தங்க ஆந்தை.. 31 வருசமா நடந்த புதையல் வேட்டை.. 11 புதிர்களால் அடித்த அதிர்ஷ்டம்.. விலை மட்டும் எத்தன கோடி தெரியுமா..

By Ajith V

Published:

கடந்த 31 ஆண்டுகளாக நடந்து வந்த உலகத்தின் பெரிய புதையல் வேட்டை தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பொதுவாக பழைய விஷயங்கள் அல்லது பழைய செய்தி குறிப்புகளைக் கொண்டு ஏதாவது உலகின் மூளை முடுக்கில் இருக்கும் புதையல் அல்லது பொக்கிஷம் தொடர்பான விஷயங்களை தேடிச் செல்வதை புதையல் வேட்டை என குறிப்பிடுவார்கள்.

இப்படி செல்லும் பயணத்தில் ஒருவேளை உண்மையோ அல்லது பொய்யோ கூட இருக்கலாம். ஆனால் அந்த இடத்திற்கு சென்றடையும் போது இதில் உண்மை இருந்தால் அதை சென்று சேர்வதற்கு வாழ்க்கை வாழ்க்கையில் நிச்சயம் மிகப்பெரிய அதிர்ஷ்டம் அளித்துள்ளது என்று தான் அர்த்தம். அப்படி இருக்கையில் தான் கடந்த 31 ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு புதையல் வேட்டையின் தேடல் தொடங்கிய நிலையில் அது தற்போது முடிவுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

ரெஜிஸ் ஹவுஸர் (Regis Hauser) என்ற நபர், கடந்த 1993 ஆம் ஆண்டு ஒரு புத்தகத்தை மேக்ஸ் வேலன்டின் என்ற புனைப்பெயரில் எழுதி வெளியிட்டு இருந்தார். தங்க ஆந்தை என புத்தகத்தின் பெயர் இருந்த நிலையில் இதில் புதையல் வேட்டைக்கான விஷயத்தையும் அவர் குறிப்பிட்டு இருந்தார். பிரெஞ்சு எழுத்தாளரான ரெஜிஸ் ஹவுஸர், தனது நாட்டின் எங்கோ ஒரு பகுதியில் தங்கம் மற்றும் வெள்ளியால் செய்யப்பட்ட ஆந்தை ஒன்றை ஒரு இடத்தில் புதைத்து வைத்து அதனை கண்டுபிடிப்பதற்கான 11 புதிர்களை தனது புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த புத்தகம் மக்கள் மத்தியில் எளிதாக சென்றடைய வேண்டும் என்பதற்காக இந்த முடிவை அவர் எடுத்திருந்த நிலையில், இதற்கான புதிர் தொடர்பான பதில்களை கடந்த 31 ஆண்டுகளாக பலரும் தேடி வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் இந்த புதையல் வேட்டையில் இறங்கி புத்தகத்தை படித்து வந்த நிலையில், ரெஜிஸ் ஹவுஸரும் கடந்த 2009 ஆம் ஆண்டு காலமானார்.

அவருக்கு பின்னர் இந்த விளையாட்டை ரெஜிஸ் ஹவுசருடன் சேர்ந்து உருவாக்கிய ஓவியரான மைக்கேல் பெக்கர் என்பவர் இதனை கண்காணித்து வந்த நிலையில் தற்போது 31 ஆண்டுகள் ஐந்து மாதங்கள் மற்றும் 9 நாட்கள் கழித்து இதற்கான விடையை ஒருவர் கண்டுபிடித்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றது.

புத்தகத்தின் அடிப்படையில் 11 புதிர்களை வைத்து இத்தனை நாட்கள் கழித்து யார் கண்டுபிடித்தார் என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஆனால், அந்த தங்க ஆந்தையின் பிரதி இருந்த இடத்தை ஒருவர் நெருங்கி எடுத்து விட்டதாகவும் தெரிய வந்துள்ளது. பிரதியை கண்டுபிடித்த நபருக்கு நிஜத்தில் தங்கம் மற்றும் வெள்ளியிலாலான ஆந்தை விரைவில் பரிசாக கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

ரெஜிஸ் ஹவுசருக்கே அந்த புதையல் இருக்கும் இடம் மறந்து போனதாகவும் அவரது குடும்பத்தினர் அது தொடர்பான குறிப்பை ஒரு சீல் செய்யப்பட்ட கடிதம் மூலம் பாதுகாத்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தனை நாட்களாக ஒரு புதையல் வேட்டை நடந்து அதற்கான விடையை கண்டுபிடித்தவரை பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் இந்திய மதிப்பில் இந்த தங்க ஆந்தை சுமார் ஒன்றரை கோடி ரூபாய் வரை இருக்கும் என்றும் கருதப்படுகிறது.