ஆவியை கண்டுபிடிக்க போன இடத்தில் அசைந்த கருவி.. கூடவே கேட்ட அழுகை சத்தம்.. காரணம் அந்த மர்ம உயிரினமா..

By Ajith V

Published:

உண்மையோ, பொய்யோ இன்றளவிலும் பேய்கள் குறித்த கதைகளை கேட்பதற்கு நிறைய மக்கள் ஆவலாக தான் இருந்து வருகிறார்கள். இதற்கு காரணம், அதன் பின்னணியில் இருக்கும் சுவாரஸ்யம் அல்லது மர்மம் நிறைந்த நிகழ்வுகள் தான்.

அதே போல, தற்போதைய காலகட்டத்தில் கூட பேய்கள் இருப்பதை கண்டறியும் வல்லுநர்கள் பலரும் அது தொடர்பான கருவிகள் உள்ளிட்டவற்றுடன் பாழடைந்த அல்லது மக்கள் செல்லாமல் பேய்கள் இருப்பதாக நம்பப்படும் இடங்களுக்கு சென்று அங்கே நடக்கும் விஷயங்களை பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுகின்றனர்.

இதில் ஒரு கூட்டம் இதனை நம்பினாலும் இன்னொரு பக்கம் இவை அனைத்தும் ஜோடிக்கப்பட்டது என்று புறந்தள்ளும் கூட்டமும் உள்ளது. அப்படி ஒரு சூழலில் தான் சமீபத்திலும் இது போன்று பேய்களை தேடி செல்லும் ஒரு இரண்டு பேர் பகிர்ந்த தகவல் தற்போது பலரையும் சில்லிட வைத்துள்ளது. மார்க்யூஸ் (Marquis) மற்றும் மார்க் டேன் (Mark Dann) ஆகிய இரண்டு பேர் UK-வின் பல பகுதிகளில் ஒன்றாக சென்று பேய் இருப்பதாக நம்பப்படும் இடங்களில் அது தொடர்பான கருவிகளுடன் சென்று ஆராய்ச்சி மேற்கொண்டு வருகிறார்கள்.

அப்படி சமீபத்தில் Scottish Losh என்னும் ஆற்றின் கரை அருகே சென்று அங்கே எதுவும் ஆத்மாக்கள் இருக்கிறதா என தேடி பார்த்துள்ளார்கள். அப்போது தான் ஒரு அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. அவர்கள் வைத்திருந்த ராடு ஒன்று திடீரென நகர தொடங்கியதுடன் ஒரு பயங்கரமான அழுகை சத்தமும் பின்னால் கேட்டுள்ளது.

அப்படி ஒரு சூழலில் தான், அது Nessie என்ற உயிரினத்தின் சப்தம் என்றும் அப்பகுதியில் நீண்ட நாட்களாக நம்பப்பட்டு வரும் Loch Ness என்ற ஒரு கோர உருவம் கொண்ட ஆவி என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்த சத்தத்தை கேட்டு தாங்கள் ஒரு நிமிடம் சிதறிப் போனதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்த Loch Ness என்ற ஒரு மர்ம உயிரினத்தை பல பேர் பார்த்ததே இல்லை என்றாலும் அது ஒரு கோர உருவம் கொண்டிருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் மார்க்குயிஸ் மற்றும் மார்க் ஆகிய இருவரும் அந்த உயிரினம் நிஜத்தில் இருப்பதாகவும், அதன் அழுகை தான் அந்த ஆற்றின் கரை முழுக்க எதிரொலித்ததாகவும் நம்புகின்றனர்.

அந்த உயிரினம் இன்னும் இருப்பதே யாராலும் நிரூபிக்கப்படவில்லை என்பதால் பலர் இதை நம்பவும் தயாராக இல்லை. ஆனால், மார்க்குயிஸ் மற்றும் மார்க் ஆகியோர் இது நிச்சயம் மனிதர்கள் எழுப்பிய போலி அழுகை இல்லை என்றும், தங்கள் கருவிகளில் அப்படி போலியான சத்தங்கள் நிச்சயம் பதிவாகாது என்றும் குறிப்பிடுகின்றனர்.

இது Loch Ness என்பதில் அவர்கள் உறுதியாக இருக்கும் சூழலில், விரைவில் அது உண்மையா இல்லையா என்பது ஆராய்ச்சிகள் மூலம் நிரூபணம் ஆகலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.