தற்போது ஆண்-பெண் இருவருக்குமிடையே ஈகோ என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தங்கள் விருப்பங்களுக்கு மாற்றாக நடக்கும் போது ஒருவருக்கொருவருடன் வாக்குவாதம் ஏற்பட்டு விவாகரத்தில் முடிகிறது. விட்டுக் கொடுத்து புரிந்து வாழ்வது என்பது தற்போது மிகக் குறைந்து வருகிறது.
தொட்டதுக்கெல்லாம் குறை கூறிக் கொண்டு இருவரும் தங்கள் உறவினை முடித்துக் கொள்கின்றனர். இதனால் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது. அந்த வகையில் இங்கு ஒருவர் மணம் முடிக்காமலேயே ஒருவருக்கொருவர் புரிதல் இல்லாத காரணத்தினால் சண்டை வாக்குவாதமாகி இறுதியில் காதலியின் உயிரையே எடுத்திருக்கிறது.
ஆனால் அதற்குரிய காரணம் வெறும் தலைமுடி மட்டுமே. அமெரிக்காவைச் சேர்ந்த 49 வயது காதலன் பெஞ்சமின் குவால் மற்றும் 50 வயது காதலி கார்மென் மார்டினஸ் சில்வா. பொதுவாக பெண்கள் தங்கள் தலைமுடியை அலங்கரிப்பதால் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள். விதவிதமான ஹேர் ஸ்டைல்கள் வைத்து தங்களை அழகுபடுத்துவது இயல்பு. அப்படித்தான் கார்மென் தனது சிகையலங்காரத்தினை மாற்றி வைத்திருக்கிறார்.
இதனைக் கண்ட காதலனுக்கு சுத்தமாகப் பிடிக்கவில்லை. ஹேர் ஸ்டைலை ஏன் மாற்றினாய் என்று கேட்க இருவருக்குமிடையே வாக்குவாதம் முற்றி இறுதியில் பெஞ்சமின் அவரைக் குத்திக் கொலை செய்திருக்கிறார். இதில் கார்மென் சகோதரருக்கும் கத்திக் குத்து விழ அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விருப்பத்திற்கு மாறாக தலைமுடியை வெட்டி அலங்கரித்துக் கொண்டதால் ஆத்திரம் தாங்காமல் இந்தக் கொலையைச் செய்திருக்கிறார் பெஞ்சமின். தற்போது அவரைக் போலீஸார் கைது லான்ஸ்கேண்டர் சிறையில் அடைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட விட்டுக் கொடுக்காமல் வாழ்வது, ஒருவரையொருவர் புரிந்து கொள்ளாமல் இருப்பது, அற்ப சந்தோஷங்களுக்காக தேவையற்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவற்றால் நாளுக்கு நாள் இணைகளுக்கிடையேயான ஊடல் என்பது குறைந்து கொண்டே வருகிறது. இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வாழ்க்கையைத் தொலைப்பது அவர்களின் பக்குவமின்மையையே காட்டுகிறது.