சும்மா பயமுறுத்துறோம்ன்னு நினைச்சியா? ஈரான் அருகே வந்த அமெரிக்க கப்பல் மீது தற்கொலைப்படை தாக்குதல்.. பற்றி எரியும் கச்சா எண்ணெய் கப்பல்.. கப்பலில் இருந்த இந்திய ஊழியர் பலி.. எங்களை மீறி எந்த நாட்டு கப்பல் வந்தாலும் சாம்பல் தான்.. பேச்சுவார்த்தைக்கு வர தயார், ஆனால் எங்களை அடக்கனும்ன்னு நினைச்சா, அமெரிக்கா என்ன அவங்க அப்பனாலும் முடியாது.. ஈரான் ஆவேசம்..

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இந்தியாவிற்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் கோர் அல் சுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான ‘சேஃப்சீ விஷ்ணு’ என்ற கச்சா எண்ணெய் தாங்கி…

ship fire2

மேற்காசியாவில் நிலவி வரும் போர் பதற்றம் தற்போது இந்தியாவிற்கும் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஈராக் நாட்டின் கோர் அல் சுபைர் துறைமுகத்திற்கு அருகே அமெரிக்காவிற்கு சொந்தமான ‘சேஃப்சீ விஷ்ணு’ என்ற கச்சா எண்ணெய் தாங்கி கப்பல் மீது ஈரானின் தற்கொலை படை படகு நடத்திய தாக்குதலில் இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மார்ஷல் தீவுகளின் கொடியுடன் பயணித்த இந்த கப்பல், ஈராக் கடல் எல்லைக்குள் இருந்தபோது இந்த தாக்குதலுக்கு உள்ளானது. உயிரிழந்த இந்தியரை தவிர, கப்பலில் இருந்த மற்ற 27 மாலுமிகள் பத்திரமாக மீட்கப்பட்டு ஈராக்கின் பஸ்ரா நகருக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள சேஃப்சீ கப்பல் நிறுவனம், தனது ஊழியரை இழந்தது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு என்று வருத்தம் தெரிவித்துள்ளது. உலகளாவிய கப்பல் பணியாளர்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமானோர் இந்தியர்களாக இருக்கும் நிலையில், இதுபோன்ற தாக்குதல்களில் அவர்கள் பலியாவது கவலைக்குரிய விஷயமாகும். எனவே, இந்திய அரசு இந்த தாக்குதலை கடுமையாக கண்டிப்பதோடு, அதிக ஆபத்துள்ள கடல் பகுதிகளில் பணியாற்றும் இந்திய மாலுமிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. வரும் காலங்களில் நடக்கும் தாக்குதல்களில் இந்தியர்கள் தேவையற்ற பாதிப்புகளுக்கு உள்ளாவதை தவிர்க்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தாக்குதலுக்கு உள்ளான சேஃப்சீ விஷ்ணு கப்பல் 2007-ஆம் ஆண்டு கட்டப்பட்ட ஒரு பெரிய கச்சா எண்ணெய் தாங்கி கப்பலாகும். சுமார் 228.6 மீட்டர் நீளமும், 32.57 மீட்டர் அகலமும் கொண்ட இந்த கப்பல் 73,976 டன் எடையை சுமந்து செல்லும் திறன் கொண்டது. இவ்வளவு பெரிய கப்பல் மீது நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல், மேற்காசிய கடல் பகுதிகளில் வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதையே காட்டுகிறது. ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் இப்போது வர்த்தக கப்பல்களை குறிவைக்கும் நிலைக்கு சென்றிருப்பது சர்வதேச வர்த்தகத்தை பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்தச் சூழலில் ஈரானிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார். ஈரானின் நியாயமான கோரிக்கைகளை ஏற்பது மட்டுமே இந்த போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான ஒரே வழி என்று அவர் கூறியுள்ளார். ரஷ்யா அதிபர் புதினுடன் பேசிய அவர், பிராந்திய அமைதிக்கு ஈரான் கட்டுப்பட்டிருப்பதாகவும், அதே சமயம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச உத்தரவாதம் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஈரானின் உரிமைகளை ஏற்பதுடன், போரினால் ஏற்பட்ட இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையையும் அவர் முன்வைத்துள்ளார்.

தற்போதைய நிலவரப்படி, மேற்காசிய போர் நிலப்பரப்பில் இருந்து மெல்ல மெல்ல கடல் பகுதிகளுக்கு விரிவடைந்து வருவது உலக நாடுகளுக்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒரு இந்திய மாலுமியின் உயிரிழப்பு, இந்தப் போர் இந்தியாவின் நலன்களையும் நேரடியாக பாதிக்கும் என்பதை உணர்த்துகிறது. எண்ணெய் விலையேற்றம், மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் வர்த்தக தடைகள் என பல முனைகளில் இந்த போர் இந்தியாவிற்கு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால், இந்திய வெளியுறவுத்துறை இந்த விவகாரத்தில் தீவிரமான ராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாகிறது.