தடைகளை தாண்டி மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வென்ற மெக்சிகோ அழகி ஃபாத்திமா போஷ்! ‘அறிவில்லாதவர்’ என்று சொன்னவரின் முகத்தில் பூசிய கரி.. பட்டம் வெல்ல ஃபாத்திமா கூறிய ஒரே ஒரு பதில்..!

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஃபாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி பட்டத்தை வென்றுள்ளார். 25 வயதான இவர், ரசிகர்களின் ஆதரவை ஏற்கனவே பெற்றிருந்தவர். இந்த வெற்றியை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை…

ms universe

மெக்சிகோ நாட்டை சேர்ந்த ஃபாத்திமா போஷ் 2025ஆம் ஆண்டின் ‘மிஸ் யுனிவர்ஸ்’ அழகி பட்டத்தை வென்றுள்ளார். 25 வயதான இவர், ரசிகர்களின் ஆதரவை ஏற்கனவே பெற்றிருந்தவர். இந்த வெற்றியை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

போட்டி தொடங்கிய ஆரம்ப நாட்களிலேயே ஃபாத்திமா போஷ் ஒரு சர்ச்சையில் சிக்கினார். தாய்லாந்து போட்டி இயக்குநர் ஒருவர், ஃபாத்திமாவை நேரலையில் அறிவு இல்லாதவர் என்று கடுமையாக விமர்சித்ததாக கூறப்படுகிறது. சமூக ஊடகங்களில் விளம்பர பதிவுகளை அவர் பகிர தவறியதால் ஏற்பட்ட சர்ச்சையே இதற்கு காரணம்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஃபாத்திமா, ஈராக் அழகியுடன் சேர்ந்து மேடையை விட்டு வெளியேறும் தைரியமான முடிவை எடுத்தார். “உங்கள் இயக்குநர் செய்தது மரியாதைக்குரியது அல்ல; அவர் என்னைத் அறிவு இல்லாதவர்’ என்று அழைத்தார். நாம் அதிகாரம் பெற்ற பெண்கள், இது நமது குரலுக்கான மேடை என்பதை உலகம் பார்க்க வேண்டும்,” என்று அப்போது ஃபாத்திமா கூறினார்.

இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இறுதியில் மிஸ் யுனிவர்ஸ் பட்டம் பெற்று தன்னை அறிவில்லாதவர் என்று கூறியவரின் முகத்தில் கரியை பூசிவிட்டார். கடந்த ஆண்டு வெற்றியாளரான டென்மார்க்கை சேர்ந்த விக்டோரியா கியர் திவ்லிக் ஃபாத்திமாவுக்கு மிஸ் யுனிவர்ஸ் மகுடத்தை சூட்டினார். உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கண்ணீருடன் காணப்பட்ட ஃபாத்திமாவை, சக அழகிகள் அரவணைத்து உற்சாகப்படுத்தினர்.

இறுதிச்சுற்றில், ஃபாத்திமாவிடம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு அவர் பதிலளித்தபோது, ‘உங்களுடைய தனித்துவத்தின் சக்தியை நம்புங்கள். உங்கள் கனவுகள் முக்கியம், உங்கள் இதயம் முக்கியம். உங்களின் மதிப்பை சந்தேகிக்க யாரையும் ஒருபோதும் அனுமதிக்காதீர்கள். இந்த ஒரே ஒரு பதில் தான் அவருக்கு மிஸ் யுனிவர்ஸ் பட்டம் வெல்ல உதவியது.

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியின் மற்ற வெற்றியாளர்கள்

முதல் ரன்னர்-அப்: தாய்லாந்தின் பிரவீணர் சிங்

2வது ரன்னர்-அப்: வெனிசுலாவின் ஸ்டெபனி அபசாலி

3வது ரன்னர்-அப்: பிலிப்பைன்ஸின் அஹ்திசா மனாலோ

4வது ரன்னர்-அப்: ஐவரி கோஸ்டின் ஒலிவியா யாசே

மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டியில் இந்தியாவின் சார்பில் மணிகா விஸ்வகர்மா பங்கேற்றார். இவர் நீச்சலுடை சுற்றுக்கு பிறகு டாப் 15 வரை முன்னேறினார். எனினும், அவரால் டாப் 12 இடங்களுக்குள் வர முடியவில்லை. இதற்கு முன், இந்தியா சார்பில் சுஷ்மிதா சென் , லாரா தத்தா , ஹர்னாஸ் சந்து ஆகியோர் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வென்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த 75வது மிஸ் யுனிவர்ஸ் போட்டி 2026ஆம் ஆண்டு போர்ட்டோ ரிக்கோவில் நடைபெறும்.