முத்தம் கொடுத்ததால் ஜோடிக்கு வந்த வினை..வேலையை விட்டு துரத்திய அலுவலகம்

Published:

சீனாவில் தன்னுடன் அலுவலகத்தில் பணிபுரிந்த பெண் மீது காதல் வயப்பட்ட இளைஞர் ஒருவர் அவருக்கு முத்தம் கொடுத்திருக்கிறார். இந்த விவகாரம் தெரிந்த உடனே நிர்வாகம் அவர்கள் இருவரையும் வேலையிலிருந்து நீக்கியுள்ளது. பொதுவாக வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் அவர்களிடம் சில ஆண் ஊழியர்கள் அசடு வழிந்து ரொமான்ஸ் மழை பொழிவது என்பது வாடிக்கையாகி வருகிறது. மேலும் அலுவலகத்தில் ஒருவருக்கொருவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டு அது காதலாகி பின் திருமணத்திலும் முடிகிறது.

வீட்டில் ஆண்களும், பெண்களும் சாதாரண உடையில் இருப்பர். ஆனால் அலுவலகத்திற்குச் செல்லும் போது மாடர்ன் உடை, களையாத மேக்கப், கவர்ந்திழுக்கும் ஆடைகள் போன்றவற்றாலும், காலை முதல் மாலை வரை ஒன்றாகப் பணிபுரிவதாலும் ஈர்ப்பு ஏற்படுவது இயல்பு.

அது எல்லை மீறாமல் நட்பாக இருக்கும் பட்சத்தில் ஆரோக்கியமான உறவாக இருக்கும். அப்படி எல்லை மீறினால் அது வில்லங்கத்திலும், பிரச்சினையிலும் முடிந்து விடுகிறது. அப்படித்தான் சீனாவில் ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

மகாபாரத புராணம் ஸ்டைலில் மனைவியை வைத்துச் சூதாடிய கணவர்.. தட்டித் தூக்கிய போலீஸ்..

சீன நாட்டைச் சேர்ந்த லியூ என்பவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். இவர் அங்கு தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். அவருடன் உடன் பணிபுரியும் பெண் ஊழியர் சென். இருவரும் ஒரே அலுவலகத்தில் பணிபுரிவதால் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டு பின் காதலாக மாறியது. இந்த ஜோடி அலுவலகத்தில் பணியின் போது ஒருவருக்கொருவர் முத்தமிட்டுக் கொண்டதாகக் கூறப்படுகிறது. இது அவரின் மனைவிக்குத் தெரிய வர ஆதாரத்துடன் அந்த நிறுவனத்திற்கு அனுப்பியிருக்கிறார். இதனால் இவர்களை அந்த நிறுவனம் வேலையை விட்டுத் துரத்தியது.

இதற்கு எதிராக அவர்கள் இருவரும் தனித்தனியாக ரூ. 30 லட்சம் மான நஷ்ட ஈடு கேட்டு நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். வழக்கினை விசாரித்த நீதிமன்றம் இருவரும் மீது குற்றம் இருப்பதாலும், அலுவலக விதிகளை மீறியதாலும் இந்த வழக்கினை தள்ளுபடி செய்தது.

மேலும் உங்களுக்காக...