வீட்டின் அடித்தளத்தில் இருந்த பொக்கிஷம்.. 60 வருசமா தெரியாமல் இருந்த மர்ம பின்னணி.. மதிப்பு மட்டும் இவ்ளோ கோடியா..

By Ajith V

Published:

இன்றெல்லாம் வேகமாக இயங்கி கொண்டிருக்கும் உலகத்திற்கு மத்தியில் பழைய பொருட்களை பார்ப்பதற்கோ அல்லது அதன் மதிப்பு குறித்து தெரிந்து கொள்வதற்கோ யாருக்கும் இங்கே நேரம் கிடையாது. உலகத்தின் போக்கில் நாமும் சென்று கொண்டே இருக்க பழைய பொருட்கள் தொடர்பாக அவ்வப்போது சில செய்திகளும் ஒரு பக்கம் வெளியாகிக் கொண்டே இருக்கிறது.

இப்படி பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உலகில் இருந்த பொருட்களின் மதிப்பு தற்போது பல லட்சம் அல்லது கோடிகளாக இருக்கும் நிலையில் அப்படிப்பட்ட ஒரு பொருளின் விவரம் தான் தற்போது வெளியாகியுள்ளது. இத்தாலி நாட்டின் போம்பெய் ன்னும் பகுதியில் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு தம்பதி அவர்களின் வீட்டை நிராகரித்து வேறு இடத்தில் தங்கி வந்ததாக கூறப்படுகிறது.

இந்த வீட்டின் அடித்தளத்தை பரிசோதித்து பார்த்த போது தான் அங்கே ஒரு ஓவியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 1962 ஆம் ஆண்டு இத்தாலி பகுதியை சேர்ந்த ஒருவர் பழைய பொருட்களை வாங்கி விற்பாதை வழக்கமாக கொண்டுள்ளார். அப்போது சீரில்லாத ஒரு பெண்ணின் ஓவியம் இருந்ததையும் கவனித்துள்ளார்.

னைவருமே இதை ஒரு சாதாரண ஓவியமாக தான் நினைத்து இத்தனை நாட்கள் இருந்து வந்துள்ளனர். ஆனால் சுமார் 62 ஆண்டுகள் கழித்து வரைபடவியலாளர் ஒருவர் அந்த சீரற்ற பெண் ஓவியத்தில் உலக புகழ் பெற்ற ஸ்பானிஷ் ஓவியரான பாப்லோ பிக்காஸோவின் கையெழுத்து இருப்பதை உறுதி செய்துள்ளார். இதில் பிக்காஸோவின் கையெழுத்து இருப்பதும் தெரிய வந்த நிலையில், அது அவருடையது தான் என்பதும் நிரூபணம் ஆகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து அந்த வீட்டின் உரிமையாளர்கள் பிக்காஸோவின் ஓவியத்தை விற்பதரற்கான வேலைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் பிக்காஸோவின் காதலியாகவிஞர் டோரா மாரின் புகைப்படம் அது என்பதும் தெரிய வந்துள்ளது. நீல நிற உடையில் லிப்ஸ்டிக் அணிந்து கொண்டு அந்த பெண் இருக்க, இந்த புகைப்படமும் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாகி மாறி உள்ளது.

50 ஆண்டுகளாக இந்த புகைப்படத்தை விற்க முடியாது என நினைத்து வீட்டிலேயே அவர்கள் மாட்டி வந்ததாகவும், பின்னர் அவர்களின் உணவகங்களில் மாட்டி விடப்பட்டதாகவும் அந்த ஓவியத்தை காத்து வந்த உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். ஆரம்பத்தில் அவர்களின் தந்தை இந்த ஓவியத்தை சாதாரணமா ஒன்றாக நினைத்து வாங்கி வந்ததாகவும், சில ஆண்டுகளுக்கு முன் அதிலிருந்த கையெழுத்து மூலம் இது பிக்காஸோவுடையது என்பதையும் கவனித்துள்ளதாக கூறப்படுகிறது.

ஆனால், அது உண்மையில் பிக்காஸோவுடையது தான் என்பதை உறுதி செய்ய நீண்ட நாட்களானதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த ஓவியத்திற்கு இந்திய மதிப்பில் சுமார் 60 கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்பது தான் பலரையும் ஒரு நிமிடம் அரண்டு பார்க்க வைத்துள்ளது.