2024-ம் ஆண்டு முடிய இன்னும் இரண்டு மாதங்களே உள்ள நிலையில் இந்த 60 மாதங்களில் உலக அளவில் ஏற்படப் போகும் மாற்றங்களைக் கணித்து தனது புத்தகத்தில் அன்றே குறிப்பெழுதி வைத்திருக்கிறார் தீர்க்கதரிசியும், எதிர்காத்தினைக் கணித்துக் கூறுவதில் வல்லமை படைத்த பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த நாஸ்டார்டாம்ஸ்.
கி.பி. 1555-ல் தான் எழுதிய புத்தகமான Les Propheties (லெஸ் புரோபெடீஸ்) என்ற கவிதை நூலில் உலகில் அடுத்தடுத்து நிகழப் போகும் மாற்றங்களை குறிப்பு வடிவில் எழுதி வைத்திருக்கிறார். அதன்படி இவர் எழுதியவற்றில் இரட்டை கோபுரம் தகர்ப்பு, இளவரசி டயானா மரணம் போன்றவை இதுவரை நடந்திருக்கிறது.
தற்போது 2024-ம் ஆண்டில் அடுத்த 60 நாட்களில் நிகழப் போகும் மாற்றங்கள் குறித்து தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ள நாஸ்டார்டாம்ஸ்-ன் குறிப்புகள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்தக் குறிப்பில், அடுத்த 60 நாட்களில் கண்டிப்பாக அணு ஆயுதம் தொடர்பான அழிவு ஒன்று ஏற்படும் என்றும், புவி வெப்பமயமாததால் பல கோடி மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றும், மேலும் 3-ம் உலகப்போர் ஏற்பட வாய்ப்பிருப்பதாகவும் இதனால் பல பகுதிகள் பூமியின் வரைபடத்திலேயே இருக்காது எனவும் கணித்திருக்கிறார் நாஸ்டார்டாம்ஸ்.
உங்களுக்கே தெரியாமல் உங்கள் மொபைலில் உளவுச்செயலி புகுந்துவிட்டதா? எப்படி கண்டுபிடிப்பது?
இந்து புராணமான கருட புராணத்தில் சொல்லப்பட்டுள்ளது போன்று தீர்க்கதரிசியாகவும், சோதிடராகவும், மருத்துவராகவும் விளங்கிய நாஸ்டார் டாம்ஸ் தனது நூலில் சொல்லப்பட்டுள்ள கருத்துக்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இதுமட்டுமன்றி, சிவப்பு நிறம் கொண்ட எதிரியால் ஓர் கடற்படைப்போர் உருவாகலாம் என்றும், உலகின் ஒரு பகுதியில் 3 நாட்கள் இருளில் மூழ்கும் என்றும், பிறகு புதிதாக 3 நாட்கள் கழித்து வெளிச்சம் பிறக்கும் போது மனித குலம் மீண்டும் கற்காலத்திலிருந்து வாழ்க்கையைத் துவக்கும் எனவும் நாஸ்டார்டாம்ஸ் அந்த புத்தகத்தில் தெரிவித்திருக்கிறார்.