நம்மை சொல்லி தந்தது மனிதத்தை.. 22 வினாடிகளில் கண்கலங்க வைத்த சிறுவனின் செயல்.. உலகையே கலக்கும் வீடியோ..

By Ajith V

Published:

உலகின் பல இடங்களில் வானிலை எப்போதும் மாறும் என்பதே கணிக்க முடியாதது. அதிலும் மலையை ஒட்டி அல்லது ஆறு, நதிகளை ஒட்டி வசித்து வருபவர்கள் மழை காலத்தில் எப்போதும் அச்சத்திற்கு நடுவே தான் வாழ்ந்து கொண்டே இருக்க வேண்டும். இந்த ஆண்டிலும் கூட கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு, மிக மோசமான பேரிடராக மாறி இருந்தது. பலரும் தங்களது குடும்பத்தினர் உடல் கிடைத்தால் போதும் என அலைந்து திரிந்தது அனைவரையும் கண்ணீர் மல்க வைத்திருந்தது.

இதே போல, சமீபத்தில் புதுச்சேரி, திருவண்ணாமலை, சென்னை என பல இடங்களில் மழை மற்றும் புயல் காரணமாக உயிர்ச்சேதம் ஏற்பட்டு பலரையும் நிலைகுலைய வைத்திருந்தது. இது தொடர்பாக தொடர்ந்து நிவாரண பணிகளும் நடைபெற்று வரும் நிலையில், இந்தியாவை போல மலேசியா நாட்டிலும் கடந்த சில நாட்களாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது.

மனதளவில் பெரிய ஆள் தான்..

பல இடங்களில் மக்கள் உணவும், தங்க இடமும் இல்லாமல் தவித்து வரும் நிலையில், நிறைய இடங்களில் தண்ணீர் இன்னும் வடிந்த பாடில்லை என்றே தகவல்கள் கூறுகின்றது. இதற்கு மத்தியில் மலேசியாவின் ஒரு பகுதியில் சிறுவன் ஒருவன் செய்த செயல் தொடர்பான வீடியோ, உலகளவில் வைரலாகி வருவதுடன் பலரது பாராட்டுக்களையும் பெற்று கொடுத்துள்ளது. இது தொடர்பாக தற்போது வைரலாகி வரும் வீடியோவின் படி, மலேசியாவில் எங்கோ ஒரு இடத்தில் அதிகமாக தண்ணீர் பெருக்கெடுத்து சாலையில் ஓடுவது தெரிகிறது.

அதற்கு நடுவே மூன்று சிறிய பூனைகள் எங்கே செல்வது என தெரியாமல் தண்ணீரில் சிக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இதனை கவனித்த சிறுவன் ஒருவன், முழங்கால் அளவு நீருக்கு நடுவே இறங்கிப் போய் அந்த 3 பூனைகளையும் பத்திரமாக சென்று மீட்டெடுத்து வருகிறார். அத்துடன் நீரில்லாத சாலை பகுதிகளில் சிறுவன் விட்டு செல்ல அவைகளும் பத்திரமாக வெளியேறுகின்றது.

எமோஷனலான இணையவாசிகள்..

அந்த சிறுவனுடன் வேறு சில சிறுவர்களும் அங்கே இருக்கின்றனர். பூனையை மீட்டு கொண்டு வரும் போது அவைகளை மிக இறுக்கமாக நீரில் மீண்டும் விழாத படி கவனமாக கொண்டு வந்த சிறுவனின் செயல், தற்போது பலரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

சிறு வயது என்றாலும் மனதளவில் அவன் உயர்ந்து விட்டான் என்றும், மனிதநேயம் எப்போதும் மறித்து விடாது என்றும் பலரும் உணர்வுபூர்வமாக குறிப்பிட்டு வருகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளத்தில் அதிக இதயங்களை நெகிழ வைத்து வருகிறது.