இந்தியாவுக்கு வரி போட்ட டிரம்ப் ஒரு முட்டாள்.. அமெரிக்க பொருளாதார நிபுணர் ஆத்திரம்.. இந்தியாவுக்கு அமெரிக்காவை விட ரஷ்யா தான் முக்கியம்..!

அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான வரிகளை “முட்டாள்தனமானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். “இது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது” என்றும்…

trump

அமெரிக்காவின் பிரபல பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ், இந்தியா மீது அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் விதித்த கடுமையான வரிகளை “முட்டாள்தனமானது” என்று கடுமையாக விமர்சித்துள்ளார். “இது எந்த நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது” என்றும் அவர் சாடியுள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், இந்தியா, சீனா, ரஷ்யா, பிரேசில் மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய பிரிக்ஸ் கூட்டமைப்பின் மீதுள்ள விரோத போக்காலேயே டிரம்ப் இவ்வாறு செயல்படுவதாக குற்றம் சாட்டினார்.

கூடுதல் வரிவிதிப்பு நடவடிக்கை அர்த்தமற்றது. இது எந்த ஒரு நோக்கத்தையும் பூர்த்தி செய்யாது. இந்தியாவின் மீது கூடுதல் வரி விதித்தது எந்த அளவுகோலின்படியும் முட்டாள்தனமானது. அது தோல்வியடையும்” என்று அவர் கூறினார்.

ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதை காரணம் காட்டி, இந்திய பொருட்களின் இறக்குமதிக்கு 50% வரி விதிக்கப்பட்டது, அமெரிக்க பொருளாதாரத்துக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், இது சர்வதேச சட்டத்தை மீறுவதாகும் என்றும் அந்த பொருளாதார நிபுணர் எச்சரித்தார்.

“இந்த வரிகள் அனைத்தும் தவறானவை. இது அமெரிக்க பொருளாதாரத்திற்கு அழிவுகரமானது. இது சர்வதேச சட்டத்தை மீறுகிறது. இது நமது அரசியல் அமைப்பின் தோல்வியை காட்டுகிறது. டிரம்பின் கொள்கைகள் தோல்வியடையவே விதிக்கப்பட்டவை” என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார்.

இந்தியாவை குறித்து பேசிய ஜெஃப்ரி சாக்ஸ், “அமெரிக்க அரசியல்வாதிகள் இந்தியாவை பற்றி சிறிதும் கவலைப்படுவதில்லை.இந்தியா உலகில் ஒரு சுதந்திரமான நிலைப்பாட்டை கொண்ட ஒரு பெரிய சக்தி” என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், சீனா, ரஷ்யா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் தான் இந்தியாவின் “உண்மையான பங்காளிகள்” என்று ஜெஃப்ரி சாக்ஸ் கூறினார். அமெரிக்காவை இந்தியா எப்போதும் பகைத்து கொள்ளாது என்றாலும், ரஷ்யாவிடம் இருக்கும் நட்பை அமெரிக்காவிடம் இந்தியா காட்டாது என்றும், தேவையில்லாமல் இந்தியாவை அமெரிக்கா சீண்டினால், பதிலடி கொடுக்கவும் தயங்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.