அவன் ரொம்ப கேவலமா இருக்கான்.. தனக்கு பிறந்த குழந்தையின் முகத்தை பார்த்து தாய் கூறிய அதிர்ச்சி வீடியோ..!

  தாயின் அன்பு, பெரும்பாலும் தன் குழந்தையின் குறைகளை தவிர்த்து, நல்ல விஷயங்களையே பார்க்கும் தன்மை கொண்டது. குழந்தையின் தோற்றம் எப்படி இருந்தாலும், பல தாய்மார்கள் பெருமையாக தங்கள் குழந்தை தான் அழகில் சிறந்தது…

baby

 

தாயின் அன்பு, பெரும்பாலும் தன் குழந்தையின் குறைகளை தவிர்த்து, நல்ல விஷயங்களையே பார்க்கும் தன்மை கொண்டது. குழந்தையின் தோற்றம் எப்படி இருந்தாலும், பல தாய்மார்கள் பெருமையாக தங்கள் குழந்தை தான் அழகில் சிறந்தது என கூறுவார்கள். காக்கைக்கு தன் குஞ்சும் பொன் குஞ்சு என்ற பழமொழியும் இங்கு உண்டு. ஆனால், இங்கிலாந்தில் உள்ள ஒரு தாய், தன் குழந்தையை பார்த்தவுடன் மாறுபட்ட ஒரு எதிர்வினையை வெளிப்படுத்தினார்.

ஜெஸ் என்ற 20 வயதான இங்கிலாந்து பெண், 9 மாதங்கள் காத்திருந்து, பல மணி நேரங்கள் பிரசவ வலியையும் தாங்கியபின், தன் குழந்தையை பெற்றெடுத்தார். ஆனால் தன் குழந்தையின் முகத்தை பார்த்தவுடன், அது தன்னுடைய குழந்தையில்லை என புலம்பினார். குழந்தையின் மூக்கு மற்றும் தோற்றம் ஈர்க்கக்கூடியதாக இல்லை என அவர் நினைத்தார்.

ஜெஸ் தன்  எதிர்வினையை வீடியோவாக சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது மில்லியன் கணக்கான பார்வைகளை பெற்றுள்ளது. அந்த வீடியோவில், குழந்தையை முதன் முதலாக பார்த்த போது   “அவனுடைய மூக்கு ரொம்ப கேவலமா இருக்கு. அவனே ரொம்பக் கேவலமாக இருக்கான்” என்று கூறி அவர் அழ ஆரம்பித்தார். தன் குழந்தையின் தோற்றத்தை ஏற்க முடியாமல் இருந்தார். ஆனால் சில மணி நேரங்களில், அவர் தன் குழந்தையை அழகாக உணர தொடங்கினார்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியது. சிலர் ஜெஸ்ஸை கடுமையாக விமர்சித்தனர். ஒருவர், “நீங்கள் தான் குழந்தையின் முதல் எதிரி’ என குற்றம்சாட்ட, மற்றொருவர் “இது ரொம்ப மோசமான செயல்” என்று கருத்து தெரிவித்தார். மற்றொரு பயனர், “பிறந்தவுடன் தாயார் இப்படி கேலி செய்தார் என குழந்தைக்கு பின்னாடி தெரிந்தால் என்ன ஆகும், பாவம் அந்த பிள்ளை” என கூறினார்.  இதுகுறித்து வீடியோ இணையத்தில் வைரலானாலும், தயவுசெய்து இந்த வீடியோவை யாரும் என பகிர வேண்டாம் என பலரும் கேட்டு கொண்டதால் அந்த வீடியோ இந்த செய்தியில் பதிவிடவில்லை.

ஜெஸ் தான் அளித்த பேட்டியில், இந்த தவறான உணர்வுகள் பிரசவத்துக்கு பிறகு ஏற்படும் ஹார்மோன் மாற்றங்களால் ஏற்பட்டிருக்கலாம் எனவும், அதுவே தனது முதற்கட்ட எதிர்வினைக்கு காரணமாக இருக்கலாம் எனவும் தெரிவித்ததோடு எனது குழந்தையை நான் அன்புடன் கவனித்து கொள்வேன் என தெரிவித்தார்.