16 வயது ஆகிவிட்டால் போதும்.. தனி இடம் தயார்.. மகள்களுக்கு பாலியல் சுதந்திரம் தரும் பெற்றோர்.. வினோதமான கலாச்சாரம்..!

16 வயதில் உங்கள் பெற்றோர், படிப்பதற்காக அல்லாமல், துணையை தேடுவதற்கு என தனியாக ஒரு குடிசையை கட்டிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? சிலருக்கு இது விசித்திரமாக தோன்றலாம். ஆனால், கம்போடியாவின் ஒரு பழங்குடியின பகுதியில்…

love hut

16 வயதில் உங்கள் பெற்றோர், படிப்பதற்காக அல்லாமல், துணையை தேடுவதற்கு என தனியாக ஒரு குடிசையை கட்டிக் கொடுத்தால் எப்படி இருக்கும்? சிலருக்கு இது விசித்திரமாக தோன்றலாம். ஆனால், கம்போடியாவின் ஒரு பழங்குடியின பகுதியில் இதுதான் நடக்கிறது. அங்கே, காதலுக்கு என்று பிரத்யேகமான ‘காதல் குடிசைகள்’ உள்ளன.

கிரூங் பழங்குடியினரின் வியக்க வைக்கும் பாரம்பரியம்:

கிரூங் பழங்குடியினரை சேர்ந்த டீன் ஏஜ் பெண்களுக்கு, குடும்பத்தின் முழு ஆதரவுடன், உறவுகளை ஆராய்வதற்கான தனிப்பட்ட இடம் வழங்கப்படுகிறது. இது “காதல் குடிசைகள்” என்று அழைக்கப்படுகிறது. இந்த பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்காக, அவர்களின் வீட்டிலிருந்து சில அடி தூரத்தில் ஒரு சிறிய குடிசையை அமைத்து கொடுக்கிறார்கள். இதன் நோக்கம், அந்த பெண்கள் உண்மையான அன்பை கண்டறிவதற்கு உதவுவதுதான். இதன் விளைவாக, அங்கே வியக்க வைக்கும் வகையில் ஒரு ரொமாண்டிக்கான, மரியாதைக்குரிய, மற்றும் அதிகாரமளிக்கும் கலாச்சாரம் உருவாகியுள்ளது.

“காதல் குடிசைகளின்” நோக்கம்:

இந்த குடிசைகளின் நோக்கம், இளம் பெண்கள் தாங்கள் விரும்பும் பையன்களை இரவில் தங்குவதற்கு அழைப்பதாகும். வெளி உலகத்தில் உள்ளவர்களுக்கு, குறிப்பாக பெண்களின் பாதுகாவலர்களாக பெற்றோர்கள் கருதப்படும் கலாச்சாரத்தை சேர்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால், கிரூங் பழங்குடியினரிடையே, பெண்கள் சுதந்திரமாக தங்கள் துணையைத் தேர்வு செய்யும்போதுதான் உண்மையான அன்பும், நீண்டகால உறவும் உருவாகும் என்ற நம்பிக்கையில் இந்தப் பாரம்பரியம் ஆழமாக வேரூன்றியுள்ளது.

ஆனால், இது ஒழுக்கமற்ற தன்மைக்கான குறியீடு அல்ல. இந்த குடிசைகளில் பெண்கள் பெரிய பார்ட்டிகள் எதுவும் நடத்துவதில்லை. மாறாக, அவர்கள் பையன்களை அமைதியாக பேசவும், ஒருவரையொருவர் புரிந்துகொள்ளவும் அழைக்கிறார்கள். ஒருவேளை அவர்களுக்கு சரியாக தோன்றினால், இரவில் ஒன்றாக தங்கவும் செய்கிறார்கள். ஒரு இளம் பழங்குடியின பெண் ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “ஒரு பையனுடன் நான் படுக்க விரும்பினால், முதலில் அவனது பின்னணியை பற்றி விசாரிப்பேன். அவன் சோம்பேறியாகவோ அல்லது கெட்டவனாகவோ இருந்தால், நான் அவனை அழைக்க மாட்டேன். அவன் நல்லவன், அழகன், மற்றும் சுறுசுறுப்பாக இருந்தால், நான் அவனுடன் தங்குவதற்கு முடிவெடுக்கலாம்” என்று விளக்கியுள்ளார்.

பெண் விடுதலை அதன் உண்மையான வடிவில்:

பல நூற்றாண்டுகள் பழமையான இந்த வழக்கம் பலரை வியப்படைய செய்துள்ளது. இந்த பழங்குடியினரை பார்வையிட்ட பத்திரிகையாளர் ஃபியோனா மேக்ரிகோர் மற்றும் புகைப்படக்காரர் லூயிஸ் குவயில் ஆகியோர், இளம் பெண்கள் அங்கே மிகவும் நம்பிக்கையுடனும், உணர்வுபூர்வமான நுண்ணறிவுடனும், துணையை தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடனும் இருப்பதை கண்டறிந்தனர். அங்கே விவாகரத்துகள் பெரும்பாலும் நடப்பதே இல்லை என்றும், குடும்ப வன்முறை, கற்பழிப்பு போன்ற குற்றங்கள் மிகவும் அரிதானவை என்றும் அவர்கள் கண்டனர். இங்கே எந்தவித அழுத்தமும், அவமானமும் இல்லை. மிக முக்கியமாக, ஒரு பெண் ‘வேண்டாம்’ என்று கூறினால், அது மதிக்கப்படுகிறது.

இந்த “காதல் குடிசை” பாரம்பரியம், பெண்களை தங்கள் துணையை தேர்ந்தெடுப்பதில் மட்டுமல்லாமல், துணையை மதிப்பிடுவதிலும் வலுவான உணர்வை வளர்க்க உதவுகிறது என்று நிபுணர்கள் நம்புகிறார்கள். அவர்கள், சமூக அழுத்தத்திற்கு பணியாமல், ஒருவரின் குணநலன்களை பொறுத்தே தங்கள் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

பகல் நேரத்தில் கிரூங் பழங்குடியினத்தை சேர்ந்த பையன்களும், பெண்களும் ஒருவருக்கொருவர் தூரம் கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், இரவு வந்ததும், இளைஞர்கள் ஒன்றுகூடி பாடுவது, விளையாடுவது மற்றும் கதைகளை பகிர்ந்துகொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுகிறார்கள். நேரம் செல்ல செல்ல, பெண்கள் தங்கள் குடிசைகளுக்கு திரும்பி, ஒரு பையன் வருவான் என்று காத்திருக்கிறார்கள். அதே சமயம், மற்றவர்கள் இரவில் தனியாகவே தங்குகிறார்கள். ஒரு ஜோடி நிச்சயதார்த்தம் செய்ய முடிவெடுக்கும்போது மட்டுமே, அவர்கள் பகல் நேரத்தில் பொதுவெளியில் ஒன்றாக தோன்றுகிறார்கள். அதுவரை, காதல் என்பது ஒரு தனிப்பட்ட பயணமாகவே இருக்கிறது.

இந்த “காதல் குடிசை” பாரம்பரியம் பல கலாச்சாரங்களில் சாத்தியமில்லாமல் இருக்கலாம். ஆனால், கம்போடியாவின் இந்த பகுதியில், இந்த வழக்கம் பெண்கள் அதிகாரமளித்தல், நம்பிக்கை, அக்கறை மற்றும் மரியாதை ஆகியவற்றை அடிப்படையாக கொண்ட உறவுகளை உருவாக்குகிறது