2009ல் காணாமல் போன பெண்.. ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை.. 16 வருடங்களாக ஒரு துப்பு கூட இல்லை.. உளவாளியா? விசாரணையில் திடுக் தகவல்..!

பிரிட்டனில் 2009 ஆம் ஆண்டு 54 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாகவும், அவரை இன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவரைப் பற்றிய ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் ஒரு…

woman

பிரிட்டனில் 2009 ஆம் ஆண்டு 54 வயது பெண் ஒருவர் மர்மமான முறையில் காணாமல் போனதாகவும், அவரை இன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும், அவரைப் பற்றிய ஒரு துப்பு கூட கிடைக்கவில்லை, குறைந்தபட்சம் ஒரு புகைப்படம் கூட கிடைக்கவில்லை என்றும், இந்த டிஜிட்டல் உலகில் அவர் 16 ஆண்டுகள் எப்படி மறைந்து வாழ்கிறார் என்றே தெரியவில்லை என்றும், ஒருவேளை அவர் அரசாங்க உளவாளியாக இருக்கலாம் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் மார்கேட் நகரில் கடற்கரையை பார்த்தபடி அமைந்திருக்கும் ஒரு குடியிருப்பு பல ஆண்டுகளாக கவனிக்கப்படாமல் இருந்தது. காரணம், அதன் உரிமையாளர் மர்மமான முறையில் காணாமல் போனதுதான். இந்த நிலையில் தான், ஒரு எழுத்தாளர், காணாமல் போன பெண்ணை பற்றி கேள்விப்பட்டு, அவருக்கு என்னதான் நடந்தது என்று விசாரிக்க கிட்டத்தட்ட ஒரு வருடம் செலவிட்டார். அதனைத்தொடர்ந்து, அவர் முதலில் அந்தப் பெண்ணின் பெயர் ஆண்ட்ரியா என்பதை கண்டுபிடித்தார். 2009 ஆம் ஆண்டு அவர் காணாமல் போனபோது அவருக்கு வயது 54 என்றும், அவரது சகோதரர் ஒரு நடிகர் என்பதையும் கண்டுபிடித்தார்.

அவரது வீட்டை 13 ஆண்டுகளுக்கு பிறகு பூட்டை உடைத்து திறந்து பார்த்தபோது, சில அச்சமூட்டும் காட்சிகள் இருந்ததாக அந்த எழுத்தாளர் தெரிவித்துள்ளார். அங்கு இருக்கும் தடயங்களை வைத்து பார்க்கும்போது, அவர் அவசர அவசரமாக தப்பி சென்றிருக்க வேண்டும் என்றும், சமைக்கப்படாத உணவுகள், குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உணவுகள், அலங்கரிக்கப்படாத படுக்கைகள் ஆகியவை இருந்ததாகவும், அவர் நகைகள் மற்றும் பணத்தை மட்டுமே எடுத்து சென்றிருக்கலாம் என்றும் யூகிக்க முடிவதாக அந்த எழுத்தாளர் தெரிவித்துள்ளார். கடைசி நேரத்தில் அவருக்கு ஏதாவது ஆபத்து வந்திருக்கும் என்றும், அவர் அனேகமாக உளவாளியாக இருக்கலாம் என்றும், உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தவுடன் உடனே அவர் மாயமாக மறைந்துவிட்டார் என்றும் எழுத்தாளரின் விசாரணையில் இருந்து தெரிய வந்தது.

இந்த நிலையில், ஆண்ட்ரியா என்பவருக்கு கடன் கொடுத்தவர், கடனை திருப்பிக் கேட்க முயற்சி செய்தபோதுதான் அவர் காணாமல் போய் உள்ளார் என்ற விவரமே தெரிய வந்தது என்றும், இதனை அடுத்து அவர் தொடுத்த வழக்கில் அவரது வீடு விற்பனை செய்யப்பட்டு, அவருடைய கடன் போக மீத பணம் அரசிடம் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் எப்போது திரும்பி வருகிறாரோ அப்போது அந்த பணம் ஒப்படைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும், ஆண்ட்ரியா கண்டிப்பாக உயிருடன் இருப்பார் என்றும், ஆனால் அதே நேரத்தில் மர்மமான முறையில் ஏன் மறைந்தார் என்பதற்கான விடையை நான் கண்டுபிடித்து விடுவேன் என்று கூறும் எழுத்தாளர், “இந்த டிஜிட்டல் யுகத்தில் தன்னுடைய அடையாளத்தை எல்லாம் மறைத்துவிட்டு, ஒரு புகைப்படத்தை கூட வெளியிடாமல் எப்படி அவர் மறைந்தார் என்பதை கண்டுபிடிக்காமல் விட மாட்டேன்” என்றும் அந்த எழுத்தாளர் கூறி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.