இந்தியர்களை அமெரிக்காவுக்குள் நுழைய விடாதீர்கள்.. சுட்டு கொல்லப்படுவதற்கு முன் சார்லி கிர்க்கின் வைத்த கோரிக்கை.. அதை அப்படியே வழிநடத்தும் டிரம்ப்.. அமெரிக்காவில் திறமையானவர்கள் இருந்தால் எதுக்கு இந்தியாவில் இருந்து கூப்பிடுறீங்க? மூளையில் இந்தியா தான் நம்பர் ஒன்..!

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை அமெரிக்காவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு…

visa1

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், எச்-1பி விசா கட்டணத்தை ஆண்டுக்கு $100,000 ஆக உயர்த்துவதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். இந்த நடவடிக்கை, வெளிநாட்டு ஊழியர்களை, குறிப்பாக இந்திய தொழில்நுட்ப வல்லுநர்களை அமெரிக்காவுக்கு ஈர்க்கும் நிறுவனங்களுக்கு பெரும் சுமையாக இருக்கும்.

டிரம்ப் கையெழுத்திட்ட இந்த உத்தரவு, அமெரிக்காவில் உள்ள தொழிலாளர்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டது என்று அவர் கூறியுள்ளார். “இந்தக் கட்டண உயர்வால், அமெரிக்க நிறுவனங்கள் மிகவும் திறமையான மற்றும் அமெரிக்கர்களால் மாற்ற முடியாத ஊழியர்களை மட்டுமே கொண்டுவரும். இது அமெரிக்க தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை உறுதி செய்யும்” என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

டிரம்பின் இந்த அறிவிப்பு, மறைந்த பழமைவாத விமர்சகரான சார்லி கிர்க்கின் கருத்துகளை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளது. சார்லி கிர்க், தான் சுட்டுக் கொல்லப்படுவதற்கு ஆறு நாட்களுக்கு முன்பு, “அமெரிக்காவிற்கு இந்தியாவிலிருந்து அதிக விசாக்கள் தேவையில்லை” என்று சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். மேலும், “இந்தியாவிலிருந்து வரும் சட்டப்பூர்வ குடியேற்றத்தால் அமெரிக்கத் தொழிலாளர்கள் அதிக அளவில் வேலைவாய்ப்புகளை இழக்கின்றனர். போதும், நமது சொந்த மக்களுக்கு முன்னுரிமை அளிப்போம்” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். சார்லி கிர்க்கின் கருத்துகளை ஏற்று தான் டிரம்ப் இந்த கட்டண அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த புதிய கொள்கையின்படி, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்துவதற்கு அதிக செலவு செய்ய நேரிடும். அதாவது, நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்துடன் கூடுதலாக $100,000 விசா கட்டணத்தையும் செலுத்த வேண்டும். இந்த பொருளாதார சுமை, அமெரிக்க நிறுவனங்கள் உள்நாட்டிலேயே தகுதியானவர்களை பணியமர்த்தும் முடிவுக்குத் தள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்காவில் தற்போது எச்-1பி விசா திட்டமானது, அதிக திறமை வாய்ந்த வெளிநாட்டு பணியாளர்களை பணியமர்த்தும் ஒரு வழியாகவே பார்க்கப்பட்டு வருகிறது. ஆனால், இது குறைந்த ஊதியத்தில் வெளிநாட்டு ஊழியர்களை பணியமர்த்தி, அமெரிக்க தொழிலாளர்களின் வேலைவாய்ப்புகளை பறிப்பதாக பரவலான குற்றச்சாட்டுகள் உள்ளன. டிரம்பின் இந்த அதிரடி நடவடிக்கை, இந்த விவாதங்களுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கருதப்படுகிறது.

சார்லி கிர்க்கின் கருத்துக்களுடன் ஒத்துப்போகும் இந்த கொள்கை, அமெரிக்காவில் குடியேற்ற மற்றும் வேலைவாய்ப்பு விவகாரங்களில் ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று அரசியல் மற்றும் பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.