகிர்ந்து கொள்வதற்கு இன்னொரு நபரை தேடுவது எந்த விதத்திலும் தவறு கிடையாது. இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அப்துல் ஆஹாத் என்ற 18 வயது இளைஞர் ஒருவர் தனது தாய்க்காக செய்த விஷயம் பற்றி அவரே தனது சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

பொதுவாக பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் தொடர்ந்து சர்வதேச அளவில் விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் துணிச்சலாக இந்த இளைஞர் தனது தாய்க்காக ஒரு முடிவையும் எடுத்துள்ளார். தனது தாயின் இரண்டாவது திருமணத்தை தானே முன்வந்து நடத்தியுள்ளார் 18 வயது இளைஞர் அப்துல் ஆஹாத்.

நெகிழ வைத்த மகன்

அதன் வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பகிர்ந்து, “கடந்த 18 ஆண்டுகளில் என்னால் முடிந்த அளவுக்கு எனது தாய்க்கு ஒரு சிறப்பான வாழ்க்கை கொடுப்பதற்கான முயற்சிகளில் இறங்கினேன். அவர் எங்களுக்காக தனது ஒட்டுமொத்த வாழ்க்கையும் கடந்த 18 ஆண்டுகளாக தியாகம் செய்து வருகிறார். ஆனால் அதே நேரத்தில் எனது தாய்க்கு சமாதானமான ஒரு வாழ்க்கையும் தேவைப்படுகிறது.

இதனால் ஒரு மகனாக நான் அவருக்கு ஒரு சிறந்த வாழ்க்கையை அமைத்து கொடுக்க முடிவு செய்தேன். 18 ஆண்டுகள் கழித்து எனது தாய் அன்பையும், வாழ்க்கையும் தேடிக் கொள்வதற்காக இரண்டாவது திருமணத்தையும் நான் நடத்தி வைத்தேன்” என உணர்ச்சி பொங்க குறிப்பிட்டுள்ளார்.

துணை இல்லாமல் இருக்கும் போது இரண்டாவது திருமணம் என்பது இன்னும் பல இடங்களில் ஏதோ தவறான பார்வையில் பார்க்கப்பட்டு வரும் நிலையில் மகனே முன்நின்று தனது தாயின் வாழ்க்கை வெற்றிடமாக கூடாது என செய்த இந்த விஷயம் பலர் மத்தியில் பாராட்டுகளையும் பெற்று வருகிறது.