முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும்.. கொசுக்களை ஒழிக்க ஆய்வகத்தில் வாரம் 5 லட்சம் கொசுக்கள் உற்பத்தி.. அதன்பின் ட்ரோன்கள் மூலம் வெளியே விடுதல்.. விஞ்ஞானிகளின் வேற லெவல் ஐடியா..!

இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் கொசுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஹவாய் தீவு ஒரு புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளது. விஞ்ஞானிகளின் உதவியுடன், ஹவாய் அரசு வாரந்தோறும் 5 லட்சம்…

mosquitos

இந்தியா உட்பட உலகின் பல நாடுகள் கொசுக்களை ஒழிக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், ஹவாய் தீவு ஒரு புதுமையான அணுகுமுறையை கையாண்டுள்ளது. விஞ்ஞானிகளின் உதவியுடன், ஹவாய் அரசு வாரந்தோறும் 5 லட்சம் ஆண் கொசுக்களை உற்பத்தி செய்து, கொசுக்களை அழிக்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளது. இந்த முயற்சி மிகப்பெரிய பலனை தருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொசுக்களின் அச்சுறுத்தல்: தேன்குருவிகளுக்கு ஏற்பட்ட ஆபத்து

ஹவாய் தீவில் நாளுக்கு நாள் கொசுக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், விலங்குகள், பறவைகள் மற்றும் மனிதர்களுக்கு மலேரியா நோய் பரவி வந்தது. அதுமட்டுமின்றி, அங்குள்ள தேன் குருவிகள் எனப்படும் அரிய வகை பறவை இனங்கள் கொசுக்களால் பரவும் நோய்களால் முற்றிலும் அழிவின் விளிம்பை அடைந்து வந்தன. இதனால், மலேரியா நோயை கட்டுப்படுத்த வேண்டிய அவசரம் அந்நாட்டுக்கு ஏற்பட்டது.

விஞ்ஞானிகளின் தீர்வு: ‘வொல்பாகியா’ பாக்டீரியா திட்டம்

இந்தச் சூழலில், விஞ்ஞானிகள் ஒரு தனித்துவமான தீர்வை கொண்டு வந்தனர். அதன்படி, மனிதர்கள் உட்பட யாரையும் கடிக்காத ஆண் கொசுக்கள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டன. ஒவ்வொரு வாரமும் 5 லட்சம் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட இந்த கடிக்காத ஆண் கொசுக்கள், ‘வொல்பாகியா’ என்ற பாக்டீரியாவை கொண்டிருக்கும்.

இந்த கொசுக்கள் ட்ரோன்கள் மூலம் காட்டுப்பகுதிகளுக்கு அனுப்பப்படுகின்றன. ஆய்வகத்தில் உற்பத்தி செய்யப்பட்ட இந்த கொசுக்கள் காட்டில் உள்ள பெண் கொசுக்களுடன் இனப்பெருக்கம் செய்யும்போது, அவற்றின் முட்டைகளை வொல்பாகியா பாக்டீரியா செயலிழக்க செய்யும் தன்மையை கொண்டுள்ளன. இதனால் கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்படும்.

திட்டத்தின் நோக்கம் மற்றும் உலகளாவிய எதிர்பார்ப்பு

இந்த திட்டத்தின் மூலம், கொசுக்களின் இனப்பெருக்கம் கட்டுப்படுத்தப்பட்டு, ஒரு கட்டத்தில் கொசுக்கள் முற்றிலும் அழிந்துவிடும் வாய்ப்பு உள்ளது. இதன் வழியாக, அழிந்து வரும் தேன் குருவிகள் உட்பட மற்ற பறவைகள், விலங்குகள், மனிதர்கள் ஆகியோர் கொசு தொல்லையிலிருந்து நிரந்தரமாக தப்பிப்பார்கள் என்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்த அரிய வகை தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கொசுக்களின் பரவலை கட்டுப்படுத்தி, அழிவின் விளிம்பில் உள்ள பறவையினங்களை காக்க ஹவாய் அரசு மேற்கொண்டுள்ள இந்தத் தீவிரமான முயற்சிக்கு அந்நாட்டு மக்கள் வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர். இந்த திட்டம் வெற்றியடைந்தால், இந்தியா உட்பட உலகின் அனைத்து நாடுகளும் இதை பின்பற்றலாம் என்று கூறப்பட்டுள்ளது.