பொன் முட்டையிடும் வாத்து போயிருச்சு.. மெட்டாவெர்ஸ் இனிமேல் தேறாது.. பின்வாங்கிய முதலீட்டாளர்கள்.. அதிர்ச்சியில் மார்க் ஜுக்கர்பெர்க்.. தொட்டதெல்லாம் நஷ்டம்.. மிகப்பெரிய Lay Off செய்ய முடிவு.. லட்சக்கணக்கானோர் வேலை இழப்பார்களா? மெட்டாவுக்கே இந்த நிலை என்றால் மற்ற நிறுவனங்களின் நிலை பரிதாபமா?

  மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனத்தில் மிகப்பெரிய பட்ஜெட் குறைப்பு, ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனம் மொத்தமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு,…

meta

 

மெட்டா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், நிறுவனத்தில் மிகப்பெரிய பட்ஜெட் குறைப்பு, ஆட்குறைப்பு மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு தயாராகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிறுவனம் மொத்தமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு, பல்லாயிரக்கணக்கான கோடி டாலர்கள் முதலீடு செய்யப்பட்ட அவருடைய கனவு திட்டமான மெட்டாவெர்ஸ் பிரிவில், சுமார் 30% அளவுக்கு பட்ஜெட் குறைப்புக்கு அவர் தயாராகி வருகிறார். 2021 ஆம் ஆண்டு முதல், மெட்டாவெர்ஸின் தாயகமான ரியாலிட்டி லேப்ஸ் பிரிவு $70 பில்லியனுக்கும் அதிகமான இழப்பை சந்தித்துள்ளது.

கடந்த நவம்பர் மாதத்தில் மெட்டாவின் உயர்மட்ட நிர்வாகிகள் கூடி, எதிர்காலத்தை குறிக்கும் இந்த பிரிவில் இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான நிதி குறைப்பு நடவடிக்கைகளுக்கு இறுதி வடிவம் கொடுத்துள்ளனர். இந்த ரியாலிட்டி லேப்ஸ் பிரிவில்தான் குவெஸ்ட் விஆர் ஹெட்செட்டுகள் (Quest VR headsets), ஏஆர் கண்ணாடிகள் (AR glasses) மற்றும் ஹொரைசன் வேர்ல்ட்ஸ் (Horizon Worlds) எனப்படும் டிஜிட்டல் பிரபஞ்சம் போன்றவை உருவாக்கப்படுகின்றன. ஒட்டுமொத்த நிறுவனத்திலும் 10% அளவுக்கு செலவுகளை குறைக்க ஜுக்கர்பெர்க் உத்தரவிட்டிருந்தாலும், மெட்டாவெர்ஸ் பிரிவில் அதைவிட அதிகமாக குறைக்குமாறு தனது நிர்வாகிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

ஒரு காலத்தில் நிறுவனத்தின் எதிர்காலமே மெட்டாவெர்ஸில்தான் உள்ளது என்று ஜுக்கர்பெர்க் நம்பினார். அப்படியிருக்கையில், இப்போது அவர் மெட்டாவெர்ஸை குறிவைப்பதன் காரணம் என்ன? மெட்டா எதிர்பார்த்தது போல மெட்டாவெர்ஸ் உலகளாவிய ஆதிக்கத்தை உடனடியாக பெறவில்லை. மேலும், பயனர்களின் ஆர்வம் குறைந்து வளர்ச்சி தேக்கமடைந்தது. ஹொரைசன் வேர்ல்ட்ஸ் போன்ற மெட்டாவின் சமூக வலைத்தள பயனர்களை ஈர்க்கத் திணறியது. பொறுமையிழந்த முதலீட்டாளர்கள், ரியாலிட்டி லேப்ஸ் இனி தேறாது என்று விமர்சித்ததுடன் முதலீடுகளையும் திரும்ப பெற முடிவு செய்தனர். எனவே அப்பிரிவை நிரந்தரமாக மூடவும் ஜுக்கர்பெர்க்கை வலியுறுத்தினர்.

தற்போது மெட்டாவில் பட்ஜெட் குறைப்புகள் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த கடுமையான நடவடிக்கைகளின் தாக்கம் பெரும்பாலும் விஆர் பிரிவின் மீதே விழும். ஏனெனில், மெட்டாவெர்ஸ் வியூகத்திலேயே மிகவும் செலவு மிக்க பகுதி இந்த விஆர் பிரிவுதான். அதை தொடர்ந்து, பயனர்களை ஈர்க்க போராடிய மெட்டாவின் மெய்நிகர் சமூக பிரபஞ்சமான ஹொரைசன் வேர்ல்ட்ஸ் பிரிவும் கடும் பாதிப்பை சந்திக்கும். பட்ஜெட் குறைப்புகள் மற்றும் ஆட்குறைப்பு நடவடிக்கைகள் மூலமான இந்த வலி, இனிவரும் மாதங்களில் படிப்படியாகச் செயல்படுத்தப்படலாம்.

மெட்டாவின் மார்க்கெட்டிங் மற்றும் வருவாய் அறிக்கைகளில் மெட்டாவெர்ஸ் பற்றிய பேச்சு மங்க தொடங்கியுள்ள நிலையில், அதன் இடத்தை AI தொழில்நுட்பம் பிடித்துள்ளது. மார்க் ஜுக்கர்பெர்க் இப்போது முழுமையாக தனது கவனத்தை AI தொழில்நுட்பத்தின் மீது செலுத்துகிறார். Large Language Models, AI அசிஸ்டெண்டுகள் மற்றும் மெட்டாவின் ரே-பான் ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற அணியக்கூடிய ஹார்வேர்டில் அவரது கவனம் திரும்பியுள்ளது. மேலும், நுகர்வோர் AI சாதனங்களில் ஒரு ஆக்ரோஷமான முன்னேற்றத்தை குறிக்கும் விதமாக, மெட்டா சமீபத்தில் ஆப்பிளின் முன்னணி வடிவமைப்பு நிர்வாகியையும் பணியமர்த்தியுள்ளது.

இந்த அதிரடி மாற்றத்தின் செய்தி மிகவும் தெளிவானது: இனிமேல் AI தொழில்நுட்பமே மெட்டாவின் புதிய வருவாய் இயந்திரமாக இருக்கும். அதே சமயம், மெட்டாவெர்ஸ் நிறுவனம் ஒரு காலத்தில் மார்க் அவர்களுக்கு பொன்முட்டையிடும் வாத்து என கருதினார். ஆனால் இப்போது அவரது எண்ணம் மாறி வருகிறது. இந்த மாற்றங்கள், மெட்டாவின் எதிர்கால திசையை முற்றிலும் மாற்றி அமைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், இந்த மாற்றத்தால் ஆயிரக்கணக்கான அல்லது லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையிழப்பார்கள் என்று கூறப்படுவது பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.