இந்த உலகில் நிறைய பேருக்கு ஏராளமான நல்ல பழக்கங்கள் இருந்தாலும் இன்னும் சிலர் கெட்ட பழக்கங்களுக்கு அடிமையாவதுடன் அதிலிருந்து வெளியே வருவதற்கு கடுமையான முயற்சிகளையும் மேற்கொள்வார்கள். அதில் சில நேரம் பலன் கிடைக்கலாம். சில நேரம் எந்த வித பிரயோஜனமும் இல்லாமல் கூட செல்லலாம்.
ஒருவர் எந்த அளவுக்கு தனது மனதை ஒரு நிலைபடுத்தி அதிலிருந்து வெளியே வர முயற்சி செய்கிறார்களோ அதற்கேற்ப பலன் கிடைக்கும். ஆனால், நினைத்ததை விட அதிகமாக ஏதாவது பழக்கத்திற்கு அடிமையாகி மிகவும் ஆழமாக போய் விட்டால் நிச்சயம் அதிலிருந்து தப்புவது என்பது மிக மிக கடினம் தான்.
அப்படி இருக்கையில், நபர் ஒருவர் தன்னிடம் இருந்த ஒரு பழக்கத்தில் இருந்து விடுபடுவதற்காக மேற்கொண்ட முயற்சிகள் தற்போது பலரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.
சுமார் 11 ஆண்டுகளுக்கு முன்பாக கடந்த 2013 ஆம் ஆண்டு டர்கி நாட்டில் குட்டாயா இன்னும் பகுதியை சேர்ந்த ஒருவர் வித்தியாசமான ஒரு பழக்கத்தை மேற்கொண்டு வந்தார். இப்ராகிம் யூசல் என்ற இந்த நபர் புகை பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாக கூறப்படுகிறது. இப்ராஹிமின் தந்தை புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி நுரையீரல் புற்றுநோய் உருவாகி உயிரிழந்திருந்தார்.
தானும் அதே போல் ஒரு பழக்கத்திற்கு அடிமையாக இருப்பதால் அதனை எப்படியாவது நிறுத்தி விட வேண்டும் என்றும் முடிவு செய்துள்ளார் இப்ராஹிம். அனைவரும் புகை பிடிக்கும் பழக்கத்தை விட வேண்டுமென்றால் ஒரு நாளில் எத்தனை பிடிக்கிறார்களோ அதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பார்கள். ஆனால் மிக மிக வித்தியாசமான ஒரு வழியைத் தான் இப்ராஹிம் தேர்வு செய்துள்ளார்.
ஒரு நாளைக்கு இரண்டு சிகரெட் பாக்கெட்டுகளை பிடிக்கும் இப்ராஹிம், இனிமேல் ஒன்றைக் கூட பிடிக்கக் கூடாது என்ற நோக்கில் தனது தலைக்கு ஒரு கிளிக் கூண்டை தயார் செய்து போட்டுள்ளார். இவராகவே சுமார் 130 அடி காப்பர் வயரை பயன்படுத்தி இந்த கிளிக்கூண்டு போன்ற ஒரு ஹெல்மெட் வடிவிலான கூண்டை செய்ய, இதற்கான சாவியை தனது மகள் மற்றும் மனைவியிடமும் அவர் கொடுத்துள்ளார்.
மேலும் ஸ்ட்ரா மூலம் தண்ணீர் குடித்து வந்த இப்ராஹிம், தனது மனைவியின் உற்ற துணையுடனும் இந்த புகைப் பழக்கத்தில் இருந்து மீண்டு வந்ததாக கூறப்படுகிறது. 22 ஆண்டுகளாக புகை பழக்கத்துக்கு அடிமையாக இருந்த இப்ராஹிம், பல முயற்சிகள் செய்தும் அதனை நிறுத்த முடியாமல் போனதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது.
மேலும் ஹெல்மெட் போன்ற கிளிக்கூண்டு தலையில் அணிந்து இப்ராஹிம் வலம் வந்திருந்தது அவரது மனைவிக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவர் நிச்சயம் புகை பழக்கத்தில் இருந்து வெளியே வரவேண்டும் என்பதால் அதனை பெரிதாகவும் அவர் பொருட்படுத்தவும் இல்லை.
அவர் அந்த பழக்கத்தை விட்டாரா இல்லையா என்பது பலருக்கும் தெரியாமல் இருந்து வரும் நிலையில் நிச்சயம் இப்படியான ஐடியாக்கள் இன்றுள்ள மக்கள் பலருக்கும் பெரிய இன்ஸ்பிரேஷனாக தான் இருந்து வருகிறது.