இன்றைய இணைய உலகில் நாம் தூங்கப் போகும் நேரம் தவிர்த்து அனைத்து நேரமும் கையில் 11-வது விரல் போல எந்நேரமும் செல்போனிலே உலா வருகிறோம். சாப்பிடும் போது செல்போன், டாய்லெட்டில் போன், தூங்குவதற்கு முன்னதாக செல்போன் என செல்போனும் அதிலுள்ள வசதிகளும் அடிமைப்படுத்தி விட்டன. இதனால் பலருக்கு செல்போன் இல்லாமல் இருப்பது என்பது முடியாத காரியம். மனதளவில் பலரும் வெளியே தெரியாமல் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதே உண்மை. இப்படி இடைவிடாமல் செல்போனும், கையுமாக இருப்பவர்களுக்காகவே ஒரு போட்டி சீனாவில் நடந்தது.
இன்னொரு தரமான BGM காத்துக்கிட்டு இருக்கு..! குட் பேட் அக்லி அப்டேட் கொடுத்த ஜி.வி.பிரகாஷ்குமார்..
பகல் நேரம் முழுக்க 8 மணிநேரம் செல்போனே பார்க்கக் கூடாது என்ற போட்டி தான் அது. வெண்ணிலா கபடிக் குழுவில் வரும் புரோட்டோ காமெடி போல போட்டிக்கு நாங்களும் வரலாமா என்று பலரும் அந்தப் போட்டியில் கலந்து கொண்டனர். இந்த 8 மணிநேரத்தில் இவர்களுக்கான உணவு, குடிநீர் ஆகியவை அவர்கள் இருப்பிடதிற்கே வந்து விடும். அவர்கள் வேலை என்னவென்றால் சும்மா படுத்திருப்பது தான். இடையில் அவ்வப்போது இயற்கை உபாதைகளுக்காக செல்லலாம்.
செல்போன் இல்லாமல் எந்த பதைபதைப்பும் இல்லாமல் இருக்க வேண்டும் என்பதே போட்டியின் முக்கிய விதி. இதில் பலர் கலந்து கொண்ட நிலையில் கடைசியாக டோங் என்ற ஒரு பெண், விதிகள் படி 8 மணி நேரம் செல்போன் பார்க்காமல் இருக்க பரிசுத்தொகையான ரூ. 1.16 லட்சத்தினை தட்டிச் சென்றார். செல்போனில் அதிக நேரம் செலவழிக்க வேண்டாம் என்ற விழிப்புணர்வினை ஏற்படுத்தும் வகையில் இப்போட்டி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.