அமெரிக்கக் குடியேற்ற சூழலில் ஒரு மிகப்பெரிய மாற்றம் நிகழ்ந்து வருகிறது, இதற்கு இந்தியர்களே முக்கிய காரணம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் H-1B விசா லாட்டரி, பல்லாண்டுகால காத்திருப்பு பட்டியல் மற்றும் இப்போது $100,000 H-1B விண்ணப்ப கட்டணம் போன்ற காரணங்களால் விரக்தியடைந்த இந்திய திறமைமிக்க இளைஞர்கள் , H-1B பாதையை கைவிட்டு, மிகவும் சக்திவாய்ந்த ஒரு மாற்று வழியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். அதுதான் அசாதாரண திறமைக்கான EB1A (Extraordinary Ability) கிரீன் கார்டு, இதன் மூலம் அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமையை விரைவாக பெறலாம்.
ஒரு காலத்தில் இந்திய பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப திறமையாளர்களுக்கு ஒரு பொற்கால கதவாக இருந்த H-1B விசா, இப்போது முன்னெப்போதும் இல்லாத நெருக்கடியில் சிக்கியுள்ளது. குடியரசு கட்சி சட்டமியற்றுபவர்களும், டிரம்ப் ஆதரவாளர்களும் பல மாதங்களாக H-1B திட்டத்தை தாக்கி வருகின்றனர். அதன் பிறகுதான் அதிர்ச்சியூட்டும் $100,000 விண்ணப்பக் கட்டணம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இது ஆரம்பக்கால வேலைவாய்ப்புகளை பாதிக்கும் என்றும், இந்திய திறமைகளை கொண்டு வருவதற்கு முன் நிறுவனங்கள் இரண்டு முறை யோசிக்கும் என்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. ஒருவேளை H-1B விசா கிடைத்தாலும், குடும்பங்களுக்கு அது ஒரு சூதாட்டமாகவே மாறிவிட்டது. இதனால் இந்தியர்கள் இப்போது வேறு வழிகளை தேட தொடங்கியுள்ளனர்.
இப்போது அமைதியாக வெடித்து கிளம்பும் பாதைதான் EB1A. அசாதாரண திறமைக்கான EB1A வகை, காப்புரிமைகள், வெளியீடுகள், விருதுகள், தலைமை பதவிகள் மற்றும் சர்வதேச அங்கீகாரம் போன்ற குறிப்பிடத்தக்க சாதனைகளை கொண்ட தனிநபர்களுக்கானது. EB1A-ன் மிகப்பெரிய நன்மை என்னவென்றால், EB2 அல்லது EB3 விசாக்களை போலல்லாமல், நீங்கள் ஒரு நிறுவனத்துடன் பிணைக்கப்படாமல், முழுமையான சுதந்திரத்துடன் செயல்படலாம். குடியேற்ற வழக்கறிஞர்கள், இந்தியர்களின் EB1A ஆர்வம் சாதனை அளவை எட்டியுள்ளதாக கூறுகின்றனர். புதிய EB1A அலையில் நோபல் பரிசு பெற்றவர்கள் மட்டுமல்ல, இந்தியர்கள் வலுவான போர்ட்ஃபோலியோக்களை உருவாக்கி, விரைவாக விண்ணப்பித்து வருகின்றனர்.
தரவுகள் இந்த மாற்றத்தை உறுதிப்படுத்துகின்றன. EB1A இப்போது அமெரிக்காவில் விரைவாக கிரீன் கார்டு பெறுவதற்கான மிகவும் நம்பகமான வழிகளில் ஒன்றாக மாறிவிட்டது. நிச்சயமற்ற தன்மைக்கும், கட்டுப்பாடுக்கும் இடையில் முடிவெடுக்கும் ஆயிரக்கணக்கான இந்தியர்களுக்கு, EB1A ஒரு தெளிவான வெற்றியாளராக உருவாகி வருகிறது. குடியேற்ற வழக்கறிஞர்கள், இந்தியர்களிடமிருந்து வரும் EB1A விண்ணப்பங்கள் கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிவேகமாக வளர்ந்து வருவதாக கூறுகின்றனர். இந்த EB1A வளர்ச்சி, இந்திய தொழில் வல்லுநர்கள் சுதந்திரம், நடமாடும் தன்மை, நிரந்தரம், நிறுவனச் சார்பு இல்லாத வாழ்க்கை மற்றும் விசா புதுப்பித்தல் சுழற்சிகளால் கட்டுப்படுத்தப்படாத வாழ்க்கையைத் தேடுவது பற்றியது ஆகும்.
அமெரிக்காவின் பதட்டமான குடியேற்ற சூழலில், H-1B விசா கடும் விமர்சனத்திற்கு உள்ளாகி வரும் நிலையில், எல்லாமே நிச்சயமற்றதாக தோன்றும் இந்த நேரத்தில் EB1A ஒரு தெளிவான எதிர்காலத்தை வழங்குகிறது. இந்த எழுச்சி வெறும் விசா பெறுவது பற்றியது மட்டுமல்ல; இது இந்திய திறமையாளர்கள் தங்கள் அரசியல் மற்றும் தொழில் வாழ்க்கையின் மீது முழுமையான கட்டுப்பாட்டை நிலைநாட்ட துடிக்கும் ஒரு வியூகத்தையும் குறிக்கிறது.
டிஜிட்டல் ஊடக துறையில் 15 வருடங்களாக பணிபுரிகிறேன். அனைத்து பிரிவுகளிலும் கட்டுரைகள் எழுதுவேன். செய்திகள், பொழுதுபோக்கு, தொழில்நுட்பம், விளையாட்டு ஆகிய பிரிவுகள் அதிக கட்டுரைகள் எழுதியுள்ளேன்.
