ஒரே ஒரு தாக்குதல் தான்.. நீல கலரில் மாறிய கண்கள்.. கை, கால்களிலும் நிறமாற்றம்..! இளம்பெண் அதிர்ச்சி..!

  ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் மின்னல் தாக்குதல் ஏற்பட்டது. இதன் விளைவாக திடீரென அவரது உடலில் உள்ள கை, கால்களின் நிறம் மாறிவிட்டதாகவும், கண்களின் நிறமும் மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது…

eyes

 

ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த இளம் பெண்ணுக்கு சமீபத்தில் மின்னல் தாக்குதல் ஏற்பட்டது. இதன் விளைவாக திடீரென அவரது உடலில் உள்ள கை, கால்களின் நிறம் மாறிவிட்டதாகவும், கண்களின் நிறமும் மாறிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில், இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது திடீரென கன மழை பெய்ய தொடங்கியது. அப்போது, அவர் வேகமாக வீட்டை நோக்கி சென்றுகொண்டிருக்கும்போது மின்னல் தாக்கியது. ஒருசில நொடிகளில் அவரது உடல் முழுவதும் உணர்வற்ற நிலையில் இருந்ததாகவும், மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவல் அறிந்த மருத்துவர்கள் உடனடியாக அவரது இருப்பிடத்திற்குச் சென்று சோதனை செய்தபோது, அவர் முழுவதுமாக உணர்வற்ற நிலையில் இருந்ததை கண்டனர். பல மணி நேரங்களுக்குப் பிறகு அவர் மயக்கநிலையில் இருந்து மீண்டார். ஆனால் எழுந்துப் பார்த்தபோது, தனது உடல் அசைவற்றதாக இருந்தது.

அதன் பிறகு மருத்துவர்கள் அளித்த சிகிச்சையால் அவர் மீண்டு வந்தாலும், அவரது உடலில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. குறிப்பாக, அவரது கண்கள் நீல நிறமாக மாறிவிட்டதோடு, கை, கால்களின் நிறத்திலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே மின்னல் தாக்கியவர்களுக்கு இதுபோன்ற மாற்றங்கள் அரிதாகவே நிகழ்ந்துள்ள நிலையில், அந்த இளம் பெண் தன்னுடைய உடலில் ஏற்பட்ட மாற்றங்களை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார். அவருக்கு தற்போது கவுன்சிலிங் வழங்கப்பட்டுவருகிறது என கூறப்படுகிறது.